கப்பலில் ஓட்டை வழியாக தண்ணீர் வெளியே விழுமே அது ஏன் தெரியுமா? இதுக்கு பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்குதா?
கப்பல்கள் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டு வைத்திருக்கும் போது கப்பலின் அடிப்பாகத்தில் ஒரு ஓட்டையில் இருந்து தண்ணீர் விழுந்து கொண்டே இருக்கும். கப்பலுக்குள்ளே இவ்வளவு தண்ணீர் எங்கு இருக்கிறது? ஏன் இந்த தண்ணீர் எல்லாம் கப்பலில் இருந்து வெளியேற்றப்படுகின்றன? இதற்கு பின்னால் உள்ள அறிவியல் என்ன? என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
நம்மில் பலர் பஸ், ரயில், ஏன் விமானங்களில் கூட பயணித்திருப்போம். கப்பலில் வெகு சிலரை பயணித்திருப்பார்கள். கப்பல் பயணம் என்பது பயணிகளுக்கு மிக அரிதான பயணமாக இருக்கும். கப்பல்களில் பயணம் செய்வது என்பது தனி சுகமான விஷயம் தான். கப்பல் பயணத்தில் ஏராளமான விஷயத்தை நம்மால் பார்க்க முடியும்.

கப்பல் உள்ளே சென்று கப்பலில் பயணம் செய்ய முடியாவிட்டாலும் அவ்வப்போது நாம் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டிருக்கும் கப்பலை பார்த்திருப்போம். இப்படியாக நிறுத்தப்பட்டிருக்கும் கப்பலில் அடிப்பகுதியில் ஒரு ஓட்டை வழியாக தண்ணீர் கடலுக்குள்ளே விழுந்து கொண்டிருப்பதை நாம் பலமுறை பார்த்திருக்க வாய்ப்பு இருக்கிறது. நேரில் பார்க்க முடியாவிட்டாலும் சினிமாக்களில் வீடியோக்களில் எல்லாம் இது போன்ற காட்சிகளை பார்த்திருப்போம்.
கப்பல் உள்ளே இருந்து தண்ணீர் ஏன் கடலுக்குள் அனுப்பப்படுகிறது. இந்த தண்ணீர் எப்படி கப்பலுக்குள் வந்தது? எதற்காக இதை வெளியேற்றுகிறார்கள்? என நம்மில் பலர் யோசித்து இருக்க கூட மாட்டோம். இது ஏதோ கப்பலில் பணியாற்றும் ஊழியர்களின் வேலை என்று மட்டுமே நினைத்து இருப்போம். ஆனால் இதற்கு பின்னால் மிகப்பெரிய அறிவியல் இருக்கிறது. கப்பலின் பாதுகாப்பே இந்த விஷயத்தில் தான் இருக்கிறது.

கப்பலில் உள்ளே இருக்கும் தண்ணீரை வெளியேற்றும் இந்த ஓட்டைக்கு ஆங்கிலத்தில் ஸ்கப்பர்ஸ் என்று பெயர் இந்த கருவி தான். கப்பல் நடுக்கடலில் பயணிக்கும் போது மிகப்பெரிய அலைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இந்த அலைகளில் கப்பலின் மேல் பகுதியை வரை தண்ணீர் தெளித்து கப்பலின் டெக் பகுதி எனப்படும் மேல் தளத்தில் உள்ள தரைப்பகுதியில் தண்ணீர் விழுவதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளன.
இப்படியாக கப்பலுக்குள் விழும் தண்ணீர் முழுவதும் கப்பலில் மேல் பகுதியிலேயே தேங்காமல் அது பக்கவாட்டு வழியாக குறிப்பிட்ட ஒரு இடத்திற்கு கப்பலின் கீழ் பகுதி வரை செல்வதற்கான வழிவகைகளை செய்திருப்பார்கள். அது மட்டுமல்லாமல் கப்பல் செல்லும் பாதையில் மழை பெய்தாலும் அந்த மழை நீரும் இப்படியாக கப்பலின் மேல் பகுதியிலேயே தேங்காமல் தரைப்பகுதிக்கு அதற்கென சேமிக்கப்பட்ட இடத்திற்கு செல்லும்.

குறிப்பிட்ட அந்த சேமிப்பு டேங்கில் தண்ணீர் நிரம்பி விட்டால் உடனடியாக இந்த ஸ்கப்பர்ஸ் எண்ணப்படும் ஓட்டை வழியாக டேங்கரிலுள்ள அனைத்து நீரும் மீண்டும் கடலிலேயே கொட்டப்படும். இதன் மூலம் கப்பலின் எடை குறைக்கப்படும். கப்பலின் மேல் பகுதியில் தண்ணீர் தேங்கினால் கப்பல் நிலை தடுமாறி கவிழ்ந்து போக கூட வாய்ப்பு இருக்கிறது.
இதனால் கப்பல் கட்டுமானம் செய்யப்படும்போதே கப்பலின் மேல் பகுதியில் எந்த வித தண்ணீரும் தேங்காமல் அதை உடனடியாக கீழ் பகுதிக்கு எடுத்துச் செல்வதற்கான கட்டுமான வசதிகள் எல்லாம் செய்திருப்பார்கள். மேலும் மேல்பகுதியில் தான் பெரும்பாலான ஊழியர்கள் பணியாற்றுவதால் அந்தப் பகுதி ஈரமாக இருந்தால் வழுக்குத் தன்மை அதிகமாகிவிடும். இதனால் ஊழியர்களுக்கு பாதுகாப்பில்லாத சூழ்நிலை உருவாகும் என்பதால் இதை கப்பல் ஊழியர்கள் செய்ய மாட்டார்கள்.
இப்படியாக கப்பல் மேல் பகுதியில் விழும் தண்ணீரை சேகரித்து வெளியேற்றும் பகுதி தான் இந்த ஸ்கப்பர்ஸ் என அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் இதை கப்பல் துறைமுகத்தில் வந்து நின்று காத்திருக்கும் போது முழுவதுமாக காலி செய்து விட்டு ஸ்கப்பர்ஸ் டேங்கில் எந்த தண்ணீரும் இல்லாத நிலையில் தான் கப்பலை நடத்தி செல்வார்கள். அப்பொழுதுதான் பயணத்தின் போது தண்ணீர் கப்பல் மேல்புறம் வந்தால் அதை மீண்டும் டேங்கில் சேமிக்க முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கப்பல் என்பது ஒரு பிரம்மாண்டமான போக்குவரத்து வாகனமாகும். இந்த கப்பலை பார்ப்பதற்கு என்றே மிகப்பெரிய கூட்டம் இருக்கும். இந்த கப்பலில் உள்ளே ஏகப்பட்ட அறிவியல் அம்சங்கள் பொருத்தப்பட்டிருக்கும். அப்படியான ஒரு அறிவியல் அம்சம் தான் இது. இதை பலரும் பார்த்திருந்தாலும் இதற்கு பின்னால் இருக்கும் காரணம் பலருக்கும் தெரியாது. இனி நீங்கள் கப்பலில் இந்த மாதிரியான தண்ணீர் வெளியேறும் முறையை பார்த்தால் அதற்கான காரணத்தை புரிந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications









