கார்களை கவர்ந்திழுக்கும் காஷ்மீரின் காந்த மலை பற்றிய சுவாரஸ்யங்கள்!

Written By:

மனிதனின் அசகாய மூளைக்கும், அறிவியலுக்கும் அப்பாற்பட்ட இயற்கை வினோதங்கள் உலகம் முழுவதும் பரவி கிடக்கின்றன. அவ்வாறான அதிசயங்களில் ஒன்றுதான் காஷ்மீரின் காந்த மலை.

காஷ்மீரின், லே- லடாக் பகுதிகளுக்கு சாகச பயணங்கள் மற்றும் சுற்றுலா செல்வோர் இந்த காந்த மலையை தவறவிடுவதில்லை. அப்படி அங்கே என்ன அதிசயம் இருக்கிறது என்பதை ஸ்லைடரில் காணலாம்.

 அமைவிடம்

அமைவிடம்

காஷ்மீர் மாநிலம், லேஹ் மற்றும் லடாக் இடையிலான தேசிய நெடுஞ்சாலையில்தான் இந்த அதிசய காந்த மலை அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 11,000 அடி உயரத்தில் இந்த காந்த மலை அமைந்துள்ளது.

 ஈர்ப்பு சக்தி

ஈர்ப்பு சக்தி

குறிப்பிட்ட காந்த மலைக்கு அருகேயுள்ள சாலையில் போடப்பட்டிருக்கும் கட்டத்திற்குள் கார் அல்லது இதர வாகனங்களை எஞ்சினை ஆஃப் செய்து, நியூட்ரல் கியரில் நிறுத்தும்போது, அது தானாகவே காந்த மலை பக்கம் நகர்கிறது.

வேகம்

வேகம்

எடைக்கு தகுந்தாற்போல் கார்கள் மணிக்கு 10 கிமீ வேகம் முதல் 20 கிமீ வேகம் வரை மலை இருக்கும் திசையில் சாலையின் மேடான பகுதி நோக்கி நகர்கின்றன. இந்த பகுதியில் பறக்கும் விமானங்களை கூட இந்த காந்த மலை கவர்ந்திழுக்கும் சக்தி கொண்டதாக கூறப்படுகிறது.

அறிவிப்பு பலகை

அறிவிப்பு பலகை

குறிப்பிட்ட இடத்தில் வாகனத்தை நிறுத்துவதற்காக சாலையில் குறியீடும் போடப்பட்டுள்ளதுடன், சாலையின் பக்கத்திலேயே அறிவிப்பு பலகையும் இருக்கிறது. கார் மட்டுமல்ல, எந்தவொரு வாகனத்தையும் இந்த காந்த மலை கவர்ந்து இழுக்கிறது. வாகனத்தின் எடைக்கு தகுந்தவாறு நகரும் என்று கூறப்படுகிறது.

புரியாத புதிர்

புரியாத புதிர்

குறிப்பிட்ட மலையில் இருக்கும் அதிகப்படியான மின்காந்த ஈர்ப்பு சக்திதான் இதுபோன்று வாகனங்களை கவர்ந்திழுக்கிறது என்று ஒரு சாராரும், இது ஒளியியல் மாயை [Optical Illusion] என்று மற்றொரு தரப்பு விஞ்ஞானிகளும் கூறுகின்றனர். எனவேதான் இதனை இன்னும் புரியாத புதிராக குறிப்பிடுகின்றனர்.

மிஸ் பண்ணிடாதீக...

மிஸ் பண்ணிடாதீக...

காஷ்மீரின் லே- லடாக் பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோர் இந்த காந்த மலையை காணத் தவறவிடாதீர்.

வீடியோ

காந்த மலையின் அதிசயத்தை வீடியோவில் காணலாம்.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Magnetic Hill or gravity hill located near Leh in Ladakh, India. The alignment of the road with the slope of the background can give the illusion that cars are able to drift upwards.
Story first published: Friday, May 29, 2015, 11:58 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark