அரசு பள்ளி மாணவிகள் அடித்து நொறுக்கிய கார் அவரோடதா! வீடியோவை பாத்ததும் தூக்கி வாரி போட்றுச்சு!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மஹிந்திரா ஸ்கார்பியோ (Mahindra Scorpio). இது எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்தியாவின் அரசு துறைகள் பலவற்றிலும், மஹிந்திரா ஸ்கார்பியோ காரின் பயன்பாடு மிகவும் அதிகமாக இருந்து வருகிறது.

இதில் கல்வி துறையும் ஒன்றாகும். ஆனால் கல்வி துறையை சேர்ந்த ஒரு அதிகாரியின் மஹிந்திரா ஸ்கார்பியோ கார், தற்போது பயங்கரமாக சேதப்படுத்தப்பட்டுள்ளது. கல்வி துறை அதிகாரியின் மஹிந்திரா ஸ்கார்பியோ காரை சேதப்படுத்தியது ரவுடிகளோ அல்லது குற்றவாளிகளோ அல்ல. பள்ளி மாணவிகள்! ஆம், மாணவிகள்தான்!

School Girls Destroy Mahindra Scorpio

பீஹார் மாநிலம் வைசாலி மாவட்டத்தில் உள்ளது மன்ஹர். இங்கு அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. ஆனால் இங்கு அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லை என கூறப்படுகிறது. இதை கண்டித்து சமீபத்தில் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல் துறையை சேர்ந்த பெண் அதிகாரி ஒருவர், மாணவிகளை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த மாணவிகள், அங்கு நின்று கொண்டிருந்த கல்வி துறை அதிகாரியின் மஹிந்திரா ஸ்கார்பியோ காரை அடித்து நொறுக்கினர். பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தின் வைரல் வீடியோ (Viral Video), சமூக வலை தளங்களில் காட்டு தீ போல் பரவி வருகிறது.

பள்ளி சீருடையில் மாணவிகள், கல்வி துறை அதிகாரியின் மஹிந்திரா ஸ்கார்பியோ காரை அடித்து நொறுக்கும் காட்சிகள், சமூக வலை தளங்களில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஒரு தரப்பினர் மாணவிகளின் இந்த செயலை ஆதரிக்கின்றனர். மறுபக்கம் இன்னொரு தரப்பினர் இது தவறு என்கின்றனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாணவிகளின் இந்த செயலை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் ஆதரிக்கவில்லை. எந்தவொரு பிரச்னைக்கும் வன்முறை தீர்வாகாது. நியாயமான கோரிக்கைகளை அமைதியான முறையில் நிறைவேற்றி கொள்வதுதான் அனைவருக்குமே நன்மை பயக்க கூடிய விஷயமாக இருக்கும் என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கருதுகிறது.

ஆனால் இந்தியாவில் அரசுக்கு சொந்தமான பொது சொத்துக்கள் சேதப்படுத்தப்படுவது இது முதல் முறையல்ல. கடந்த காலங்களில் மக்கள் போராட்டங்களின்போது, பஸ்கள், கார்கள் மற்றும் ரயில்கள் போன்ற வாகனங்கள் சேதமாக்கப்பட்டுள்ளன. இதனால் யாருக்கும் எந்த பலனும் ஏற்பட போவதில்லை என்பதை அனைவரும் உணர வேண்டும்.

ஒரு பொருளை அழிப்பது கடினம். ஆனால் அதனை உருவாக்குவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. எனவே போராட்டங்களின்போது அரசு மற்றும் தனியார் வாகனங்கள் போன்றவற்றை சேதப்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. இல்லாவிட்டால் காவல் துறையின் நடவடிக்கைக்கு ஆளாக நேரிடலாம் என்பதை அனைவரும் உணர வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Friday, September 15, 2023, 23:44 [IST]
English summary
School girls destroy mahindra scorpio viral video all details here
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+