டெஸ்லா மின்சார கார்கள் பற்றி 'அடடே' விஷயங்களும், சுவாரஸ்யங்களும்... !!

டெஸ்லா மின்சார கார்களில் இருக்கும் ரகசியமும், சுவாரஸ்யங்களையும் இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

மின்சார கார் தயாரிப்பில் அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா நிறுவனம் புரட்சியை படைத்திருக்கிறது. மின்சார கார்களின் மீதான உலகின் பார்வையை புதிய கோணத்தில் கொண்டு சென்று வியக்க வைத்தது.

மின்சார கார்களில் இருந்த பல நடைமுறை சிக்கல்களுக்கு சிறப்பான தீர்வு கண்டுபிடித்ததுடன், ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு இணையான செயல்திறனையும், சாதாரண கார்களுக்கு நிகரான ரேஞ்ச் கொண்டதாகவும் தயாரித்து வருகிறது. டெஸ்லா கார்களில் இருக்கும் பல சுவாரஸ்யங்களையும், ரகசியங்களையும் இந்த செய்தியில் காணலாம்.

கார் பெயர்களின் ரகசியம்

கார் பெயர்களின் ரகசியம்

சந்தையில் உள்ள டெஸ்லா கார்கள் டெஸ்லா மாடல் S, மாடல் X என்றும், அடுத்து வர இருக்கும் எஸ்யூவி மாடல் Y என்ற பெயரிலும் வர இருக்கிறது. அதாவது, SEXY என்ற வார்த்தையின் எழுத்துக்களையே பெயர்களாக அமைத்து வருகிறது டெஸ்லா நிறுவனம்.

குழப்படி எப்படி?

இந்தியா உள்ளிட்ட நாடுகளில் விற்பனைக்கு வர இருக்கும் முதல் டெஸ்லா கார் மாடலான டெஸ்லா 3 மாடலுக்கு முதலில் மாடல் E என்று பெயரிட முடிவு செய்யப்பட்டிருந்ததாம். ஆனால், ஃபோர்டு நிறுவனம் மாடல் E காப்புரிமைக்கு விண்ணப்பித்ததால், அந்த எழுத்து பயன்படுத்தப்படாமல் மாடல் 3 என்ற பெயர் பயன்படுத்தப்படுகிறது.

விசேஷம்

டெஸ்லா நிறுவனத்தின் தலைமை அதிகாரி எலான் மஸ்க் ஜேம்ஸ்பாண்ட் பயன்படுத்தப்படும் கார்களையும், அதில் இருக்கும் சிறப்பம்சங்களையும் பெரிதும் சிலாகித்து கூறுபவர். தனிப்பட்ட விருப்பம் கொண்டவர். அதனால், தனது கார்களின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஈஸ்டர் முட்டைகளை தேடும் வகையில் ஒரு ஆப்ஷன் உள்ளது. உரிமையாளர்கள் அந்த ஈஸ்டர் முட்டையை கண்டுபிடிப்பதற்கு சவாலாக அது தரப்படுகிறது.

ஜேம்ஸ்பாண்ட் கார்

டெஸ்லா கார்களின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தின் திரையில் T பட்டனை அழுத்திப் பிடித்தால் சர்வீஸ் எஞ்சினியர்களுக்கான திரை காண்பிக்கும். அதில், 007 என்ற ஜேம்ஸ்பாண்ட் உளவாளி பாத்திரத்தின் எண்களை பதிவு செய்தால், அந்த திரையில் "The Spy Who Loved Me" என்ற ஜேம்ஸ்பாண்ட் படத்தில் பயன்படுத்தப்பட்ட லோட்டஸ் எஸ்பிரிட் எஸ்1 என்ற நீர்மூழ்கி காரின் படம் வரும்.

அப்படியா

அந்த படத்தில் பயன்படுத்தப்பட்ட ஒரிஜினல் லோட்டஸ் எஸ்பிரிட் எஸ்1 நீர்மூழ்கி காரை 8.66 லட்சம் டாலர் விலையில் எலான் மஸ்க் வாங்கியிருக்கிறார். அதனை முழுமையாக நீர்மூழ்கி காராக மாற்றும் திட்டத்திலும் உள்ளாராம்.

கிராஷ் டெஸ்ட்டில் அசத்தல்

2013ம் ஆண்டு அமெரிக்காவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் நடத்திய கிராஷ் டெஸ்ட்டில் டெஸ்லா மாடல் எஸ் கார் 5.4 என்ற பாதுகாப்பு தர மதிப்பீட்டை பெற்றது. பொதுவாக அதிகபட்சமாக 5 நட்சத்திரங்களுக்கு தர மதிப்பீடு வழங்கப்படும் நிலையில், அதனையும் தாண்டி 5.4 என்ற அளவுக்கு பாதுகாப்பு தரத்தில் மிக உயர்வானதாக தர மதிப்பீட்டை பெற்று அசத்தியது.

