சாலையில் மிதக்கும் சொகுசு கப்பலை வாங்கிய இந்த நட்சத்திர தம்பதியை தெரியுமா? விலையை கேட்டால் தலையே சுத்துது!!
நடிகர், நடிகைகள் சொகுசு கார்களை வாங்கி குவித்துக் கொண்டிருப்பதை தொடர்ந்து பார்த்து வருகிறோம். சில சினிமா ஸ்டார்கள் கோடிகளில் விலையை கொண்ட லக்சரி கார்களை கூட அசால்ட்டாக புதியது புதியதாக வாங்கிக் கொண்டிருக்கின்றனர். அந்த வரிசையில், இங்கு ஒரு சினிமா நட்சத்திர தம்பதி விலையுயர்ந்த ரேஞ்ச் ரோவர் காரை வாங்கி மாஸ் காட்டியுள்ளனர். யார் இந்த நட்சத்திர தம்பதி என்பதையும், அவர்கள் வாங்கியுள்ள ரேஞ்ச் ரோவர் காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம், வாங்க.
பெரிய வெள்ளித்திரை சினிமாவுக்கு இணையாக, தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் ரியால்டி நிகழ்ச்சிகள் மூலமாகவும் நிறைய நடிகர், நடிகையினர் மக்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளனர். அத்தகையவர்களுள் ஒருவர்தான், இந்தி தொலைக்காட்சி சீரியல் நடிகை திஷா பர்மர். 2012ஆம் ஆண்டில் இருந்து பல்வேறு விதமான சீரியல்களில் நடித்துள்ள திஷா பர்மர், வீட்டு இல்லத்தரசிகளின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார்.

ஆனால், குழந்தைக்கு தாயானதில் இருந்து கடந்த 1 வருடத்திற்கும் மேலாக திஷா பர்மர் எந்தவொரு சீரியலிலும் நடிப்பதில்லை. கடந்த 2021ஆம் ஆண்டில் ராகுல் வைத்யா என்பவருடன் நடிகை திஷா பர்மருக்கு திருமணம் நடந்தது. ராகுல் வைத்யா ஓர் பிரபலமான பாடகர்; இசையமைப்பாளரும் கூட. இந்தியில் பிரபலமான இந்தியன் ஐடல் என்கிற பாடகருக்கான ரியால்ட்டி ஷோவில் 2வது இடத்தை பிடித்தவர்.
நடிகை திஷா பர்மர் மற்றும் பாடகர் ராகுல் வைத்யா தம்பதிக்கு கடந்த 2023ஆம் ஆண்டில் குழந்தை பிறந்தது. இந்த நிலையில், இந்த நட்சத்திர தம்பதியினர் புதியதாக விலையுயர்ந்த ரேஞ்ச் ரோவர் காரை வாங்கியுள்ளனர். இதுகுறித்து இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், கருப்பு நிறத்திலான புத்தம் புதிய ரேஞ்ச் ரோவர் காரில் இருந்து திஷா பர்மர் இறங்கி வெளியே வரும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த தம்பதியினர் வாங்கியதிலேயே விலையுயர்ந்த கார் இது என கூறப்படுகிறது. இவர்கள் வாங்கியுள்ள ரேஞ்ச் ரோவர் காரை பற்றி பார்த்தோமேயானால், உலகிலேயே மிகவும் பிரபலமான லக்சரி எஸ்யூவி கார்களுள் ஒன்றாக இது விளங்குகிறது. இந்தியாவில் தற்சமயம் ரேஞ்ச் ரோவர் கார்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.2.83 கோடியில் இருந்து ரூ.4.47 கோடி வரையில் உள்ளன. இவை எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும். ஆன்-ரோடு விலைகள் இன்னும் பல இலட்சங்கள் அதிகமாக இருக்கும்.
இதன் காரணமாகவே, ரேஞ்ச் ரோவர் காரை தொழிலதிபர்களும், திஷா பர்மர் போன்ற சினிமா ஸ்டார்களும் மட்டுமே வாங்குகின்றனர். சவுகரியம் மற்றும் பாதுகாப்பு விஷயங்களில் ரேஞ்ச் ரோவரை அடிச்சிக்கவே முடியாது. இந்த காருக்கு உள்ளே பெரிய டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் டிஸ்பிளே, டிஜிட்டல் தரத்தில் டிரைவருக்கான இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 24 வழிகளில் அட்ஜெஸ் செய்யக்கூடிய ஹீட்டட் & கூல்டு இருக்கைகள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
இதில் இருக்கைகள் மசாஜ் வசதி உடன் கொடுக்கப்படுகின்றன. இவை மட்டுமின்றி, ஹீட்டட் விண்ட்ஸ்க்ரீன், கனெக்டட் கார் தொழிற்நுட்ப வசதிகள், அதிக எண்ணிக்கையில் டச் ஸ்க்ரீன்ஸ், ஃப்ளஷ்-ஃபிட்டிங் டோர் ஹேண்டில் போன்றவற்றையும் ரேஞ்ச் ரோவர் பெறுகிறது. இதேபோல், ரேஞ்ச் ரோவர் காரில் பல்வேறு விதமான என்ஜின் ஆப்ஷன்கள் கொடுக்கப்படுகின்றன.
அவற்றுள் பவர்ஃபுல்லான என்ஜின் என்றால் அது 4.4 லிட்டர் ட்வின்-டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் ஆகும். அதிகப்பட்சமாக 523 எச்பி மற்றும் 750 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இது என்ஜினின் ஆற்றலை காரின் 4 சக்கரங்களுக்கும் வழங்குகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரூ.2.83 கோடி விலை என்பதில் இருந்து இந்த கார் எந்த அளவிற்கு லக்சரியானதாக உருவாக்கப்படுகிறது என்பதை அறியலாம். உலகளவில் பல விஐபிகளிடம் ரேஞ்ச் ரோவர் கார் உள்ளது. அந்த விஐபிகளுள் ஒருவராக இந்தி சீரியல் நடிகை திஷா பர்மர் இணைந்துள்ளார். ரேஞ்ச் ரோவர் கார்களின் முக்கிய சிறப்பம்சமே அவற்றின் பிரம்மாண்ட உடலமைப்பு ஆகும். தற்போது திஷா பர்மர் வாங்கியிருக்கும் காரின் நீளம் சுமார் 5 மீட்டர்களுக்கும் அதிகமாகும்.


Click it and Unblock the Notifications








