எலி-பாம்பு எது நினைச்சாலும் காருக்குள்ள நுழைய முடியாது.. கம்மி செலவில் எல்லா வழியையும் அடைத்த உரிமையாளர்!

அனைத்து வாகன உரிமையாளர்களின் மிகப் பெரிய கவலையாக எலி தொல்லை இருக்கின்றது. இவை வீட்டுக்குள் நுழைந்து அத்தியாவசிய பொருட்களைச் சேதப்படுத்துவதைப் போலவே வாகனங்களுக்கும் நுழைந்து கடுமையான சேதங்களை ஏற்படுத்தி விடுகின்றன. மிக முக்கியமாக எலிகள் காருக்குள் நுழையும் என்றால் சேதம் யூகிக்க முடியாத அளவிற்கு இருக்கும்.

இதனால் தான் கார் உரிமையாளர்களுக்கு மிகப் பெரிய தலை வலியாக எலி தொல்லை இருக்கின்றது. எலி நுழைந்த குறிப்பிட்ட அந்த கார் போரில் சிக்கிய களத்திற்கு இணையானதாக அழிந்துக் காணப்படும். இதனால்தான் தங்களின் மிகப் பெரிய எதிரியாக எலியை ஒவ்வொரு வாகன உரிமையாளர்களும் கருதுகின்றனர்.

Keep rats out

மேலும், அவற்றை தவிர்ப்பதற்காக பல்வேறு யுக்திகளையும் அவர்கள் கையாள்கின்றனர். இருப்பினும், அவற்றை தடுப்பதில் தோல்வியையே வாகன உரிமையாளர்கள் சந்திக்கின்றனர். இந்த மாதிரியான சூழலிலேயே மஹிந்திரா ஸ்கார்பியோ என் கார் உரிமையாளர் ஒருவர் முற்றிலும் விநோதமான மற்றும் தனித்துவமான யுக்தியை எலி போன்ற ஜீவராசிகள் காருக்குள் நுழைவதை தவிர்ப்பதற்காக கையாண்டு உள்ளார்.

காருக்குள் எலி மற்றும் பிற ஜீவராசிகள் நுழைவதற்கு சாத்தியமாக இருக்கும் அனைத்து பாதைகளையும் அவர் அடைத்திருக்கின்றார். இதற்காக அவர் மெட்டல் நெட்டை பயன்படுத்தி இருக்கின்றார். அதாவது, உலோக வலைகளை அவர் பயன்படுத்தி இருக்கின்றார். இதனால் எலி மற்றும் பாம்பு ஆகியவை உள்ளே நுழைவது முற்றிலுமாக தடுக்கப்பட்டு இருக்கின்றது.

Mahindra scorpio n mesh

இதை மீறியும் காருக்குள் எலி நுழையும் என்றாலும் அதனால் காருக்குள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது. ஏனெனில் காரின் முக்கிய பைப் லைன்கள் (Pipe Line) மற்றும் ஒயர் லைன் (Wire Line) ஆகியவற்றையும் அவர்கள் மெட்டல் நெட்டைக் கொண்டு சுற்றி (பாதுகாத்து) இருக்கின்றனர்.

எனவே சிறு கீரல் அல்லது சேதத்தைகூட எலியால் காரின் உள்ளே உள்ள ஒயர்களில் ஏற்படுத்த முடியாது. இந்த ஒட்டுமொத்த வேலைக்கும் அவர் ரூ. 18 ஆயிரம் வரை செலவு செய்திருப்பதாகக் கூறப்படுகின்றது. இது சற்று காஸ்ட்லியானதுதான். இருப்பினும், எலியால் ஏற்படும் சேதத்துடன் ஒப்பிடுகையில் இது சற்று குறைவே ஆகும்.

Mahindra scorpio n mesh in engine

எலி அல்லது வேறு ஏதேனும் கொரித்துண்ணிகள் காருக்குள் நுழையும் எனில் அவற்றை வெளியேற்றுவது பெரும் போராட்டமாக இருக்கும். மெக்கானிக் செலவு, உதிரி பாக செலவு என அனைத்திற்கும் சேர்த்து பெரும் தொகையை செலவிட வேண்டியிருக்கும். அதுவே காஸ்ட்லியான காராக இருப்பின் லட்சக் கணக்கான ரூபாயை உரிமையாளர் அக்காரை சரி செய்ய கொண்ட வேண்டியிருக்கும்.

இதையே தற்போது ஸ்கார்பியோ உரிமையாளர் தவிர்த்திருக்கின்றார். ஸ்கார்பியோ என் கார் மாடலை போலவே டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் உரிமையாளரும் உலோக வலையைப் பயன்படுத்தி தன்னுடைய காரை பாதுகாத்திருக்கின்றார். ஏர் வெண்ட், சேஸிஸ் மற்றும் வடிகால் துளைகள் என அனைத்தை பாதைகளும் தற்போது மெட்டல் நெட்டால் அடைக்கப்பட்டு இருக்கின்றது.

ஆகையால், சிறிய கரப்பான் பூச்சிகூட நுழைய முடியாத வாகனங்களாக ஸ்கார்பியோ என் மற்றும் டொயோட்டா ஃபார்ச்சூனர் ஆகியவை மாறி இருக்கின்றன. இந்தியாவில் வாகன உரிமையாளர்கள் சந்தித்து வரும் மிகப் பெரிய பிரச்னைகளில் எலித் தொல்லையும் ஒன்றாக இருக்கின்றது. இவற்றிடம் தீர்வு காண பலர் பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த மாதிரியான சூழலிலேயே இந்த பெஸ்ட் சொல்யூசனை கார் டீலர்கள் சிலர் வழங்கிக் கொண்டிருக்கின்றனர். ஆமாங்க, மஹிந்திரா மற்றும் டொயோட்டாவின் அதிகாரப்பூர்வ டீலர்களே இதை ரூ. 18 ஆயிரம் கட்டணத்தில் செய்துக் கொடுத்திருக்கின்றனர். இது வரியுடன் சேர்க்கப்பட்ட கட்டண தொகை ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில், குறிப்பாக, சாலையோரங்களில் நிறுத்தப்படும் வாகனங்களே எலிகளின் தாக்கத்திற்கு அதிகளவில் ஆளாகின்றன. முறையான பார்க்கிங் வசதி இல்லாத காரணத்தினால் இந்தியாவில் உள்ள பலர் தங்களது வாகனங்களை சாலையோரங்கள் அல்லது காலி இடங்களில் நிறுத்துகின்றனர். இந்த மாதிரியான சூழலிலேயே இத்தகையோருக்கு வரப்பிரசாதமாக எலிகளை தவிர்ப்பதற்கான வழிக்காட்டுதல்களை வாகன விற்பனையாளர்கள் காட்டத் தொடங்கி இருக்கின்றனர்.

More from DriveSpark

Article Published On: Monday, February 19, 2024, 17:10 [IST]
English summary
Scorpio owner has covered all the holes in the car with mesh to keep rats out
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X