அடுத்தடுத்து போட்டா பல பிரச்சனைகள் இருக்கு! ரன்வேக்கள் குறுக்க மறுக்க அமைக்கப்படுவதற்கு இதான் உண்மையான காரணம்
விமான நிலையத்தில் ரன்வேகள் ஒன்றுக்கும் மேற்பட்ட ரன்வேக்களை அமைக்கும் போது ஒன்றோரு ஒன்று இணைந்திருக்கும் படி அமைப்பார்கள். ஏன் அப்படி அமைக்கப்படுகிறது அதற்குப் பின்னால் உள்ள அறிவியல் காரணம் என்ன? முழு விபரங்களைக் காணலாம்.

போக்குவரத்திலேயே மிகவும் காஸ்ட்லியான போக்குவரத்து விமான போக்குவரத்து தான். இந்த உலகில் விமானத்தில் பறக்க வேண்டும் என்பது இன்றும் பலரின் வாழ்நாள் கனவாக இருக்கிறது. விமான போக்குவரத்து என்றால் அது சாதாரணம் இல்லை அதற்குப் பின்னால் பலவிஷயங்கள் இருக்கிறது. பல அறிவியல் ஒளிந்திருக்கிறது.

பொதுவாக விமான நிலையத்தை நீங்கள் 2 ஆகப் பிரிக்கலாம். பயணிகளை விமானத்தில் ஏற்றும் இடம் ரன் வே இவை இரண்டும் வேறு வேறாகச் செயல்படும். பயணிகள் ஏறும் இடத்தில் விமானம் நிறுத்தப்படும் அங்கு பல்வேறு சோதனைக்குப் பிறகு பயணிகள் விமானத்திற்குள் அனுமதிக்கப்படுவர். அங்குப் பயணிகள் ஏறி முடித்த பிறகு விமானம் புறப்படுவதற்காகத் தயார் செய்யப்படும்.

விமானம் புறப்படுவதற்குத் தயார் ஆனதும் விமானம் டாக்ஸி வே வழியாக ரன் வேக்கு கொண்டு வரப்படும். ரன்வேக்கு விமானம் வந்ததும் அதற்கான அனுமதி கிடைத்தவுடன் விமானம் ரன்வேயில் வேகமாகச் சென்று பறக்கத் துவங்கும். பலர் விமான நிலையங்களில் ஒரு ரன் வே மட்டுமே இருக்கும் என நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் பல விமான நிலையங்களில் ஒன்றிற்கும் மேற்பட்ட ரன்வேக்கள் எல்லாம் இருக்கிறது.

இப்படியாக ஒன்றிற்கும் மேற்பட்ட ரன்வேகளை கட்டமைப்பதில் விமான நிலையங்கள் சில அறிவியல் யுக்திகளைப் பயன்படுத்துகின்றன. பொதுவாக 2 விதமாக ரன்வேக்கள் உருவாக்கப்படும் ஒன்று பேரலல் ரன்வே அதாவது முதல் ரன்வே எந்த திசையைப் பார்த்து இருக்கிறதோ அதே போல அடுத்த ரன் வே அதற்கு அடுத்ததாக அமைக்கப்படும்.

மற்றொன்று இன்டர்செக்டிங் ரன்வே முதல் ரன்வே இருக்கும் திசைக்கு எதிர்மாறாக அதாவது முதல் ரன்வே கிழக்கு மேற்காக இருந்தால் இந்த ரன்வே தெற்கு வடக்காக அமைக்கப்படும். இந்த ரன்வே தான் இன்டர்செக்டிங் ரன்வே என அழைக்கிறார்கள். இதில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் இப்படியாக இன்டர்செக்டிங் ரன்வேக்கள் ஒன்றோடு ஒன்று ஏதாவது வகையில் இணைந்தபடி அமைக்கப்பட்டிருக்கும். அதனால் தான் அதன் பெயர் இன்டர்செக்டிங் ரன்வே

இப்பொழுது உங்களுக்கு ஒரு குழப்பம் ஏற்படலாம். இப்படியாக இணைக்கும்படி ரன்வேக்கள் அமைக்கப்பட்டால் ஒரே நேரத்தில் இரண்டு விமானங்கள் தரையிறங்கவே அல்லது டேக் ஆஃப் செய்யவே முடியாதா? அப்படி நடந்தால் விபத்து ஏற்பட்டுவிடாத என உங்களுக்குத் தோன்றலாம்.

