Subscribe to DriveSpark

தனது விமானத்தை தேர்தல் பிரச்சார வாகனமாக மாற்றிய டொனால்டு டிரம்ப்!!

Written By:

நம் நாட்டில் தேர்தல் பிரச்சாரத்தின்போது ஜீப்புகளையும், டெம்போ டிராவலர் வேன்களையும் தேர்தல் பிரச்சார வாகனமாக மாற்றி பயன்படுத்துவது வழக்கம். மிஞ்சி போனால், ஹெலிகாப்டர்களை வாடகைக்கு அமர்த்தி, பிரச்சாரம் செய்வர்.

ஆனால், அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் தனது தனிநபர் விமானத்தையே தேர்தல் பிரச்சார வாகனம் போல மாற்றியிருக்கிறார். மேலும், அந்த விமானத்தில்தான் தற்போது அமெரிக்கா முழுவதும் பயணித்து தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். அவரது விமானத்தை பற்றிய சிறப்புத் தகவல்களை தொடர்ந்து ஸ்லைடரில் காணலாம்.

To Follow DriveSpark On Facebook, Click The Like Button
தொழிலதிபர்

தொழிலதிபர்

டொனால்டு டிரம்ஃப் பெரும் கோடீஸ்வரர். பல முன்னணி நிறுவனங்களின் அதிபர். எனவே, அவர் ஏற்கனவே தனி நபர் விமானத்தை பயன்படுத்தி வந்தார். அந்த விமானத்தை தற்போது தேர்தல் பிரச்சார வாகனமாக மாற்றியிருக்கிறார்.

குசும்பு

குசும்பு

அமெரிக்க அதிபர்கள் அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தும் விமானத்தை ஏர் ஃபோர்ஸ் ஒன் என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கின்றனர். அதேபோன்று, அதிபர் நாற்காலியை பிடித்துவிடுவோம் என்ற அசாத்திய நம்பிக்கையில் இருக்கும் குசும்பும், சர்ச்சையும் பிடித்த டிரம்ப் தனது விமானத்தை டிரம்ப் ஃபோர்ஸ் ஒன் என்று செல்லமாக பெயரிட்டு அழைக்கிறார்.

விமான மாடல்

விமான மாடல்

டொனால்டு டிரம்ஃப் பயன்படுத்தும் விமானம் போயிங் நிறுவனத்தின் 757- 500Bs விமானம். பலர் பம்பார்டியர் விமானத்தை பயன்படுத்தும் நிலையில், இந்த பிரம்மாண்ட விமானத்தையே தற்போது தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்வதற்காக பயன்படுத்துகிறார்.

பிரச்சாரம்

பிரச்சாரம்

நம்மூரில் வாகனங்களில் தங்களின் அபிமான அரசியல் தலைவர்களின் பெயர்களை எழுதி ஆதரவு சேர்ப்பது வழக்கம். அதேபோன்று, டிரம்ப் விமானத்தின் வெளிப்புறத்தில் டிரம்ப் என்று அவரது பெயர் பெரிதாக எழுதப்பட்டிருக்கிறது. எனவே, இதனை தேர்தல் பிரச்சார வாகனமாகவே கருத முடிகிறது.

வசதிகள்

வசதிகள்

இந்த விமானத்தில் சொகுசான படுக்கை கொண்ட அறை, சிறிய அளவிலான ஆலோசனை நடத்துவதற்கான அறை, குளியலறை உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன. தேர்தல் பிரச்சாரத்திற்கு தேவையான விஷயங்களை பற்றி ஆராய்ந்து தொகுப்பதற்கான பணிகளையும் இங்கேயே செய்ய முடியும். மொத்தத்தில் டிரம்பின் தற்காலிக தேர்தல் பிரச்சார அலுவலகமாக செயல்படுகிறது.

விருந்தினர்கள்

விருந்தினர்கள்

இந்த விமானத்தில் டொனால்டு டிரம்ப் தவிர்த்து, அவரது சகாக்கள், ஆதரவாளர்கள், பணியாளர்கள் என 43 பேர் வரை பயணிக்கும் இடவசதி கொண்டது.

 தங்க பக்கிள்ஸ்

தங்க பக்கிள்ஸ்

விமானத்தின் சீட் பெல்ட்டின் பிடிப்புப் பட்டை, வாஷ் பேசினின் திருகு பம்புகள் போன்றவை 24 காரட் தங்க முலாம் பூசப்பட்டது. உள்புறத்தில் உள்ள முக்கிய அறையில் 54 இன்ச் டிவி திரை பொருத்தப்பட்டிருக்கிறது. 1,000 திரைப்படங்களின் தொகுப்பு அடங்கிய ஹார்டு டிஸ்க் உள்ளது. இதுபோன்று, எண்ணற்ற வசதிகளை கொண்டிருக்கிறது.

தொழில்நுட்ப அம்சங்கள்

தொழில்நுட்ப அம்சங்கள்

ரோல்ஸ்ராய்ஸ் எஞ்சின் பொருத்தப்பட்ட இந்த விமானமானது மணிக்கு 980 கிமீ வேகத்தில் பறக்கும். அதிகபட்சமாக 7,500 கிமீ தூரம் வரை பறக்கும் அளவுக்கு எரிபொருள் டேங்க் உள்ளது.

 இயக்குதல் செலவு

இயக்குதல் செலவு

100 மில்லியன் டாலர் மதிப்புடைய இந்த விமானத்தை ஒரு மணி நேரம் இயக்குவதற்கு 8,383 டாலர்கள் வரை செலவாகும். இருந்தாலும், நிச்சயம் அதிபராகி விடுவோம் என்ற கனவில் பணத்தை தண்ணீராய் வாரி இறைத்து வருகிறார்.

டொனால்டு டிரம்ப் விமானத்தை வீடியோவில் பார்த்து மகிழுங்கள்.

 

Picture credit: pursuitist

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
See inside Donald Trump's Luxurious private Boeing jet.
Story first published: Monday, June 13, 2016, 13:06 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark