அரசு பேருந்து ஓட்டுனர்களும் தப்பிக்க முடியாது!! தமிழ்நாட்டுல இப்படியொரு சட்டம் வர மாட்டிங்குதே...

பயணத்தின்போது வாகனங்களில் சீட்பெல்ட் கட்டாயமாக்கப்பட்டு வரும் நிலையில், அரசு பேருந்துகளை இயக்கும் ஓட்டுனர்களும் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என ஓர் மாநில அரசாங்கம் இந்த சட்டத்தை கட்டாயமாக்கும் முனைப்பில் உள்ளது. எந்த மாநிலம் அது? இந்த சட்டத்தை கொண்டுவருவதில் உள்ள இடர்பாடுகள் என்னென்ன? என்பதை பற்றி இனி பார்க்கலாம்.

ஆட்டோமொபைல் வாகனங்களில் மனிதன் கொண்டுவந்த அருமையான பாதுகாப்பு அம்சங்களுள் ஒன்று சீட் பெல்ட். கார்களில் சீட் பெல்ட் அணிபவர்களை வித்தியாசமாக பார்த்த காலம் போய், பல விபத்துகள் தடுக்கப்பட்டுள்ளதால் சீட் பெல்ட் அணிவதன் கட்டாயத்தை பலர் உணர ஆரம்பித்துள்ளனர். வாகன ஓட்டிகளுக்கு நமது இந்திய அரசாங்கம் பல்வேறு சுதந்திரங்களை வழங்கி வருகிறது.

seat belts will be mandatory for govt buses

நீண்ட வருட இழுப்பறிக்கு பின் 2-வீலரில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும் என்பது சமீப காலமாக தான் ஒவ்வொரு மாநிலங்களாக கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. முந்தைய காலங்களில் போலீஸாராலும், சமூக ஆர்வலர்களாலும் இந்த விஷயம் அறிவுறுத்தப்பட்டு வந்ததே தவிர்த்து, அபராதங்கள் எதுவும் விதிக்கப்படவில்லை. அதேபோல் 4-சக்கர வாகனங்களில் சீட் பெல்ட் அணிவதையும் கட்டாயமாக்கும் முனைப்பில் மத்திய அரசு உள்ளது.

சீட் பெல்ட் அணிவது கட்டாயம் என இந்திய மோட்டார் வாகன சட்டத்தில் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. பிரிவு 194 (பி)(2) மட்டுமே, காரில் 14 வயதுக்கு குறைவானவர்கள் இருந்தால் அவர்கள் தான் கட்டாயமாக சீட் பெல்ட் அணிய வேண்டும் என கூறுகிறது. சீட் பெல்ட் அணிய வேண்டுமென வாகன ஓட்டிகளை வற்புறுத்த கூடாது என எண்ணும் மத்திய அரசு இருப்பினும், கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது கார்களில் பயணிகள் சீட்பெல்ட் அணியவில்லை என்றால் எச்சரிக்கும் கருவியை வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.

கடந்த 2022ஆம் ஆண்டின் இறுதியில் மும்பையில் கார் ஓட்டுபவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிந்திருக்க வேண்டும் என்ற சட்டம் அங்கு அமலுக்கு வந்தது. இந்த வரிசையில் தற்போது, கேரள அரசு வருகிற செப்டம்பர் 1ஆம் தேதி முதல் கனரக வாகன ஓட்டிகள் பயணத்தின்போது கட்டாயம் சீட் பெல்ட் அணிந்திருக்க வேண்டும் என்கிற சட்டத்தை அமல்படுத்த உள்ளது. கேரள மாநில போக்குவரத்து துறை அமைச்சர் ஆண்டனி ராஜு இதனை தெரிவித்துள்ளார்.

seat belts will be mandatory for govt buses

இதுகுறித்து அமைச்சர் ஆண்டனி ராஜு கூறுகையில், ஓட்டுனர் மற்றும் ஓட்டுனருக்கு அருகே அமர்பவர்கள் கட்டாயம் சீட் பெல்ட்களை அணிய வேண்டும். இல்லையெனில் அவர்கள் செயற்கை நுண்ணறிவை (AI) பெற்ற கேமிராவால் அடையாளம் காணப்பட்டு அபராதத்திற்கு உள்ளாகுவர் என்றார். கேரளா மாநிலத்தில் வருகிற செப்.1ஆம் தேதி முதல் அமலுக்குவர உள்ள இந்த சட்டத்தில் கேரள அரசு பேருந்துகளும் உட்படுகின்றன.

ஓட்டுனர் மட்டுமின்றி முன் இருக்கையில் அமர்பவர்களும் கனரக வாகனங்களில் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்பதால் இந்த சட்டம் கேரளாவில் எந்த அளவிற்கு சாத்தியமாகும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். குறிப்பாக, அரசு பேருந்துகளில் முன் இருக்கை பயணிகளுக்கும் சீட் பெல்ட் வழங்கப்படுமா என்பதையும் காண ஆவலாக உள்ளோம். அதுமட்டுமின்றி, சட்டத்தை மீறுவோர்க்கு அபராதத்தை விதிக்கும் வாஹான் இணையத்தளம் கடந்த பல மாதங்களாக தொழிற்நுட்ப கோளாறில் உள்ளதாக கூறப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: ஓட்டுனர் பிரச்சனையின்றி இருந்தால் மட்டுமே உருவாகும் விபத்தை தடுக்க முடியும் என்பது சீட் பெல்ட் அணிவதற்கான முக்கிய காரணமாகும். கேரள அரசு இதனை முதலில் கனரக வாகனத்தில் கட்டயமாக்க துவங்கியுள்ளது. ஏற்கனவே கூறியதுபோல், சில பல பிரச்சனைகள் உள்ளதால் இந்த சட்டம் கேரளாவில் எந்த அளவிற்கு சாத்தியமாகும்? என்பதை பார்க்க வேண்டும். அதன் பின்னரே நமது தமிழ்நாடு உள்பட மற்ற மாநில அரசாங்கங்களும் இதனை கையில் எடுக்கும்.

More from DriveSpark

Article Published On: Saturday, June 10, 2023, 14:59 [IST]
English summary
Seat belts will be mandatory for govt buses in this state
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+