உண்மையில் அப்படி ஒரு பிரச்சனை இருக்கிறது. பொதுவாக இன்டர்செக்டிக் ரன்வேயில் ஒரு நேரத்தில் ஒரு விமானம் மட்டுமே கையாளப்படும். இதனால் இந்த பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இல்லை. ஒரு நேரத்தில் ஒரு விமானம் தான் கையாளப்படும் என்றால் ஏன் இந்த இரண்டாவது ரன்வே என உங்களுக்கு அடுத்த கேள்வி வரலாம். அதற்கும் ஆயிரம் காரணம் இருக்கிறது.

பொதுவாக இரண்டு ரன்வேக்கள் அமைக்கப்படுவதற்கு இரண்டு காரணம் இருக்கிறது. அதிகமான விமானத்தைக் கையாள்வது மட்டும் தான் குறிக்கோள் என்றால் பேரலல் ரன்வேயை உருவாக்கப்படும். ஆனால் அது மட்டுமல்ல கிராஸ் விண்ட் பிரச்சனைக்காகவும் இரண்டாவது ரன்வே உருவாக்கப்படுகிறது.

அது என்ன கிராஸ் விண்ட் பிரச்சனை எனக் கேட்கிறீர்களா? இதோ அதைப் பற்றி விரிவாகக் காணலாம். பொதுவாக விமானம் தரையிறங்கும் போதும் விமானம் டேக் ஆஃப் ஆகும் போதும் காற்று அடிக்கும் திசை மற்றும் அதன் அழுத்தம் குறித்த கணக்கிடப்படும். அது விமானத்திற்கு ஆபத்து ஏற்படுத்ததவாரு இருந்தால் மட்டுமே விமானம் டேக் ஆஃப் மற்றும் லேண்டிங்கிற்கு அனுமதி வழங்கப்படும்.

இப்படியா நேரங்களில் விமானத்திற்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் அடிக்கும் காற்று தான் கிராஸ் விண்ட் எனப்படும். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் ஒரு விமான நிலையத்தில் கிழக்கு மேற்காக ஒரு ரன்வே இருக்கிறது என வைத்துக்கொள்வோம். அப்பொழுது காற்று தெற்கிலிருந்து வடக்கோ அல்லது வடக்கிலிருந்து தெற்கு நோக்கியோ அதிகமாக அடித்தால் விமானத்தைத் தரையிறக்கும் போதும் டேக் ஆஃப் ஆகும் போதும் விமானம் தள்ளாடும்.

ஆனால் காற்றடிக்கும் திசையிலோ அதற்கு எதிர்த்திசையிலோ விமானத்தைத் தரையிறக்குவதும், டேக் ஆஃப் செய்வதும் சுலபம் இப்படியான நேரங்களில் விமானங்களைப் பாதுகாப்பாகத் தரையிறக்கவே குறுக்காக அதாவது இன்டர்செக்டிங்காக ரன்வேக்கள் அமைக்கப்படுகிறது. அதனால் காற்று எந்த திசையில் அடிக்கிறதோ அதைப் பார்த்து விட்டு அதற்குத் தகுந்தார் போல ரன்வே தேர்வு செய்யப்படும்.

இதற்குள் இன்டர்செக்டிங் என்ற விஷயம் வருவதற்குப் பின்னாலும் ஒரு காரணம் இருக்கிறது. பொதுவாக ஒரு ரன்வே அமைக்கப்பட வேண்டும் என்றால் அந்த ரன்வேக்கு விமான நிலையத்தில் பயணிகளை ஏற்றும் எல்லா பகுதிகளிலிருந்தும் இணைக்கும் வகையில் டாக்ஸி வே அமைக்கப்பட வேண்டும். தனித்தனியாக ரன்வே அமைக்கப்பட்டால் தனித்தனி டாக்ஸி வே அமைக்கப்பட வேண்டும்.

அதனால் ஒன்றோடு ஒன்று இணைந்தபடி அமைந்தால் ஒரே டாக்ஸி வே மூலம் இரண்டு ரன்வேகளையும் இணைக்க முடியும் என்பதால் இப்படியாக வடிவமைக்கின்றனர். இப்படியாக உலகில் ஒன்று இரண்டு மட்டுமல்ல 4-5 ரன்வேக்களை கொண்ட விமான நிலையங்கள் எல்லாம் இருக்கிறது.


Click it and Unblock the Notifications








