துப்பாக்கி வெடிக்கும் சப்தத்துடன் சைலென்சர்... புல்லட்டை பறிமுதல் செய்த போலீசார்!

Written By:

பிறரின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில், வாகனங்களில் வெளிச்சந்தையில் மலிவு விலை ஆக்சஸெரீகளை வாங்கி பொருத்துவதும், மாற்றங்கள் செய்வதும் பேஸனாகிவிட்டது. வெளிச் சந்தையில் ஆக்சஸெரீகளை வாங்கி பொருத்துவதால் பல பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும்.

இதற்கு உதாரணமாக சில நாட்களுக்கு முன் ஒரு சம்பவம் மஹாராஷ்டிராவில் நடந்துள்ளது. துப்பாக்கி வெடிக்கும் சப்தம் வருவது போல சைலென்சர் பொருத்தப்பட்டிருந்த ராயல் என்ஃபீல்டு கிளாசிக் மோட்டார்சைக்கிள் ஒன்றை மஹாராஷ்டிர போலீசார் பறிமுதல் செய்தனர்.

துப்பாக்கி வெடிக்கும் சப்தத்துடன் சைலென்சர்... புல்லட்டை பறிமுதல் செய்த போலீசார்!

மஹாராஷ்டிர மாநிலம், ஜல்கவுன் மாவட்டத்தை சேர்ந்தவர் தனஞ்செய் பாட்டீல். இவர் தனது புல்லட் மோட்டார்சைக்கிளில் ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர் ஒன்றை வாங்கி பொருத்தியிருந்தார்.

துப்பாக்கி வெடிக்கும் சப்தத்துடன் சைலென்சர்... புல்லட்டை பறிமுதல் செய்த போலீசார்!

இந்த சைலென்சரின் சப்தம் மிக அதிகமாக இருந்ததுடன், அவ்வப்போது வேட்டு வெடிப்பது போன்றும் சப்தம் வந்துள்ளது. இதுகுறித்து ஜல்கான் மாவட்ட போலீசாருக்கு தகவல் வந்தது.

துப்பாக்கி வெடிக்கும் சப்தத்துடன் சைலென்சர்... புல்லட்டை பறிமுதல் செய்த போலீசார்!

இதையடுத்து, அந்த மோட்டார்சைக்கிளை பிடித்து போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, அந்த மோட்டார்சைக்கிளின் சைலென்சர் சப்தம் மிக அலாதியாக இருந்ததுடன், வேட்டு வெடிப்பது போல சப்தம் அச்சுறுத்துவதை போலவும், மிக அதிக சப்தமாகவும் இருந்தது.

துப்பாக்கி வெடிக்கும் சப்தத்துடன் சைலென்சர்... புல்லட்டை பறிமுதல் செய்த போலீசார்!

மேலும், அந்த சப்தம் இடையிடையே துப்பாக்கியால் சுடும்போது வரும் சப்தம் போல கேட்டது. இதையடுத்து, இது பொதுமக்களுக்கும், சாலையில் செல்வோருக்கும் பெருத்த அச்சத்தை ஏற்படுத்துவதாக கருதி, அந்த மோட்டார்சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

துப்பாக்கி வெடிக்கும் சப்தத்துடன் சைலென்சர்... புல்லட்டை பறிமுதல் செய்த போலீசார்!

பின்னர், சட்டப்பிரிவு 119[2] மற்றும் 190[2] ஆகியவற்றின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. சைலென்சரை மாற்றிவிடுவதாக தனஞ்செய் பாட்டீல் உறுதி கொடுத்ததையடுத்து, ரூ.1,000 அபராதம் விதித்து பறிமுதல் செய்யப்பட்ட அந்த மோட்டார்சைக்கிளை விடுவித்தனர்.

துப்பாக்கி வெடிக்கும் சப்தத்துடன் சைலென்சர்... புல்லட்டை பறிமுதல் செய்த போலீசார்!

ஆனால் அவரது நண்பருடன் கையில் ஒரிஜினல் சைலென்சரை வைத்துக் கொண்டு அதே துப்பாக்கி சப்தம் தரும் சைலென்சருடன் மோட்டார்சைக்கிளை எடுத்துக் கொண்டு சென்றார் தனஞ்செய்.

துப்பாக்கி வெடிக்கும் சப்தத்துடன் சைலென்சர்... புல்லட்டை பறிமுதல் செய்த போலீசார்!

அவரின் உறுதிமொழியின் பேரில் வண்டி விடுவிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், தனஞ்செய் அந்த பகுதியின் உள்ளூர் அரசியல்வாதியின் மகன் என்றும் தெரியவந்துள்ளது.

துப்பாக்கி வெடிக்கும் சப்தத்துடன் சைலென்சர்... புல்லட்டை பறிமுதல் செய்த போலீசார்!

வெளிச்சந்தையில் கிடைக்கும் மலிவு விலை ஆக்சஸெரீகளை பொருத்துவது வண்டியின் வாரண்டியை பாதிக்கும். அத்துடன், தேவையில்லாத பிரச்னைகளையும் வாகனத்தில் ஏற்படுத்தும். இது சட்டரீதியிலும் பிரச்னையை ஏற்படுத்தும் என்பதை மனதில் வைக்கவும்.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Scary Silencer Sound: Royal Enfield motorcycle seized By Police.

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark