அமெரிக்காவில் தானியங்கி கார் மோதி பெண் பலி

அமெரிக்காவில் தானியங்கி கார் மோதி பெண் பலியாகியுள்ளார். தானியங்கி கார் ஏற்படுத்திய விபத்துகளில் இது முதல் உயிர் பலியாக கருதப்படுகிறது.

By Balasubramanian

சான் பிராசிஸ்கோ: அமெரிக்காவில் தானியங்கி கார் மோதி பெண் பலியாகியுள்ளார். தானியங்கி கார் ஏற்படுத்திய விபத்துகளில் இது முதல் உயிர் பலியாக கருதப்படுகிறது.

அமெரிக்காவில் தானியங்கி கார் மோதி பெண் பலி

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உபேர் உள்ளிட்ட சில நிறுவனங்கள் டிரைவரில்லாமல் இயங்கும் தானியங்கி கார்களை சோதனை முறையில் செயல்படுத்தி வருகின்றனர். எனினும் பாதுகாப்பு கருதி அந்த ஒவ்வொரு காரிலும் டிரைவரும் இருப்பார்.

அமெரிக்காவில் தானியங்கி கார் மோதி பெண் பலி

இந்நிலையில் கடந்த ஞாயிறு இரவு அரிசோனா மாகாணத்தில் உள்ள தெருவில் சைக்கிளுடன் நடந்து சென்ற ஹர்ஸ்பெர்க் என்ற பெண் மீது உபேர் நிறுவனத்தின் தானியங்கி கார் ஒன்று எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் அந்த பெண் உயிரிழந்தார்.

அமெரிக்காவில் தானியங்கி கார் மோதி பெண் பலி

பாதுகாப்பிற்காக அந்த காரில் டிரைவர் இருந்தும் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் இந்த விபத்து நடந்துள்ளது. விபத்தின் போது கார் 64 கிமீ வேகத்தில் வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். டிரைவரில்லாமல் இயங்கும் தானியங்கி கார் பயன்பாட்டிற்கு வந்த பிறகு நடந்த விபத்தில் ஏற்பட்ட முதல் உயிர்பலி சம்பவமாக இது கருதப்படுகிறது.

அமெரிக்காவில் தானியங்கி கார் மோதி பெண் பலி

இதையடுத்து விபத்து நடந்த பகுதியில் தற்காலிகமாக தானியங்கி கார் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. அந்நாட்டு தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் இந்த விபத்திற்கான விசாரணையில் இறங்கியுள்ளது. அதற்காக 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விபத்திற்கான காரணங்களை விசாரித்து வருகின்றனர்.

அமெரிக்காவில் தானியங்கி கார் மோதி பெண் பலி

அரிசோனா மாகாணம் போல் கலிபோர்னியா மாகாண நிர்வாகமும் டிரைவர் இல்லாத தானியங்கி கார்களை இயக்க முடிவு செய்துள்ளது. இதற்கான மசோதா வரும் ஏப்., மாதம் செனட் கூட்டத்தில் முன் வைக்கப்படுகிறது.

அமெரிக்காவில் தானியங்கி கார் மோதி பெண் பலி

இதற்கிடையில் கலிபோர்னியா அரசு தானியங்கி கார் நிறுவனங்களிடம் இதுவரை எந்த முறை, எந்தெந்த தருணங்களில் காரில் இருக்கும் டிரைவர் காரை தன் கட்டுப்பாட்டில் எடுக்கும் சூழ்நிலை ஏற்பட்டது என்ற அறிக்கையையும் கோரியுள்ளது.

Article Published On: Tuesday, March 20, 2018, 12:01 [IST]
English summary
Self-Driving Uber Car Kills Pedestrian in Arizona, Where Robots Roam. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+