மீடியா பிரபலத்திடம் இருந்து வாங்கிய சூப்பர்காரில் இத்தனை பிரச்சனைகளா...!! புலம்பி தீர்த்த புதிய உரிமையாளர்...

அமெரிக்க மீடியா பிரபலமான பாரிஸ் ஹில்டனின் 2006 மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்.எல்.ஆர் மெக்லாரன் கார் சமீபத்தில் இணையம் வழியாக ஏலத்திற்கு வந்தது. இதனை வாங்கிய மற்றொரு பிரபலம் இந்த காருக்கு செலவு செய்துள்ள தொகை இணையத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

மீடியா பிரபலத்திடம் இருந்து வாங்கிய சூப்பர்காரில் இத்தனை பிரச்சனைகளா...!! புலம்பி தீர்த்த புதிய உரிமையாளர்...

ஜெர்மனை சேர்ந்த மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனமும், பிரிட்டிஷ் ஆட்டோமொபைல் நிறுவனமான மெக்லாரனும் இணைந்து வடிவமைத்து 2003ல் இருந்து 2009 வரையில் விற்பனை செய்த மாடல் தான் மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்.எல்.ஆர் மெக்லாரன்.

மீடியா பிரபலத்திடம் இருந்து வாங்கிய சூப்பர்காரில் இத்தனை பிரச்சனைகளா...!! புலம்பி தீர்த்த புதிய உரிமையாளர்...

உலகின் மிகவும் அரிதான சூப்பர் கார்களுள் ஒன்றாக விளங்கும் இது வெறும் 2,100 யூனிட்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டது. 463,000 டாலர்களில் (ஏறக்குறைய ரூ.3.3 கோடி) இந்த மெர்சிடிஸ்-மெக்லாரன் காரை வாங்கிய பாரிஸ் ஹில்டன் நீண்ட நாட்களுக்கு வைத்திருக்கவில்லை.

மீடியா பிரபலத்திடம் இருந்து வாங்கிய சூப்பர்காரில் இத்தனை பிரச்சனைகளா...!! புலம்பி தீர்த்த புதிய உரிமையாளர்...

ஏனெனில் இந்த சூப்பர்காரை மற்றொரு பிரபலம் சொந்தமாக்கியுள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் காரில் இருந்த பழுதுகளை சரி செய்ய மெக்கானிக் கடைக்கு எடுத்த சென்ற இந்த புதிய உரிமையாளர், இந்த சரிபார்ப்பிற்கு எவ்வளவு செலவழிக்கப்பட்டுள்ளது என்பதை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

ஹூவிஸ் கேரேஜ் என்ற யுடியூப் சேனலில் பதிவிடப்பட்டுள்ள அந்த வீடியோவினை தான் மேலே காண்கிறீர்கள். பாரிஸ் ஹில்டனின் இந்த மெக்லாரன் எஸ்.எல்.ஆர் கார் இணைய ஏலத்தில் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.1.3 கோடியில் விற்கப்பட்டுள்ளதாக மோட்டார் 1 செய்திதளம் தெரிவித்துள்ளது.

மீடியா பிரபலத்திடம் இருந்து வாங்கிய சூப்பர்காரில் இத்தனை பிரச்சனைகளா...!! புலம்பி தீர்த்த புதிய உரிமையாளர்...

புதிய உரிமையாளர் இந்த சூப்பர்காரை சிறிய ஆயில் மாற்றத்திற்காகவே அங்கீகாரம் பெற்ற மெக்கானிக் கடைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் இந்த காரில் முக்கியமான பழுதுகள் உள்ளன, அவற்றையும் சரி செய்ய வேண்டும் என்பது மெக்கானிக் கூறும் வரையில் அவருக்கு தெரியவில்லை.

மீடியா பிரபலத்திடம் இருந்து வாங்கிய சூப்பர்காரில் இத்தனை பிரச்சனைகளா...!! புலம்பி தீர்த்த புதிய உரிமையாளர்...

காரை பரிசோதித்து பார்த்த மெக்கானிக் பழுதுகளை நீண்ட லிஸ்ட் போட்டுள்ளார். அவற்றை வரிசையாக மெக்கானின் கூற, புதிய உரிமையாளர் கேட்டு கொள்கிறார். நமக்கு சில பழுதுகள் என்னென்ன என்பது சரியாக புரியவில்லை.

கேட்ட வரையில், ஸ்டேரிங் சக்கரத்தில் பழுது உள்ளது, இதனை சரிசெய்ய 6,270 டாலர்கள் தேவைப்படும். மெர்சிடிஸ் ஸ்டைலிலான சக்கரத்தில் வளைவு ஒன்று இருந்துள்ளது. இதனை பழுதுபார்க்க 1,899 டாலர்கள் ஆகும் என மெக்கானிக் கூறுகிறார்.

மீடியா பிரபலத்திடம் இருந்து வாங்கிய சூப்பர்காரில் இத்தனை பிரச்சனைகளா...!! புலம்பி தீர்த்த புதிய உரிமையாளர்...

மேலும் புதிய பவர் ஸ்டேரிங் பம்ப்-ஐ 2,220 டாலர்களில் பொருத்த வேண்டும் என்றும் வீடியோவில் மெக்கானிக் தெரிவித்துள்ளார். இவற்றுடன் காரின் பேட்டரிகளும் 1,350 டாலர்களில் மாற்றப்பட வேண்டியுள்ளதாக கூறியுள்ள மெக்கானிக், அவற்றில் ஒன்றை தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து ஒரிஜினலாக வாங்க வேண்டும் என்றுள்ளார்.

மீடியா பிரபலத்திடம் இருந்து வாங்கிய சூப்பர்காரில் இத்தனை பிரச்சனைகளா...!! புலம்பி தீர்த்த புதிய உரிமையாளர்...

இவை மட்டுமின்றி அதே 1,350 டாலர்களில் ப்ரேக் லைன்களையும், 1,700 டாலர்களில் டயர் அழுத்தத்தை கண்காணிக்கும் சென்சார்களையும், 1,250 டாலர்களில் சூடாகும் ப்ரேக் காலிபர்களை குளிர்விப்பான் குழாய்களையும் வாங்க வேண்டிய கட்டாயத்திற்குள் புது உரிமையாளர் தள்ளப்பட்டுள்ளார்.

மீடியா பிரபலத்திடம் இருந்து வாங்கிய சூப்பர்காரில் இத்தனை பிரச்சனைகளா...!! புலம்பி தீர்த்த புதிய உரிமையாளர்...

இவை எல்லாவற்றையும் காட்டிலும் அதிகப்பட்சமாக இந்த மெர்சிடிஸ் எஸ்.எல்.ஆர் காரின் சூப்பர்சார்ஜ்டு வி8 என்ஜினை மீண்டும் புதுப்பிப்பதற்கு சுமார் 34,565 டாலர்களை செலவிட வேண்டியதாக இருக்கும் என மெக்கானிக் கூறியுள்ளார். இந்திய ரூபாயில் இதன் மதிப்பே கிட்டத்தட்ட ரூ.25 லட்சத்தை தொடுகிறது. இவ்வளவு செலவு செய்வதற்கு புதிய மெர்சிடிஸ் ஏ-க்ளாஸ் செடான் காரையே வாங்கியிருக்கலாம் என்று தான் நிச்சயம் அதன் புதிய உரிமையாளருக்கு தோன்றி இருக்கும்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Service cost of Paris Hilton's Ex McLaren SLR can buy you base A-Class sedan.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X