சபாஷ்.. சென்னை சுகாதார பணியாளர்கள் பணிக்கு சென்று வர இலவசமாக கார்கள்.. மகிழ்ச்சியில் ஆழ்த்திய ரெவ்!

கொரோனாவிற்கு எதிரான போரில் முக்கிய பங்கினை வகித்து ஹீரோக்களாக மாறியிருக்கும் சுகாதார பணியாளர்களை மகிழ்விக்கும் விதமாக ரெவ் நிறுவனம் இலவச கார்களை வழங்க திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

இலவச கார் வழங்க சென்னை உட்பட 5 நகரங்கள் தேர்வு.. சுகாதார பணியாளர்களை அதிரடி அறிவிப்பால மகிழ்வித்த ரெவ்!

கண்ணுக்கே புலப்படாத ஓர் வரஸ் மனித இனத்திற்கே பெரும் சவாலை விடுத்து வருகின்றது. தங்களை சர்வாதிகார நாடுகள் என அலட்டிக் கொண்டவர்கள்கூட தற்போது பெட்டி பாம்பாக முடங்கியிருக்கின்றனர். ஏனென்றால், அவர்களுக்கு முன்பு எதிரியாக வந்திருப்பவன் அவ்வளவு எளிதில் மனித கண்களுக்கு அகப்படாத ஓர் நுண்ணிய வகை வைரஸ் ஆகும். இதைக் கண்டுதான் உலக நாடுகள் பல தற்போது நடு நடுங்கிக் கொண்டிருக்கின்றன.

இலவச கார் வழங்க சென்னை உட்பட 5 நகரங்கள் தேர்வு.. சுகாதார பணியாளர்களை அதிரடி அறிவிப்பால மகிழ்வித்த ரெவ்!

அதேசமயம், இந்த கண்களுக்கு புலப்படாத வைரசுக்கு எதிரான போராட்டத்தையும் அவை தீவிரப்படுத்தி வருகின்றன. குறிப்பாக, கொரோனா எனப்படும் ஒற்றை வைரசுக்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் ஒன்று திரண்டிருக்கின்றன என்றுகூட கூறலாம். அந்தளவிற்கு பல நாடுகள் கூட்டு சேர்ந்து கோரோனாவை ஒழித்துக்கட்டும் முயற்சியில் களமிறங்கியிருக்கின்றன.

இலவச கார் வழங்க சென்னை உட்பட 5 நகரங்கள் தேர்வு.. சுகாதார பணியாளர்களை அதிரடி அறிவிப்பால மகிழ்வித்த ரெவ்!

இந்த போராட்டத்தில் உலக நாடுகள் அனைத்தும் அதன் சுதாரத்துறையே மேம்படுத்துவது மிக முக்கிய தேவையாக உள்ளது. ஆகையால், முன்பு பாதுகாப்பு துறைக்கு அதிக நிதியை ஒதுக்கிய நாடுகள்கூட இனி வரும் காலங்களில் மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறைகளுக்கு அதிக நிதியை ஒதுக்க திட்டமிட்டிருக்கின்றன. அதேசமயம், பெருமளவிலான தொகையை தற்போதைய கொரோனாவிற்கு எதிரான போராட்டத்திற்கும் ஒதுக்கி வருக்கின்றன.

இலவச கார் வழங்க சென்னை உட்பட 5 நகரங்கள் தேர்வு.. சுகாதார பணியாளர்களை அதிரடி அறிவிப்பால மகிழ்வித்த ரெவ்!

ஏனென்றால் கொரோனா வைரஸ் அதன் தீர தன்மை மூலம் புதிய பாடத்தை மனிதர்களுக்கு கற்றுக் புகட்டியுள்ளது. எனவே, தற்போது சுகாதாரம் மற்றும் மருத்தும் சார்ந்து பணி செய்யும் அனைவரும் நிஜ வாழ்க்கை ஹீரோக்களாக மாறியிருக்கின்றனர். தொடர்ந்து, அவர்களுக்கு வலு சேர்க்கும் விதமாக அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் உதவிகளை வாரி வழங்கி ஆரம்பித்திருக்கின்றன.

இலவச கார் வழங்க சென்னை உட்பட 5 நகரங்கள் தேர்வு.. சுகாதார பணியாளர்களை அதிரடி அறிவிப்பால மகிழ்வித்த ரெவ்!

