பஸ்-லாரிக்கு இடையில் கசங்க போன 2 இளம்பெண்கள்! இளகன மனசு உள்ளவங்க தயவு செஞ்சு இந்த வீடியோவை பாக்காதீங்க!
இந்தியாவில் சாலைகள் மோசமாக இருப்பதுடன், பெரும்பாலான வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற மறுப்பதால், ஏராளமான சாலை விபத்துக்கள் நடைபெற்று வருகின்றன. இதில் ஒரு சில விபத்துக்களின் வீடியோ வெளியாகி காண்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி விடுகின்றன. இந்த வரிசையில் ஒரு வைரல் வீடியோ (Viral Video) தற்போது காட்டுத்தீ போல பரவி வருகிறது.
ஸ்கூட்டரில் வந்த 2 இளம்பெண்கள், லாரி மற்றும் பஸ்சுக்கு நடுவில் சிக்குவதில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்புவதை இந்த வீடியோவில் நம்மால் காண முடிகிறது. கேரளாவின் கோழிக்கோடு பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பஸ்சுக்கு வெளியே பொருத்தப்பட்டிருந்த கேமராவில், இந்த விபத்தின் காட்சிகள் பதிவாகியுள்ளன.

இந்த வீடியோவில் பஸ் ஒன்று, மிகவும் குறுகலான சாலையில் பயணம் செய்து கொண்டிருப்பதை நாம் காணலாம். அதை தொடர்ந்து ஒரு ஸ்கூட்டரில் 2 இளம்பெண்கள் மிகவும் நெருக்கமாக வந்து கொண்டுள்ளனர். அப்போது பஸ்ஸை ஓவர்டேக் செய்ய, அந்த ஸ்கூட்டரை ஓட்டி வந்த இளம்பெண் முடிவு செய்தார்.
ஆனால் எதிர் திசையில் என்ன வாகனங்கள் எல்லாம் வருகிறது? என்பதை அவர் கவனிக்கவில்லை. முக்கியமான இந்த விஷயத்தை கவனிக்காமலேயே அந்த இளம்பெண் பஸ்ஸை ஓவர்டேக் செய்யும் வகையில் ஸ்கூட்டரை ஓட்ட தொடங்கினார். அப்போது எதிர் திசையில் திடீரென லாரி ஒன்று வந்தது.

இதனால் அந்த 2 இளம்பெண்களும் அலற தொடங்கி விட்டனர். இதற்கிடையே கண்ணிமைக்கும் நேரத்தில், லாரி மற்றும் பஸ்சுக்கு இடையில் ஸ்கூட்டர் சிக்கி கீழே விழுந்தது. இதனால் அதில் பயணம் செய்த 2 இளம்பெண்களும் கீழே விழுந்து விட்டனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர்கள் இருவரும் லாரி மற்றும் பஸ்சுக்கு இடையில் சிக்கி நசுங்கவில்லை.
கீழே விழுந்த உடனேயே எழுந்து விட்டனர். இங்கே கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் இருக்கிறது. விபத்து நடைபெற்ற உடன், ஸ்கூட்டரை ஓட்டி வந்த பெண் அணிந்திருந்த ஹெல்மெட் தனியாக கழன்று விழுந்தது. அவர் ஹெல்மெட்டை சரியாக அணியவில்லை என்பதை இதன் மூலமாக புரிந்து கொள்ளலாம்.
நம்மில் பலரும் இந்த தவறை செய்கிறோம். தலையில் ஹெல்மெட் இருந்தால் போதும் மட்டும் என்று நினைக்கிறோம். ஆனால் ஹெல்மெட் முறையாக அணியப்பட்டிருக்க வேண்டும். அப்போதுதான் விபத்தின்போது நமது உயிரை காப்பாற்றும். இங்கே கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், ஸ்கூட்டரின் பின்னால் அமர்ந்திருந்த பெண் ஹெல்மெட்டே அணியவில்லை.
இப்படிப்பட்ட ஒரு சூழலுக்கு மத்தியிலும், அந்த 2 இளம்பெண்களும் அதிர்ஷ்டவசமாக தப்பி விட்டனர். வீடியோவை நன்றாக பார்க்கும்போது, ஸ்கூட்டரை ஓட்டி வந்த இளம்பெண் பஸ் டிரைவரிடம் சண்டையிடும் வகையில் வார்த்தைகளை விடுவது தெரிகிறது. ஆனால் பஸ் டிரைவர் மீது தவறு இருப்பது போல் தெரியவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பஸ் மற்றும் லாரி போன்ற கனரக வாகனங்களுக்கு பின்னால் செல்லும்போது, பாதுகாப்பான இடைவெளியை பின்பற்றுங்கள். அந்த வாகனங்களை எல்லாம் ஓவர்டேக் செய்யும்போது, எதிரில் வாகனங்கள் வருகிறதா? என்பதை கவனிப்பது மிகவும் அவசியம். அப்போதுதான் இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்க முடியும்.


Click it and Unblock the Notifications