பெட்ரோல், பால் ஏற்றி செல்லும் லாரி டேங்கர் மட்டும் ஏன் வட்டமா இருக்கு தெரியுமா?

தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும்போது அடிக்கடி லாரிகள் செல்வதை பார்த்திருப்போம். லாரிகள் சரக்குகளை ஏற்றிக்கொண்டு ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு வேகமாக சென்று கொண்டிருக்கும். சரக்குகளை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு நகர்த்துவதால் தான் இந்திய பொருளாதாரமே வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்நிலையில் இந்த லாரிகள் குறித்த ஒரு சுவாரசியமான தகவலை தான் இங்கே நாம் காண போகிறோம்.

நாம் பார்க்கும் போது ஒவ்வொரு லாரியும் ஒவ்வொரு விதமான வடிவமைப்பில் இருக்கும். சில லாரிகள் பின்பக்கம் சரக்குகளை ஏற்றி தார்ப்பாயை கொண்டு மூடிக்கொண்டு பயணிப்பார்கள். சிலர் அருகில் பின்பக்கம் முழுவதும் மூடப்பட்டதாக இருக்கும். பெட்ரோல் உள்ளிட்ட தண்ணீர் போன்ற பொருட்களை எடுத்துச் செல்லும் லாரிகள் எல்லாம் பின்பக்கம் வித்தியாசமாக வட்ட வடிவில் இருக்கும்.

Science Behind Circular Tanker

மற்ற லாரிகள் எதுவும் இப்படியான வட்ட வடிவில் இருக்கா.து சதுரம் அல்லது செவ்வக வடிவில் தான் இருக்கும். இப்படியாக பெட்ரோல் உள்ளிட்ட திரவ பொருட்களை ஏற்றி சொல்லும் லாரிகள் மட்டும் ஏன் வட்ட வடிவில் இருக்கிறது என என்றாவது யோசித்திருக்கிறீர்களா? இதற்கு பின்னால் மிகப்பெரிய அறிவியல் காரணம் இருக்கிறது. இந்த வடிவமைப்பு தான் அந்த லாரியையே பாதுகாக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?

ஆம் இது எல்லாம் உண்மைதான். பொதுவாக ஒரு திடப்பொருளை லாரிக்குள் ஏற்றி வைக்க வேண்டும் என்றால் அது சதுர அல்லது செவ்வக வடிவில் இருந்தால்தான் அதன் உள்ளே அதிகமான பொருட்களை எடுத்துச் செல்ல முடியும். இதனால் எரிபொருள் மிச்சமாகும் என்பதற்காக இதை சதுர வடிவிலோ அல்லது செவ்வக வடிவிலோ வடிவமைத்திருப்பார்கள். ஆனால் திரவப் பொருட்களை ஏற்றி செல்லும் லாரிகள் அப்படியாக இருக்காது.

Science Behind Circular Tanker

திரவ பொருட்களை ஏற்றி செல்லும் லாரி டேங்கர்கள் மொத்தம் நான்கு விதமான வடிவமைப்புகளில் திரவப் பொருட்களை ஏற்றி செல்லும் லாரிகளாக இருக்கும். வட்ட வடிவம் நீள் வட்ட வடிவம், டபுள் டி போன்ற வடிவம், மேல்புறம் நீட்டிக்கப்பட்ட வடிவம், ஆகிய வடிவமைப்புகளில் திரவம் பொருட்களை ஏற்றி செல்லும் லாரிகள் வடிவமைக்கப்படுகின்றன.

வட்டமான வடிவம் என்பது ஒரு சிலிண்டர் போல அமைப்பை கொண்டிருக்கும். நீள் வட்டம் என்பது மேல்புறம் மற்றும் சற்று உயரமாக இருக்கும். டபுள் டி என்பது பக்கவாட்டில் அகலமாகவும் உயரம் குறைவாகவும் இருக்கும். நீட்டிக்கப்பட்ட மேல் பாகம் என்றால் மேல் பாகம் மட்டும் தட்டையாக இருக்கும்.

Science Behind Circular Tanker

திரவ பொருட்களை ஏன் சதுரம் மற்றும் செவ்வக வடிவிலான வடிவமைப்பு கொண்ட டேங்கர்களின் நிரப்பி இழப்புச் செல்லாமல் மேலே குறிப்பிட்டுள்ள நான்கு வகையான வாகனங்களில் ஏற்றி செல்கிறார்கள் என்றால் அதற்கு பின்னால் ஒரு அறிவியல் காரணம் இருக்கிறது. அதாவது ஒரு வாகனம் பயணிக்கும் போது சாலையில் பல்வேறு விதமான சிக்கல்களை சந்திக்க வேண்டும். மேடு பள்ளங்கள் ஏற்ற இறக்கம் வேகத்தடை உள்ளிட்ட விஷயங்களை எல்லாம் கடந்து செல்ல வேண்டும்.

இப்படியாக வாகனங்கள் காடுமுரடான பாதையில் செல்லும்போது வாகனத்தின் பின்னால் உள்ள டேங்கில் இருக்கும். திரவப் பொருள் வாகனத்தின் அசைவுக்கு ஏற்ப அசைந்தாடும். இந்த நேரங்களில் வாகனம் திரும்பும் போதோ அல்லது பள்ளமேட்டில் ஏறும்போது திரவப் பொருட்கள் எல்லாம் ஒரே இடத்தில் வந்து குவிந்து விட்டால் அதிக எடை காரணமாக வாகனம் கவிழ்ந்து விட வாய்ப்பு இருக்கிறது.

Science Behind Circular Tanker

இதனால் மேலே குறிப்பிட்ட நான்கு வடிவத்தில் ஏதோ ஒரு வடிவம் அமைப்பில் டேங்கை வடிவமைத்தால் வாகனம் எப்படி சென்றாலும் அதிகமான எடை கொண்ட திரவப்பொருள் மத்திய பகுதியிலேயே தான் இருக்கும் இதனால் வாகனம் பள்ளமேடுகளில் செல்லும்போது கவிழ்ந்து போக வாய்ப்பு ஏற்படாது. நான் பாதுகாப்பான பயணம் உறுதி செய்யப்படும்.

இதன் காரணமாகவே பெட்ரோல், பால், எரிபொருள் உள்ளிட்ட திரவ வடிவிலான சரக்குகளை இப்படியான வட்ட வடிவ டேங்கர்களைக் கொண்டே ஏற்றி செல்கின்றனர். இதற்குப் பின்னால் உள்ள அறிவியல் காரணம் இதுதான். பலருக்கும் இது தெரியவில்லை பலர் இப்படியான லாரிகளை பார்த்திருந்தாலும் இதற்கு பின்னால் உள்ள அறிவியல் என்ன என தெரியாமல் இருப்பார்கள் அவர்களுக்காகவே இந்த பதிவை நாங்கள் உங்களுக்காக வழங்கியுள்ளோம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள அனைத்து நாடுகளிலும் இப்படியான திரவ வடிவிலான சரக்குகளை ஏற்றி செல்ல இது போன்ற வட்ட வடிவிலான லாரிகளே பயன்படுத்துகிறார்கள். சதுரம் மற்றும் செவ்வக வடிவில் லாரிகளை பயன்படுத்தினால் அது விபத்து ஏற்பட அதிகமான வாய்ப்புகள் உள்ளது. இனி நீங்கள் சாலையில் செல்லும் போது இப்படியான லாரிகளை பார்த்தால் இந்த விஷயத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 17, 2024, 18:43 [IST]
English summary
Science behind circular tanker petrol tankers shape
மேலும்... #எப்படி #how to
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X