ஆசியாவை கலக்கும் அமெரிக்க அதிபரின் கார் பட்டாளம்!

ஆசியாவில் சுற்றுப் பயணம் செய்து வரும் அமெரிக்க அதிபர் டிரம்பிற்காக பெரிய கார் பட்டாளம் தனி விமானம் மூலமாக கொண்டு வரப்பட்டு இருக்கிறது.

By Saravana Rajan

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆசிய நாடுகளில் சுற்றுப் பயணம் செய்து வருகிறார். அவருக்காக ஒரு பெரிய கார் பட்டாளமே அமெரிக்காவிலிருந்து தனி விமானம் மூலமாக ஒவ்வொரு நாட்டிற்கும் கொண்டு வரப்பட்டு கொண்டிருக்கிறது. இதுகுறித்த சுவாரஸ்யத் தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

ஆசியாவை கலக்கும் அமெரிக்க அதிபரின் கார் பட்டாளம்!

உலகின் மிகவும் சக்திவாய்ந்த தலைவர்களில் ஒருவராக அமெரிக்க அதிபர் கருதப்படுகிறார். மேலும், அதிக அச்சுறுத்தல்கள் இருப்பதால், அவருக்கான பாதுகாப்பு மிகவும் பலமானதாக இருந்து வருகிறது. அவர் பயன்படுத்தும் கார்கள், விமானங்கள், ஹெலிகாப்டர்கள் என அனைத்திலுமே, அதீத பாதுகாப்பு வசதிகள் இருக்கின்றன.

ஆசியாவை கலக்கும் அமெரிக்க அதிபரின் கார் பட்டாளம்!

நாட்டை ஆளும் தலைவர்களுக்கு அதிக பாதுகாப்பு கொடுக்கப்படுவதில் ஆச்சரியமில்லை. பொதுவாக, இதுபோன்ற தலைவர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும்போது, அந்த நாட்டில் வழங்கப்படும் கவச அம்சங்கள் கொண்ட கார்களை பயன்படுத்துவார்கள்.

ஆசியாவை கலக்கும் அமெரிக்க அதிபரின் கார் பட்டாளம்!

ஆனால், அமெரிக்க அதிபர் வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் செய்யும்போது, அவருக்கான பாதுகாப்பு மிகவும் விரிவாக செய்யப்படும். முன்கூட்டியே, அமெரிக்க பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வெளிநாடுகளில் சென்று பாதுகாப்பு அம்சங்களை ஆய்வு செய்து, ஒப்புதல் அளித்த பின்னரே பயணத் திட்டம் உறுதி செய்யப்படும்.

ஆசியாவை கலக்கும் அமெரிக்க அதிபரின் கார் பட்டாளம்!

அதுமட்டுமில்லை, அமெரிக்க அதிபர் வெளிநாடுகளுக்கு செல்லும்போது அந்த நாட்டு அரசு வழங்கும் கார்களை பயன்படுத்துவதில்லை. மாறாக, அமெரிக்காவில் பயன்படுத்தும் அதே கார்கள்தான் வெளிநாட்டிலும் பயன்படுத்தப்படுகின்றன.

ஆசியாவை கலக்கும் அமெரிக்க அதிபரின் கார் பட்டாளம்!

இதற்காக, தனி விமானங்கள் பயன்படுத்தப்படுகிறது. தற்போது ஆசிய நாடுகளில் சுற்றுப் பயணம் செய்து வரும் டொனால்டு டிரம்பிற்கு, அமெரிக்காவிலிருந்து அந்த தனி விமானத்தில் டொனால்டு டிரம்பின் அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தும் கார்கள் இரண்டும், பாதுகாப்பு அரணாக செல்வதற்காக கார்களும் கொண்டு வரப்பட்டுள்ளன.

ஆசியாவை கலக்கும் அமெரிக்க அதிபரின் கார் பட்டாளம்!

இந்த கார்கள் சி-17 குளோப்மாஸ்டர் விமானம் மூலமாக ஒவ்வொரு நாட்டிற்கும் எடுத்துச் செல்லப்பட்டு வருகின்றன. ஆசிய நாடுகளில் டிரம்ப் சுற்றுப் பயணத்திற்காக கார்கள் எடுத்துச் செல்லப்படுவது குறித்து, அமெரிக்க பாதுகாப்புத் துறை சில படங்களையும் வெளியிட்டு இருக்கிறது.

