விமானம் ஏற 2 நாளுக்கு முன்னர் வந்த மெயில்! ரூ3.5 லட்சத்தை காரணமே இல்லாமல் இழந்த பயணி! நடந்தது என்ன?

இந்தியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்ய ஷெங்கன் விசாவிற்கு விண்ணப்பம் செய்யும் பலரது விண்ணப்பம் காரணமே இல்லாமல் நிராகரிக்கப்படுவதாக தற்போது டெல்லியை சேர்ந்த ஒருவர் புகார் அளித்துள்ளார். இப்படியாக அவருக்கு காரணமே இல்லாமல் விசா நிராகரிக்கப்பட்டதால் ரூபாய் 3.5 லட்சத்தை இழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட ஷெங்கண் பகுதியை சென்றடைய இந்தியாவிலிருந்து ஷெங்கன் விசாவிற்கு விண்ணப்பம் செய்வார்கள் இப்படியாக விசா விண்ணப்பம் செய்யும்போது அதில் பல்வேறு விதமான விதிமுறைகள் இருக்கிறது. இந்த விதிமுறைகளை பின்பற்றி தான் விசாவிற்கு விண்ணப்பம் செய்ய வேண்டும்.

schengen visa rejection

இந்நிலையில் டில்லியைச் சேர்ந்த யூட்டிலிட்டி ஸ்மால் பைனான்ஸ் வங்கியில் பணியாற்றும் மயங் ஷர்மா என்பவர் கிரீஸ் நாட்டிற்கு பயணம் செய்வதற்காக இந்த ஷெங்கன் விசாவிற்கு அப்ளை செய்திருந்தார். இப்படியாக விசாவிற்கு ஒரு சுற்றுலா பயணி அப்ளே செய்கிறார் என்றால் அங்கு இருக்கும் இடம், எத்தனை நாட்கள் இருக்கப்போகிறார் உள்ளிட்ட பல்வேறு விதமான தகவல்கள் மற்றும் அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இப்படியான ஆவணங்களை சமர்ப்பித்து அவர் விசாவிற்கு விண்ணப்பம் செய்திருந்தார்.

பொதுவாக அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தால் சுற்றுலா பயணிகளுக்கு விசா வழங்கப்பட்டு விடும். ஆனால் மயங்க் ஷர்மாவிற்கு அவர் கிளம்புவதற்கு 7 தினங்களுக்கு முன்னர் விசா நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. மேலும் இந்த விசா நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்கள் எதுவும் தெளிவாக குறிப்பிடவில்லை என கூறப்படுகிறது.

schengen visa rejection

இதனால் அதிர்ச்சிக்குள்ளான மயங்க் ஷர்மா இந்த அனுபவம் குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த பதிவுகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பொதுவாக சுற்றுலா பயணியாக ஷெங்கன் விசாவிற்கு அப்ளை செய்தால் அவர் எந்த நாட்டில் தங்கப் போகிறார்?

தங்குவதற்கான இடத்தை புக் செய்த ஆவணம், அவர் என்று திரும்பி வரப் போகிறார்? திரும்பி வருவதற்கான விமான டிக்கெட் எடுக்கப்பட்ட ஆவணம் மற்றும் அவருக்கு வங்கியில் இருக்கும் கையிருப்பு ஆகியவற்றை வைத்து விசா வழங்கப்படுகிறது. இதனால் மூலம சுற்றுலா பயணிகள் ஷெங்கன் பகுதிமுழுவதும் பயணம் செய்ய முடியும்.

அதே நேரம் இந்தியாவில் அதிக கடன் தொகையில் இருக்கும் ஒருவர் வெளிநாட்டிற்கு பயணம் செய்ய விசா அப்ளை செய்தால், அவருக்கு விசா கிடைப்பது கடினம் தான். இந்நிலையில் இவருக்கு தொழில் கடன் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தனது வங்கியில் 7 இலக்க மதிப்பிற்கு அதிகமான தொகை இருப்பதால் விசா சுலபமாக கிடைத்து விடும் என நினைத்தார்.

ஆனால் கடைசி நேரத்தில் இவருக்கு விசா கேன்சலானதால் இவரால் கிரீஸ் நாட்டிற்கு பயணம் செய்ய முடியவில்லை. அதற்கு பதிலாக தனது டிரிப்பை துருக்கி நாட்டிற்கு மாற்றிவிட்டார். இவர் 7 நாட்கள் விடுமுறைக்காக கிரீஸ் நாட்டிற்கு பயணம் செய்ய நினைத்தார். தற்போது அந்த பயணம் முற்றிலுமாக செய்ய முடியாத காரணத்தால் இவர் இனி அந்த நாட்டிற்கு பயணம் செய்யப் போவதில்லை என முடிவு செய்துள்ளார்.

ஷெங்கன் விசா என்பது 26 ஐரோப்ப நாடுகள் கூடிய பகுதியை ஷெங்கன் விசா என அழைக்கப்படுகிறது. இந்த பகுதியில் விடுமுறையை கொண்டாடுவதற்கான கிரீஸ், ஃபிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இருக்கிறது. இந்த ஒரு விசாரணை எடுத்துக் கொள்வதன் மூலம் இந்த நாடுகளுக்கு சுலபமாக பயணம் செய்ய முடியும்.

ஷெங்கன் நாடுகளில் உள்ள புதிய கட்டுப்பாடுகள் காரணமாக இந்த விசா ரத்து செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. தற்போது தகுதியுடைய இந்தியர்கள் மட்டும் பல்வேறு முறை ஷெங்கன் பகுதிக்கு வந்து செல்ல அனுமதிக்க வேண்டும் எனவும் குறுகிய கால பயணிகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது எனவும் வாய்மொழியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அதிகமான விசா ரத்து செய்யப்படுவதாக தெரிகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒரு நாட்டிற்கு சுற்றுலா பயணி வருகிறார் என்றால் அது அவர் அந்த நாட்டில் செலவு செய்யும் பணம் என்பது அந்த நாட்டுக்கான வருமானம் அந்த நாட்டில் உள்ள மக்களுக்கான வருமானமாக தான் இருக்கும் அதனால் அந்த நாட்டிற்கு பெரிய இழப்புகள் எதுவும் ஏற்படாது. இதை கருத்தில் கொண்டு உலக நாடுகள் இப்படியாக சுற்றுலா வரும் பயணிகளுக்கு விசா கெடுபிடிகளை குறைக்க வேண்டும் என பல எதிர்பார்க்கிறார்கள்.

More from DriveSpark

Article Published On: Friday, May 3, 2024, 12:35 [IST]
English summary
Schengen visa rejection delhi man loses 3 5 lakh greece holiday
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+