முதல் கார்

ஒருமுறை பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 300 மைல் [483கிமீ] தூரம் பயணிக்கும் உலகின் முதல் கார் பெருமையை டெஸ்லா மாடல் எஸ் பெற்றது. பொதுவாக எலக்ட்ரிக் கார்கள் குறைவான ரேஞ்ச் கொண்டிருந்த நிலையில், அந்த நினைப்பை டெஸ்லா கார் உடைத்தெறிந்து புதிய சாதனை படைத்தது. மேலும், உலகின் அதிவேக ஆக்சிலரேசன் கொண்ட கார்களில் ஒன்றாகவும் இதனை டெஸ்லா குறிப்பிட்டது.

 500 கிமீ ரேஞ்ச்

டெஸ்லா மாடல் எஸ் காரின் பி100டி மாடலில் உள்ள Ludicrous mode-ல் வைக்கும்போது அதிகபட்சமாக 507 கிமீ தூரம் பயணிக்கும். அத்துடன், அந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 2.5 வினாடிகளில் தொட்டுவிடும். அதாவது, பெட்ரோலில் இயங்கும் உலகின் மிகச் சிறந்த ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு சவால் தரும் விஷயமாக பார்க்கப்படுகிறது. லாஃபெராரி மற்றும் போர்ஷே 918 ஸ்பைடர் ஆகிய கார்களுக்கு அடுத்ததாக உலகின் அதிவேக ஆக்சிலரேசன் கொண்ட தயாரிப்பு நிலை மாடலாக பார்க்கப்படுகிறது.

 டெஸ்லா சன்ரூப்

அதிவேக ஆக்சிலரேசன், அதிக ரேஞ்ச் என்பதையெல்லாம் தாண்டி அடுத்த கட்டத்துக்கு செல்ல இருக்கிறது டெஸ்லா கார்கள். ஆம், கடந்த வாரம் எலான் மஸ்க் அறிவித்த புதிய கண்ணாடி கூரை அமைப்பு டெஸ்லா மாடல் 3 காரில் இடம்பெற இருக்கிறது. இதில் என்ன விசேஷம் என்கிறீர்களா?

மின்சார உற்பத்தி

டெஸ்லா மாடல் 3 காரில் புதிய கண்ணாடி கூரை பொருத்தப்பட உள்ளது. இந்த கண்ணாடி கூரையானது சூரிய ஒளி மின் தகடுகளாக செயல்படும். இதன்மூலமாக, பயணத்தின்போது சார்ஜ் தீர்ந்து போனால் சார்ஜ் நிலையத்தை தேடி அலைய வேண்டியிருக்காது. இதிலிருந்து கூடுதல் மின்சாரம் கிடைக்கும் என்பதால் பயணம் தடைபடாது. இந்த கண்ணாடி கூரையை டெஸ்லாவின் புதிய பிரிவு தயாரிக்கிறது.

அச்சச்சோ...

அமெரிக்காவின் புகழ்பெற்ற புரூக்ளின் பாலத்தில் டெஸ்லா மாடல் எக்ஸ் கார் செல்ல முடியாது. அதாவது, புரூக்ளின் பாலத்தில் அதிகபட்சமாக 2,723 கிலோ எடையுடைய வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதி உண்டு. ஆனால், டெஸ்லா மாடல் எக்ஸ் எஸ்யூவி 3 டன் எடை கொண்டிருப்பதால், அந்த பாலத்தின் வழியாக செல்ல முடியாது.

கவலையே வேண்டாம்

டெஸ்லா காரில் இருக்கும் பயோ வெப்பன் டிஃபென்ஸ் மோடு என்ற காற்று வடிகட்டி வசதி உள்ளது. இதனை ஆன் செய்தால், உடலுக்கு தீங்கு இழைக்கும் நச்சுக் காற்றை உள்ளே வராமல் தடுக்கும். அத்துடன், கார் கேபினில் இருக்கும் நச்சுக் காற்றும் சுத்திகரிப்பு செய்யப்படும்.

 மாஸ்டர் பிளான்

மின்சார கார்கள் மூலமாக பெரும் வரவேற்பையும், வெற்றியையும் பார்த்துவிட்ட டெஸ்லா நிறுவன அதிபர் எலான் மஸ்க் பல புதிய போக்குவரத்து சாதன திட்டங்களுடன் துறுதுறுப்பாக இயங்கி வருகிறார். அடுத்ததாக, ஆளில்லாமல் இயங்கும் நடுத்தர வகை மின்சார டிரக்கையும், மின்சார பஸ்சையும் தயாரிக்க திட்டமிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்
  • மறக்க முடியாத ஹூண்டாய் சான்ட்ரோ கார் பற்றிய தெரியாத தகவல்கள்!
  • இந்தியாவின் நம்பர்-1 சொகுசு கார் தயாரிப்பாளர் ஆடி - சில சுவாரஸ்யங்கள்!
  • ஹூண்டாய் நிறுவனம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்!
Most Read Articles
English summary
Many factors or secrets were taken into account before Elon Musk ventured upon manufacturing the Tesla cars
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X