Recommended Video

[Tamil] Skoda kodiaq Launched In India - DriveSpark
ஆசியாவை கலக்கும் அமெரிக்க அதிபரின் கார் பட்டாளம்!

சில சமயங்களில் ஒரே நாளில் வெவ்வேறு நாடுகளின் நகரங்களுக்கு செல்ல வேண்டி இருந்தால், சி17 குளோப்மாஸ்டர் விமானங்கள் மற்றும் சி-5 கேலக்ஸி விமானங்களில் இந்த கார்கள் தனிதனி பிரிவாக கொண்டு செல்லப்படும்.

தொடர்புடைய சுவாரஸ்யச் செய்திகள்:

ஆசியாவை கலக்கும் அமெரிக்க அதிபரின் கார் பட்டாளம்!

ஒரே விமானத்தில் செல்லும்போது 16 முதல் 20 கார்கள் வரை அமெரிக்க அதிபரின் வெளிநாட்டு பயணங்களின்போது கொண்டு செல்லப்படுகிறது. ரூட் கார் அல்லது பைலட் கார்கள் அமெரிக்க அதிபர் செல்லும் காருக்கு வழிகாட்டி வாகனமாக செல்லும்.

ஆசியாவை கலக்கும் அமெரிக்க அதிபரின் கார் பட்டாளம்!

அதில், தி பீஸ்ட் என்று அழைக்கப்படும் அதிபர் டிரம்பின் அதிகாரப்பூர்வ கார்கள் மற்றும் பாதுகாப்பு அரணாக செல்லக்கூடிய, செவர்லே கவச எஸ்யூவிகள் அந்த விமானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கின்றன.

ஆசியாவை கலக்கும் அமெரிக்க அதிபரின் கார் பட்டாளம்!

இந்த கார்களை ஆடாமல், அசையாமல் எடுத்துச் செல்வதற்காக அந்த விமானத்தில் சிறப்பு கட்டமைப்பு வசதிகளும் உள்ளன.

ஆசியாவை கலக்கும் அமெரிக்க அதிபரின் கார் பட்டாளம்!

மேலும், அந்த வழியில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் ஆய்வு செய்யும் விதத்தில், சில நிமிடங்களுக்கு முன்பாக செல்லும். அமெரிக்க அதிபருக்கு பாதுகாப்பாக வரும் கார்களுடன் நேரடி தொடர்பில் இருக்கும்.

ஆசியாவை கலக்கும் அமெரிக்க அதிபரின் கார் பட்டாளம்!

ஸ்வீப்பர்ஸ் என்ற பெயரில் அழைக்கபப்படும் வாகன பிரிவில், கார்கள், மோட்டார்சைக்கிள்கள் பயன்படுத்தப்படுகின்றன. அமெரிக்க அதிபர் செல்லும்போது வழியில் உள்ள கூட்டத்தை ஒழுங்குப்படுத்துவது, தடைகளை சரிசெய்வதற்காக இந்த வாகனங்கள் செல்கின்றன.

ஆசியாவை கலக்கும் அமெரிக்க அதிபரின் கார் பட்டாளம்!

அதிபரின் காருக்கு முன்னால் செல்லும் இந்த வாகனம் வழிகாட்டியாகவும், அரணாகவும் செல்லும். பொதுவாக பிஎம்டபிள்யூ கார் பயன்படுத்தப்படுகிறது. இதுதவிர, தாக்குதல்களை முறியடிக்கும் வீரர்கள் அடங்கிய குழுவும் இந்த பிரிவும், ஆம்புலன்ஸ் வாகனமும் இடம்பெற்றிருக்கும். பின்புறத்தில் பாதுகாப்பு அரணாக வருவதற்கான கார்களும் இடம்பெற்றிருக்கும்.

ஆசியாவை கலக்கும் அமெரிக்க அதிபரின் கார் பட்டாளம்!

மொத்தத்தில், அமெரிக்க அதிபர் டிரம்பின் சுற்றுப்பயணத்தில் அவருக்காக தனி விமானத்தில் பறந்து வரும் கார்கள் ஆசிய மக்களின் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்துள்ளது.

தொடர்புடைய சுவாரஸ்யச் செய்திகள்:

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Secret Service Shares Sneak Peek at Trump’s Motorcade.
Story first published: Friday, November 10, 2017, 12:24 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X