பெற்றோர் கையில்தான் எல்லாமே இருக்கு! மற்ற வாகன ஓட்டிகளுக்கு உயிர் பயத்தை காட்டிய சிறுமி!!

18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் வாகனங்களை ஓட்டுவதும் சாலை விபத்துகளுக்கு காரணங்களுள் ஒன்றாக உள்ளது. 18 வயதுக்கு 1 வயது கீழ் உள்ளவர்களே 2-வீலர்களை ஓட்டுவது சட்டத்திற்கு புறம்பானதாக இருக்கும் நிலையில், இளம் பள்ளி பருவ சிறுமி ஒருவர் சாலையில் ஸ்கூட்டரை ஓட்டி சென்றுள்ளார். இதில் கொடுமை என்னவென்றால், சிறுமி ஸ்கூட்டரை ஓட்ட, அவருக்கு பின்னால் நடுத்தர வயதுமிக்க ஆண் ஒருவர் அமர்ந்து சென்றுள்ளார். இது தொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

சாலை விபத்துகள் அதிகம் நடைபெறும் நாடுகளுள் ஒன்றாக நம் இந்தியாவும் உள்ளது. நாள்தோறும் செய்திகளில் நாம் பார்க்கும் சாலை விபத்துகளின் எண்ணிக்கை தான் அதற்கு சாட்சியாகும். சாலை விபத்துகளுக்கு பல்வேறு காரணங்களை தெரிவிக்கலாம். தரமான சாலை வசதி இல்லை, அதிவேக பயணம், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது என சொல்லிக் கொண்டே போகலாம்.

schoolgirl rides scooter on road

அந்த வரிசையில், குறை வயதுடையவர்கள் வாகனங்களை ஓட்டுவதும் காரணமாக உள்ளது. இரு சக்கர வாகனங்களை ஓட்டுவதற்கு குறைந்தப்பட்ச வயது 18 ஆகும். அதுவரையில் கூட பொறுத்திருக்க முடியாத சில இளம் தலைமுறையினர் 2-வீலர்களில் பறப்பதை பரவலாக பார்க்க முடியும். நீங்கள் வேண்டுமாயின் கவனமாக பாருங்கள்... சாலையில் அதிவேகமாக 2-வீலர்களில் செல்வது பெரும்பாலும் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களாகவே இருப்பர்.

ஏனெனில், இளம் வயதில் மனிதனுக்கு இருக்கும் மனநிலை அப்படிப்பட்டது. அதற்காக தான் 2-வீலர் ஓட்டுவதற்கு குறைந்தப்பட்ச வயது வரம்பாக 18 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி சிலர் இளைஞர்கள் பெற்றோர்களுக்கு தெரியாமல், 2-வீலர்களை பயன்படுத்துகின்றனர். ஆனால், இங்கு ஒருவர் பள்ளி பருவ சிறுமியை ஸ்கூட்டர் ஓட்ட அனுமதித்ததுடன், ஸ்கூட்டரில் பின்னால் அமர்ந்து பயணம் செய்துள்ளார்.

schoolgirl rides scooter on road

பள்ளியில் 4 அல்லது 5ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை போல் இருக்கும் இந்த சிறுமி பள்ளி உடையில் ஸ்கூட்டரை பொது சாலையில் ஓட்டி சென்றுள்ளார். இந்த சிறுமிக்கு 10 வயது கடந்திருக்குமா என்பதே சந்தேகம் தான். இந்த சம்பவத்தை வேறொரு வாகனத்தில் இருந்தவர்கள் தங்களது மொபைல் போனில் காட்சிப்படுத்தி இணையத்தில் வெளியிட, அது தற்போது வைரலாகி வருகிறது.

தான் செய்யும் தவறை கொஞ்சம் கூட உணராமல், வீடியோ எடுப்பதை பார்த்ததும் ஸ்கூட்டரில் பின்னால் அமர்ந்திருக்கும் நபர் கேமராவுக்கு டாடா காட்டியுள்ளார். மேலும், ஸ்கூட்டரில் செல்லும் இருவரும் ஹெல்மெட் அணிந்திருக்கவில்லை. ஆதலால், சிறுமி ஸ்கூட்டரின் பேலன்ஸை கொஞ்சம் இழந்தால் கூட பெரிய விபத்தில் சென்று முடிவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

schoolgirl rides scooter on road

இந்தியாவில் நடந்துள்ள இந்த சம்பவம் சரியாக எந்த பகுதியில் நடந்தது என்பது தெரியவில்லை. இந்த சம்பவத்தில் டிவிஎஸ் ஜூபிட்டர் ஸ்கூட்டரை பார்த்தீர்கள் என்றால், ஸ்கூட்டரில் நம்பர் பிளேட் இல்லை. ஏனெனில், இது ஒரு புத்தம் புதிய டிவிஎஸ் ஜூபிட்டர் ஸ்கூட்டர் ஆகும். இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் ஸ்கூட்டர்களுள் ஒன்றாக இது விளங்குகிறது.

115சிசி மற்றும் 125சிசி என இரு விதமான என்ஜின் ஆப்ஷன்களில் ஜூபிட்டர் ஸ்கூட்டர் கிடைக்கிறது. இதில் 125சிசி ஸ்கூட்டரை இந்த சம்பவத்தில் பயன்படுத்தி உள்ளனர். 115சிசி ஜூபிட்டர் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.78,502இல் இருந்தும், 125சிசி ஜூபிட்டர் ஸ்கூட்டரின் விலைகள் ரூ.88,174இல் இருந்தும் துவங்குகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் தரமான ஸ்கூட்டர்களுள் ஒன்றாக ஜூபிட்டரை சொல்லலாம். எவ்வளவு தரமானதாக இருப்பினும், பள்ளி படிப்பின் துவக்கத்தில் இருக்கும் சிறுமி அதனை ஓட்டுவது ஏற்கக்கூடியது அல்ல. இவ்வாறான செயல்கள் சாலையில் செல்லும் மற்றவர்களுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். வீடியோவை வைத்து சம்பந்தப்பட்டவர்களை போலீசார் அடையாளம் கண்டிருப்பர் என நம்புகிறோம்.

More from DriveSpark

Article Published On: Thursday, October 24, 2024, 17:28 [IST]
English summary
Schoolgirl rides scooter on public road with middle age man check all details here
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X