திருட்டை தவிர்க்க ஸ்கார்பியோ ஓனர் செய்த செயல்! சிரிக்கிறதா.. இல்லை நாமலும் ஃபாலோ பண்ணலாம்னு நினைக்கிறதா!!

இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் பிரபலமான கார் மாடல்களில் மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்யூவி (Mahindra Scorpio SUV)வும் ஒன்றாகும். இந்த காரையே அதன் உரிமையாளர் திருட்டில் இருந்து காப்பாற்ற ஓர் விநோத செயலைச் செய்திருக்கின்றார். இதுகுறித்து இணையத்தில் வைரலாகும் வீடியோ குறித்த பதிவை இந்த பதிவில் பார்க்கலாம்.

நாட்டில் வாகன திருட்டு பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. சாலையில் நிறுத்தப்படும் வாகனங்கள்தான் அதிகம் களவாடப்படுகின்றன என்றால், பார்க்கிங்கில் பாதுகாப்பாக இருக்கும் என நினைத்து நிறுத்தப்பட்ட கார்களும் திருடர்களின் பசிக்கு இரையாகிக் கொண்டு இருக்கின்றன. பாதுகாப்பு இருக்கும் என நினைத்து நாம் செய்யும் அனைத்து செயல்களையும் திருடர்கள் அசால்டாக முறியடித்துவிடுகின்றனர்.

Scorpio tied in electric pole

இதனால்தான் வாகன உரிமையாளர்களும் தங்களின் பாதுகாப்பு யுக்திகளை அவ்வப்போது மேம்படுத்தி வருகின்றனர். அந்தவகையில், திருட்டைத் தவிர்க்கும் தொழில்நுட்பத்தை காருக்குள் புகுத்துதல் மற்றும் கார் திருடப்பட்டால் அந்த வாகனம் இருக்கும் இடத்தைக் கண்டறிவதற்கான அம்சங்களைச் சேர்த்தல் என பன்முக நடவடிக்கைகளை அவர்கள் எடுத்து வருகின்றனர்.

இந்த மாதிரியான சூழலிலேயே மஹிந்திரா கார் ஓனர் ஒருவர் அவருடை காரை திருடர்களிடம் இருந்து பாதுகாக்க ஓர் விநோத யுக்தியைக் கையாண்டிருக்கின்றார். அவர் சைக்கிள்களை கம்பத்துடன் இணைத்து சங்கிலி போடுவதைப் போல தன்னுடைய ஸ்கார்பியோ காரை சங்கிலியால் கட்டிப் போட்டு இருக்கின்றார்.

தான் வசதிக்கும் பகுதியில் வாகன திருட்டு அதிகம் என்பதால் இந்த மாதிரியான நடவடிக்கையில் அவர் இறங்கி இருக்கின்றார். இந்த படமே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. நாட்டில் அதிகம் களவாடப்படும் கார் மாடல்களில் ஸ்கார்பியோவும் ஒன்றாகும். இதற்கு சந்தையில் கிராக்கி அதிகம் என்பதால் திருடர்கள் சிலர் இந்த காரை குறி வைத்து திருடி வருகின்றனர்.

இந்த மாதிரியான சூழலிலேயே தன்னுடைய காரை களவானிகளிடம் இருந்து காப்பாற்ற கரண்ட் கம்பத்தில் சைக்கிள்களை லாக் செய்ய உதவும் லாக்கினை வைத்து கட்டிப் போட்டு இருக்கின்றார். இதுதவிர, விலங்குகளிடம் இருந்தும் வாகனத்தைக் காப்பாற்றும் விதமாக காரின் முன் பக்கத்தில் சில கூர்மையான அமைப்பைக் கொண்ட போர்வையை போர்த்தி இருக்கின்றார்.

நாய் மற்றும் பூனை போன்ற விலங்குகள் வாகனத்தின் மீது ஏறுவதைத் தவிர்க்கும் பொருட்டு அவர் இவ்வாறு செய்திருக்கின்றார். இதுகுறித்த படமே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. இது புதிய யுக்தியாக இருக்கின்றதே, நாமும் இதையே இனி ஃபாலோ செய்வோம் என ஒரு சிலர் கருத்துத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.

அதேவேளையில், யாருயா இந்த விஞ்ஞானி என அவர் கிண்டலடித்துக் கொண்டு இருக்கின்றனர். அதேநேரத்தில் இந்த சம்பவம் எங்கு அரங்கேறியது என்பது பற்றிய விபரம் வெளியாகவில்லை. இருப்பினும், இணையத்தில் ஸ்கார்பியோ காரை பாதுகாக்கும் உரிமையாளர் கையாண்டு யுக்தி நெட்டிசன்கள் மத்தியில் தீயாய் பரவிக் கொண்டிருக்கின்றது.

இந்த மாதிரியான நடவடிக்கைகளுடன் சேர்த்து காரில் புதிய நவீன தொழில்நுட்ப அம்சங்களைச் சேர்ப்பதாலும் வாகனங்களை திருட்டில் இருந்து காப்பாற்ற முடியும். லைவ் டிராக்கிங் டிவைஸ் மற்றும் கார் திருடப்பட்டால் அலாரம் அடிக்கும் கருவி என ஏகப்பட்ட அம்சங்கள் சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. சில மலிவு விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் நாளுக்கு நாள் வாகன திருட்டு எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. இதைத் தவிர்க்க சிசிடிவி உள்ள பகுதிகளில் வாகனத்தை பார்க் செய்யலாம். மேலும், திருட்டைத் தவிர்க்க உதவும் ஜிபிஎஸ் கருவி போன்றவற்றையும் பயன்படுத்தலாம். இதனால் வாகனம் களவாடப்பட்ட வெகுவிரைவிலேயே நம்மால் கண்டறிய முடியும். மேலும், பெரிய அளவில் வாகனத்தைக் கண்டுபிடிப்பதில் சிக்கலும் ஏற்படாது.

More from DriveSpark

Article Published On: Friday, December 29, 2023, 5:00 [IST]
English summary
Scorpio tied in electric pole
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+