ரோஹித் ஓட்டி வந்த காரோட விலை 4 கோடியாம்.. ஆனா எல்லாரும் காரோட நம்பர் பிளேட்ட பத்திதான் பேசிட்டு இருக்காங்க!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரும், மும்பை இந்தியன் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான ரோஹித் ஷர்மா, விலை உயர்ந்த கார் ஒன்றில் வலம் வரும் வீடியோ இணையத்தில் வெளியாகி, வைரலாகிக் கொண்டு உள்ளது. அந்த காரின் மதிப்பு கோடி ரூபாய்க்கும் அதிகம் ஆகும்.

இருப்பினும், அந்த காருக்காக அல்லாமல் அதில் இடம் பெற்றிருந்த பதிவெண்ணிற்காகவே வைரலாகிக் கொண்டிருக்கின்றது. அப்படி என்ன பதிவெண் அது? அந்த பதிவெண்ணிற்கு பின்னால் இருக்கும் மறைந்திருக்கும் ரகசியம் என்ன? மற்றும் அவர் பயன்படுத்திய காரின் சிறப்புகள் மற்றும் விலை என்ன? என்கிற விபரங்களையே இந்த பதிவில் பார்க் இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

Secret behind the number plate of rohits car

ரோஹித் ஷர்மா மிகப் பெரிய கார் காதலர் ஆவார். இதற்கு சான்றாக அவரிடத்தில் ஏகப்பட்ட கார்கள் பயன்பாட்டில் உள்ளன. குறிப்பாக, அவரிடத்தில் விலைக் கொண்ட ஆடம்பர கார்களே அதிக எண்ணிக்கையில் பயன்பாட்டில் உள்ளன. அந்தவகையில், அவரிடம் பயன்பாட்டில் இருக்கும் மிக மிக விலை உயர்ந்த கார் மாடல்களில் ஒன்றே லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் ஆட்டோ-பையோகிராஃபி எல்டபிள்யூ (Land Rover Range Rover Autobiography LWB) ஆகும்.

இது ஓர் மிதக்கும் அரண்மனை போன்ற சிறப்பு வசதிகளைத் தாங்கி எஸ்யூவி ரக கார் மாடலாகும். இந்த காரில் அவர் வலம் வரும் வீடியோ இணையத்தில் வெளியாகி இருக்கின்றது. சமீபத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் கலந்துக் கொள்ள வான்கேட் விளையாட்டு மைதானத்திற்கே அவர் அந்த காரில் வந்திருக்கின்றார்.

இந்த சொகுசு காரின் இப்போதைய சந்தை மதிப்பு ரூ. 4 கோடிக்கும் அதிகம் ஆகும். இத்தகைய அதிக விலைக் கொண்ட காரில் அவர் பயணிக்கும் வீடியோவே தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. இந்த வீடியோ அதிகம் பகிரப்படுவதற்கு பின்னால் இருக்கும் முக்கிய காரணியாக அதன் நம்பர் பிளேட் இருக்கின்றது.

காரில் 'எம்எச் 01 இக்யூ 0264' (MH 01 EQ 0264) என்கிற எண்ணே பயன்படுத்தப்பட்டு இருந்தது. இதில், 264 என்கிற எண் அந்த காரில் இடம் பெற்றிருப்பதே பலரின் பேச்சுக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றது. 2014 ஆம் ஆண்டில் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் ரோஹித் ஷர்மாவால் குவிக்கப்பட்ட ரன்னே இதுவாகும்.

இதன் ஞாபகார்த்தமாகவே அவர் அதே எண்ணை தன்னுடைய விலை உயர்ந்த கார் மாடலுக்கு பயன்படுத்தி இருக்கின்றார். இந்த எண்ணை வாங்குவதற்காக அவர் எவ்வளவு செலவிட்டிருப்பார் என்பது பற்றிய விபரங்கள் வெளியாகவில்லை. இதற்காக எப்படியும் அவர் ஒரு சில லட்ச ரூபாய்களை வாரி இறைத்திருப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏனெனில் ஃபேன்சி மற்றும் தேவைக்கேற்ற பதிவெண்ணை பெற ஆர்டிஓ-வில் சில வழிகள் உள்ளன. அதனடிப்படையில் அதிக கட்டணம் இதுமாதிரியான பதிவெண்களுக்கு வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய பதிவெண்ணையே சுமார் 4 கோடி ரூபாய் மதிப்புள்ள லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் ஆட்டோ-பயோகிராஃபி கார் மாடலில் ரோஹித் ஷர்மா பயன்படுத்தி இருக்கின்றார்.

இந்த கார் மாடல் நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல மிகவும் அதிக சொகுசு வசதிகளைத் தாங்கிய கார் மாடல் ஆகும். மேலும், ரோஹித் ஷர்மா பயன்படுத்தும் அந்த கார் மாடலில் 3.0 லிட்டர் டீசல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது ஓர் இன்லைன்-6 டீசல் மோட்டார் ஆகும்.

அதிகபட்சமாக 346 பிஎச்பி மற்றும் 700 என்எம் டார்க்கை அது வெளியேற்றும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் 4 வீல் டிரைவ் சிஸ்டம் ஆகியவை இதில் வழங்கப்பட்டு இருக்கின்றன. ரோஹித் ஷர்மாவிடம் இந்த கார் மட்டுமில்லைங்க இன்னும் பல அரிய மற்றும் ஆடம்பர வகை கார் மாடல்கள் பயன்பாட்டில் இருக்கின்றன.

லம்போர்கினி உருஸ், மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ், பென்ஸ் ஜிஎல்எஸ் எஸ்யூவி, பிஎம்டபிள்யூ எம்5 மற்றும் ஸ்கோடா ஆக்டேவியா உள்ளிட்ட ஏகப்பட்ட கார் மாடல்களை அவர் பயன்படுத்தி வருகின்றார். அதுதவிர, டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் மாடலையும் அவர் வைத்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரோஹித் ஷர்மா ஓர் மிகப் பெரிய வாகன காதலர் ஆவார். இவரே மிகப் பெரிய சென்டிமென்ட் நபர் என்பது அவருடைய லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் சொகுசு காருக்கு பயன்படுத்தி இருக்கும் நம்பர் பிளேட் வாயிலாகத் தெரிய வந்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 3, 2024, 5:00 [IST]
English summary
Secret behind the number plate of rohits car
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+