இந்த கலர் கார் தான் அதிக மைலேஜ் தரும் நீங்களே டெஸ்ட் பண்ணி பாருங்க!
நீங்கள் ஒரு காரை வாங்க வேண்டும் என் முடிவு செய்தால் முதலில் மாடலை தேர்வு செய்வீர்கள், அதன் பிறகு அதன் வசதிகள், மற்றும் அம்சங்களை வைத்து நீங்கள் வேரியன்டை தேர்வு செய்வீர்கள் இறுதியாக நீங்கள் தேர்வு செய்வது காரின் கலர் தான். கார் கலரை தேர்வு செய்வதற்கு முன்பு அதன் பின்னால் உள்ள அறிவியல் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
லைட் ஷெடு கலரில் உள்ள கார்கள் அதாவது வெள்ளை, சில்வர் உள்ளிட்ட நிறங்கள் சூரிய ஒளியை அதிகம் வெளியே பிரதிபலிக்கும். இதனால் வாகனம் வெயில் காலத்திலும் சற்று குளுமையாக இருக்கும். ஆனால் டார்க் நிறங்களான நீளம், கருப்பு, உள்ளிட்ட கலர்களில் கார் வாங்கினால் அது சூரிய ஒளியை அதிகம் உள்வாங்கும். இதனால் கார் வெயில் காலங்களில் அதிகம் சூடாக இருக்கும்.

இப்படியாக கார்கள் வெப்பமாக இருப்பது நேரடியாக காரின் மைலேஜை பாதிக்கும். உதாரணமாக காரின் அதிக வெப்பமாக இருந்தால் நீங்கள் காரில் ஏசி பயன்படுத்தும் போது அதிகம் பயன்படுத்த வேண்டியது இருக்கும். இதனால் வழக்கத்தை விட அதிக ஏசி பயன்பாடு காரணமாக மைலேஜ் குறையும். அதே நேரம் கார் குளுமையாக இருந்தால் ஏசி பயன்பாடு குறைந்து மைலேஜ் அதிகமாகும்.
இது மட்டுமல்ல காரின் கலர் அதிகம் ஃபேடாகும் திறனையும் பாதிக்கும். பொதுவாக காரை அதிகம் பயன்படுத்த பயன்படுத்த சூரியிலிருந்து வெளியாகும் யூவி கதிர்கள் நேரடியாக காரின் மீது உள்ள பெயிண்டை பாதிக்கிறது இது நாளடைவில் கெமிக்கல் ரியாக்ஷன் ஏற்பட்டு ஃபேடாக துவங்கும். பிரைட் நிறங்களான சிவப்பு, நீளம் போன்ற கலர்கள் விரைவாக ஃபேடாகிவிடும். அதே நேரம் வெள்ளை, கிரே, சில்வர் போன்ற நிறங்கள் மெதுவாக ஃபேடாகும் என அறிவியல் கூறுகிறது.

அப்படி பார்த்தால் டார்க் கலர் காரையே வாங்க முடியாதே என் நீங்கள் நினைக்கலாம். ஆனால் அதற்கு மாற்று வழி இருக்கிறது. உங்களுக்க டார்க் கலர் கார் பிடிக்கிறது அதை வாங்க வேண்டும் ஆனால் மேலே சொல்லப்பட்ட பிரச்சனைகள் வரக்கூடாது என நீங்கள் நினைத்தால் அதற்கான ஸ்பெஷல் கோட்டிங்கள் இருக்கிறது.
காருக்கு வெளியே கலர் மீது அந்த கோட்டாங்கை பூசிவிட்டால் அது நேரடியாக சூரிய யூவி கதிர்களை காரின் கலரை பாதிக்க விடாது. மேலும் கலர் பெயிண்ட் நேரடியாக கருப்பு நிறத்தின் மீது பட்டால் மட்டுமே வெப்பம் உள்ளே இழுக்கப்படும் மேலே உள்ள பூச்சு வெயிலின் வெப்பத்தை லைட் கலர் காரை போல வெளியே தள்ளும் திறன் கொண்டதாக இருகு்கும்.

இந்த கோட்டிங்கிற்கு பெயர் தான் செராமிக் கோட்டிங் இது காரின் பெயிண்டை பாதுகாக்கவே சிறப்பாக உருவாக்கப்பட்ட தொழிற்நுட்பம் புதிய காரை வாங்கியதும் பலர் காரின் கலரை பாதுகாக்க செராமிக் கோட்டிங்கை பூசுவார்ககள். இதற்கு கொஞ்ம் செலவாகும்ஆனால் நீண்ட காலத்திற்கு காரின் கலர் பாதிக்காமல் இருக்கும். அதே நேரம் பெயிண்ட் புரோடெக்ஷன் ஃபிலிம்கள் இருக்கிறது. ஆனால் இது செராமிக் கோட்டிங் அளவிற்கு நன்மையை தராது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: காரின் கலருக்கு பின்னால் உள்ள அறிவியல் குறித்து பலருக்கும் தெரியாமல் இருக்கிறது. காரின் கலரை தேர்வு செய்யும் போது இதையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இது நிச்சயம் வாகனத்தை நீண்ட காலம் பயன்படுத்தும்போது உதவியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications









