அவரை போலவே காரும் அழகா இருக்கு... 21வது பிறந்த நாள், புது காருடன் கொண்டாட்டம்- சீரியல் நடிகையின் அசூர வளர்ச்சி
சினிமாவில் நடிக்க ஆரம்பித்துவிட்டாலே செல்வ செழிப்பான வாழ்க்கையில் வாழ ஆரம்பித்துவிடலாம். இதனை பல நடிகர், நடிகைகளின் வாழ்வில் பார்த்துள்ளோம். இதற்கு வெள்ளி திரையில் தான் நடிக்க வேண்டும் என்றில்லை, சின்னத்திரையில் அதாவது தொலைக்காட்சி சீரியல்களில் நடிப்பவர்கள் கூட அவ்வப்போது புது, புது கார்களை வாங்குவதை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில், பிரபல சீரியல் நடிகை ஒருவர் புதியதாக கியா செல்டோஸ் காரை வாங்கியுள்ளார். யார் அந்த சீரியல் நடிகை? அவர் வாங்கியுள்ள செல்டோஸ் காரின் சிறப்பம்சங்கள் என்ன? என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
மவுனா குட்டேமானே (Mouna Guddemane), பிரபல கன்னட சீரியல் நடிகை. கன்னட மொழியில் வெளியான பிரபலமான ராமச்சாரி தொலைக்காட்சி தொடரில் முக்கியமான சாருலதா கதாபாத்திரத்தில் நடித்து கர்நாடக மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர். தமிழ்நாட்டிலும் சிலருக்கு மவுனா குட்டேமானேவை பற்றி தெரிந்திருக்கும்.

ராமச்சாரி டிவி சீரியலில் சிறப்பாக நடித்ததற்காக சில பல விருதுகளை மவுனா பெற்றுள்ளார். கர்நாடகா மாநிலம் மங்களூரை சேர்ந்தவரான மவுனா குட்டேமானே இளம் வயதிலேயே சின்னத்திரையில் நடிக்க துவங்கிவிட்டார். 2020ஆம் ஆண்டில் 'மிஸ் டீன் துலுநாடு' பட்டத்தை வென்றவருக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்புகள் கதவை தட்ட ஆரம்பித்தன.
ஆனால், அப்போது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போதிலும் ஒருபக்கம் சீரியலில் நடிக்கும் பணியையும் கணக்கச்சிதமாக மவுனா மேற்கொண்டார். இந்த நிலையில், புதியதாக கியா செல்டோஸ் காரை தற்போது வாங்கியுள்ளார். தனது 21வது பிறந்தநாளை முன்னிட்டு இந்த காரை வாங்கியுள்ளதாக மவுனா குட்டேமானே தனது சமூக வலைத்தள பக்கங்களில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரது இன்ஸ்டாகிராம் பதிவில், "எனது கனவை நோக்கி ஒரு சிறிய நகர்வு" என குறிப்பிட்டுள்ளார். புதிய கார் வாங்கியிருப்பதற்கு மவுனாவின் நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மைசூரில் சாமுண்டி மலை மீது உள்ள சாமுண்டீஸ்வரி கோயிலில் காருக்கு ஒரு சிறப்பு பூஜையை போட்டுவிட்டு, அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் மவுனா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
சாமுண்டி மலை மீது இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளதால், சுற்றிலும் பனி சூழ்ந்திருக்க மவுனா குட்டேமோனேவின் கியா செல்டோஸ் ரம்மியமாக காட்சியளிக்கிறது. மற்றப்படி, செல்டோஸ் காரில் எந்த வேரியண்ட்டை சீரியல் நடிகை மவுனா வாங்கியுள்ளார் என்பது தெரியவில்லை. அதேபோல், மவுனாவின் செல்டோஸ் காரில் எந்த என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது என்பதும் தெரியவில்லை.

இந்தியாவில் கியா செல்டோஸ் கார் எச்.டி.இ வேரியண்ட்டில் இருந்து எச்.டி.எக்ஸ் வேரியண்ட் வரையில் பல்வேறு விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.10.90 லட்சத்தில் இருந்து ரூ.20.35 லட்சம் வரையில் உள்ளன. சில்வர், க்ளீயர் வெள்ளை, கிராவிட்டி கிரே, பெவ்டர் ஆலிவ், அரோரா பிளாக் பேர்ல் என மொத்தம் 7 விதமான பெயிண்ட் ஆப்ஷன்களில் கியா செல்டோஸ் கார் கிடைக்கிறது.
இதில், க்ளீயர் வெள்ளை பெயிண்ட் ஆப்ஷனில் செல்டோஸ் காரை நடிகை மவுனா குட்டேமானே வாங்கியுள்ளார். இந்திய மார்க்கெட்டில் கியா செல்டோஸ் கார் 1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என மொத்தம் 3 விதமான பெயிண்ட் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவற்றுடன், 6-ஸ்பீடு மேனுவல், சிவிடி மற்றும் 7-ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், சினிமா நடிகையாகிவிட்டாலே புதியதாக காரை வாங்கும் அளவிற்கு பணம் சேர்ந்துவிடும். பணம் சேரவில்லை என்றாலும், புதியதாக காரை வாங்குவது சினிமா ஸ்டார்களுக்கு அவசியமான ஒன்றாகும். ஏனெனில், அதனை வைத்தே அவர்களது ஸ்டேட்டஸ் நிர்ணயிக்கப்படுகிறது. நடிகை மவுனா குட்டேமானே கொரியன் ஸ்டைலிலான கியா செல்டோஸ் காரை வாங்கியிருப்பது கார்கள் பற்றிய அவரது புரிதலை காட்டுகிறது.


Click it and Unblock the Notifications









