அரசு பஸ் டிரைவர்களுக்கு மாநில அரசு போட்ட அதிரடி உத்தரவு! இனி எல்லாரும் இதை கட்டாயம் ஃபாலோ பண்ணனும்!

இனி அரசு பஸ் ஓட்டுநர்கள் பஸ்ஸில் ஏறியதும் முதலில் செய்யவேண்டிய விஷயம் குறித்த ஒரு முக்கியமான அறிவிப்பை மாநில அரசு டிரைவர்களுக்கு பிறப்பித்துள்ளது. அதன்படி இனி கேரள அரசு பஸ்களை ஓட்டுனர் டிரைவர்கள் அனைவரும் இந்த உத்தரவை பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளது. மிக முக்கியமான இந்தியா முழுவதும் கவனத்தை திருப்பும் வகையில் தான் இந்த அறிவிப்பு குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியா முழுவதும் மாநில அரசு சார்பில் போக்குவரத்து கழகங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி ஒவ்வொரு மாநில அரசும் மாநிலத்திற்குள் மக்கள் ஒரு இடம் விட்டு மற்றொரு இடம் செல்ல பஸ்களை இயக்கி வருகின்றனர். நீண்ட தூர பஸ்கள், குறைந்த தூர பஸ்கள், உள்ளூருக்குள் பயணிக்கும் பஸ்கள் என விதவிதமான பஸ்களை மாநில அரசுகள் செயல்படுத்தி வருகிறது.

seat belt mandatory for bus

இப்படியாக கேரள மாநில அரசும் கேரள மாநிலத்திற்கு உள்ள அரசு பஸ்களை பயன்படுத்தி வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கத்தில் மத்திய அரசு சாலைகளில் ஏற்படும் விபத்துக்களை குறைக்க வாகனங்களுக்கு சீட் பெல்டை கட்டாயமாக்கி வருகிறது. முக்கியமாக வாகன தயாரிப்பாளர்களுக்கு 3 பாயிண்ட் சீட் பெல்ட்டை வாகனங்களில் வழங்க உத்தரவிட்டுள்ளது.

தற்போது கார்கள் எஸ்யூவிகள் போன்ற வாகனங்களில் சீட் பெல்ட் வழங்கப்படுகின்றன. ஆனால் பஸ்களில் பெரும்பாலும் சீட் பெல்ட் இல்லை. இந்நிலையில் பஸ்களுக்கும் சீட் பெல்ட் வழங்க அரசு திட்டமிட்டு வருகிறது. இதன்படி கேரள மாநிலத்தில் அரசு பஸ்களில் டிரைவர்களுக்கு சீட் பெல்ட் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

seat belt mandatory for bus

அதன்படி வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் கேரளாவில் இயங்கும் அரசு பஸ்களில் டிரைவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு பஸ் மட்டுமல்லாமல் தனியார் பஸ் லாரி உள்ளிட்ட கனரக வாகன ஓட்டுனர்களுக்கும் சீட் பெல்ட் கட்டாயமாக அம்மானில் அரசு திட்டமிட்டுள்ளது.

இதனால் அடுத்த ஓரிரு நாட்களில் கேரள மாநிலத்தில் உள்ள அரசு பஸ்களில் ஓட்டுநர் இருக்கைக்கு சீட் பெல்ட் பொருத்தும் பணி வேகமாக நடக்க உள்ளது. இந்த சீட் பெல்ட் பொருத்தப்பட்டவுடன் பஸ் ஓட்டுநர்கள் பஸ் சீட்டில் ஏறி அமர்ந்ததும் முதல் வேலையாக இதை சீட் பெல்ட் தான் போட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த சீட் பெட்டை போட்ட பின்பு தான் பஸ்சை ஸ்டார்ட் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

seat belt mandatory for bus

இதனால் பஸ்கள் பயணிக்கும் போது விபத்து ஏற்பட்டால் அதில் டிரைவருக்கு ஏற்படும் பாதிப்பின் அளவு குறைவாக இருக்கும். இதனால் வாகன விபத்துகளில் உயிரிழப்புகளை குறைக்க அதிகமான வாய்ப்புகள் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கேரளா அரசு இந்த அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளது.

வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதிக்கு பிறகு கேரளாவிற்குள் இயங்கும் பஸ்கள் லாரிகள் மற்றும் கனரக வாகனங்களில் சீட்டு பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டினால் அந்த வாகன ஓட்டிக்கு அபராதம் மிதிக்கவும் கேரள அரசு முடிவு செய்துள்ளது. கார்கள் மட்டுமல்லாமல் கனரக வாகனங்களிலும் சீட் பெல்ட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போது வாகன ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வந்துள்ளது.

கேரளா அரசு தற்போது பல முக்கியமான திட்டங்களை படிப்படியாக அமல்படுத்தி வருகிறது. அதில் இந்த கனரக வாகனங்களுக்கான சீட் பெல்ட் திட்டமும் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்தியாவிலேயே பல மாநிலங்கள் செய்யாத இந்த முயற்சியை கேரள அரசு கையில் எடுத்துள்ளது தற்போது இந்தியாவையே கேரளாவை திருப்பி பார்க்க வைத்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியா முழுவதும் கனரக வாகனங்களுக்கு சீட் பெல்ட் கட்டாயப்படுத்துவதன் மூலம் விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்க முடியும். கேரளா அரசு செய்த இந்த முயற்சியை தமிழக அரசு மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகளும் பின்பற்ற வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். இது குறித்த உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்கள்.

Article Published On: Monday, September 11, 2023, 12:35 [IST]
English summary
Seat belt mandatory for govt buses from october 1 state govt passes new order
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X