அந்தவகையில், பிரபல ரெவ் (Self-driving mobility startup Revv) எனப்படும் வாடகை வாகன நிறுவனம் மருத்துவம் மற்றும் சுகாதாரம் சார்ந்து பணி புரிபவர்களுக்கு இலவச கார் சேவையை வழங்க திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனம் ஓர் கார்களை சுயமாக இயக்க வாடகைக்கு வழங்கும் தனியார் அமைப்பு ஆகும்.

தற்போது கொரோனா தீவிரத்தின் காரணமாக நாடு முழுவதும் மிக நெருக்கடியான சூழல் நிலவி வருகின்றது.

இலவச கார் வழங்க சென்னை உட்பட 5 நகரங்கள் தேர்வு.. சுகாதார பணியாளர்களை அதிரடி அறிவிப்பால மகிழ்வித்த ரெவ்!

குறிப்பாக, வெளியே சென்று வருவதற்கான வசதி முழுவதுமாக தடை செய்யப்படுள்ளது. இம்மாதிரியான சூழ்நிலையில் வீடு மற்றும் மருத்துவமனைக்கு சென்று வர சுகாதாரப் பணியாளர்கள் அதிகளவில் சிக்கலைச் சந்தித்து வருகின்றனர்.

ஆகையால், இவர்களுக்கு உதவும் விதமாக ஆயிரத்திற்கும் அதிகமான கார்களை ரெவ் நிறுவனம் இலவசாக வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த வசதியை நாட்டின் முக்கியமான ஐந்து நகரங்களுக்கு அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இலவச கார் வழங்க சென்னை உட்பட 5 நகரங்கள் தேர்வு.. சுகாதார பணியாளர்களை அதிரடி அறிவிப்பால மகிழ்வித்த ரெவ்!

அதில், சென்னையும் அடங்கும். இத்துடன், தலைநகர் டெல்லி, பெங்களூரு, மும்பை மற்றும் புனே ஆகிய நகரங்களிலும் ரெவ் அதன் இலவச சேவையை மருத்துவர் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு வழங்க இருக்கின்றது. தற்போது, ஆயிரம் கார்களே மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளநிலையில், தேவைப்பட்டால் கூடுதல் கார்களையும் வழங்க இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இலவச கார் வழங்க சென்னை உட்பட 5 நகரங்கள் தேர்வு.. சுகாதார பணியாளர்களை அதிரடி அறிவிப்பால மகிழ்வித்த ரெவ்!

ரெவ் நிறுவனத்தின் இந்த சேவையைப் பெற விரும்பும் சுகாதார மற்றும் மருத்துவர்கள் குறிப்பிட்ட ஆவணங்களை சமர்பிக்க வேண்டியுள்ளது. முன்னதாக 9250035555 என்ற சிறப்பு எண்ணில் தொடர்பு கொண்டு காருக்கான முன் பதிவை செய்ய வேண்டும். இதன் பின்னரே குறிப்பிட்ட பொதுப் பணியாளருக்கு ரெவ் நிறுவனம் காரை இலவசமாக வழங்கும்.

இலவச கார் வழங்க சென்னை உட்பட 5 நகரங்கள் தேர்வு.. சுகாதார பணியாளர்களை அதிரடி அறிவிப்பால மகிழ்வித்த ரெவ்!

தொடர்ந்து, சிறப்பு எண்ணைப் போலவே அதன் அதிகாரப்பூர்வ தளத்திலும் இதற்கான தனி பக்கத்தை உருவாக்கியுள்ளது. ஆகையால், அந்த பக்கத்தில் விசிட் செய்தும் இந்த இலவச காருக்கான பதிவை சுகாதாரப் பணியாளர்களால் செய்ய முடியும்.

இலவச கார் வழங்க சென்னை உட்பட 5 நகரங்கள் தேர்வு.. சுகாதார பணியாளர்களை அதிரடி அறிவிப்பால மகிழ்வித்த ரெவ்!

இதுகுறித்து ரெவ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கொரோனா வைரசை எதிர்த்து போராடுவதில் சுகாதாரப் பணியாளர்களே முன்னணியில் இருக்கின்றனர். அவர்கள்தான் இப்போதைய ஹீரோ. பொதுப்போக்குவரத்து போக்குவரத்து கிடைக்காததால் மருத்துவமனை செல்வதில் அவர்கள் அதிகம் சிக்கலைச் சந்தித்து வருகின்றனர். இந்நிலையை போக்கவே நாங்கள் இந்த உதவியை வழங்க இருக்கின்றோம்" என தெரிவித்துள்ளது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Self-Driving Mobility StartUp Revv Announced 1000 Free Cars For Health Worker. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X