எஸ்இடிசி பஸ்களில் பொருத்தப்படும் புதிய கருவி! இதனால் கோடி கணக்குல லாபம் வரப்போகுதா?
தமிழகத்தில் இயங்கி வரும் எஸ்இடிசி பஸ்களில் சிஎன்ஜி மற்றும் எல்என்ஜி கிட்களை பொருத்தி பயன்படுத்த தமிழக அரசு முடிவு செய்து. அதற்கான முதற்கட்ட முயற்சிகளை கையில் எடுத்துள்ளது. இதன்படி சென்னையில் இருந்து திருச்சி செல்லும் எஸ்இடிசி பஸ்களில் இப்படியாக சிஎன்ஜி அல்லது எல்என்ஜி கிட்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியா முழுவதும் பஸ் போக்குவரத்து என்பது மிக முக்கியமான போக்குவரத்து வசதியாக இருக்கிறது. இதையெல்லாம் மாநில அரசுகள் கையாண்டு வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை ஒவ்வொரு பகுதிக்கும் போக்குவரத்து கழகங்கள் அமைக்கப்பட்ட அதன் மூலம் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இது மட்டுமல்லாமல் விரைவு போக்குவரத்து கழகம் என தமிழகத்தில் நீண்ட தூர பயணத்திற்காக ஒரு கழகம் ஆரம்பிக்கப்பட்டு அதில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது இயங்கும் பஸ்கள் எல்லாம் டீசல் பஸ்களாக இருக்கும் நிலையில் இதையெல்லாம் மாற்றி மாற்று எரிபொருளில் இயங்கும் பஸ்களை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்காக தமிழக அரசு முடிவு செய்திருந்தது. அதன்படி சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் ஒரு பஸ்ஸை சிஎன்ஜி அல்லது எரிபொருள் மூலம் இயங்கும் பஸ்ஸாக மாற்றியது.
சிஎன்ஜி/ எல்என்ஜி மூலம் எரிபொருளில் பெரிய அளவு சிக்கனத்தை செய்ய முடியும் என்பதால் இந்த முயற்சியை மேற்கொண்ட நிலையில், இது நல்ல பலன் அளித்தது. இந்நிலையில் இதை விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இதையடுத்து நீண்ட தூர பயணம் செய்யும் எஸ்இடிசி பஸ்களிலும் இந்த சிஎன்ஜி அல்லது எல்என்ஜி மூலம் இயங்கும் கிட்டுகளை பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சென்னையில் இருந்து திருச்சி வரை செல்லும் எஸ்இடிசி பஸ்ஸில் இது பொருத்தப்பட்டுள்ளது.
இதில் ஒரு முறை சிஎன்ஜி/எல்என்ஜி நிரப்பி விட்டால் சென்னையில் கிளம்பும் இந்த பஸ் திருச்சி வரை தாராளமாக சென்று விடும் இதை கணக்கிட்டு தான் இந்த பஸ்ஸில் முதல் கட்டமாக இது பொருத்தப்பட்டுள்ளது. இது வெற்றியடையும் பட்சத்தில் மற்ற ரூட்களில் இயங்கும் எஸ்இடிசி பஸ்களிலும் இந்த கிட் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கிட் பொருத்தப்படுவதால் போக்குவரத்து கழகங்களுக்கு மிகப்பெரிய லாபம் ஏற்படுகிறது.
தற்போது போக்குவரத்து கழகங்கள் தாங்கள் செய்யும் மொத்த செலவுகளில் 27 சதவீதம் டீசலுக்காகவே செலவு செய்து வருகின்றனர். இது செலவை குறைக்கும் பட்சத்தில் அந்த படம் மிச்சமாகும் என்பதால் அதற்கான நடவடிக்கையாக தான். இந்த சிஎன்ஜி அல்லது எல்என்ஜி கிட்களை பொருத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதை பொறுத்து அதன் மூலம் பஸ்கள் ஒரு கிலோ மீட்டருக்கு தற்போது செலவாகும் செலவைவிட ரூபாய் 50 பைசா முதல் 5 ரூபாய் வரை செலவை மிச்சம் செய்ய முடியும் என கணக்கிடப்பட்டுள்ளது.
மேலும் சிஎன்ஜி எரிபொருள் மூலம் பஸ்களை இயக்குவதன் மூலம் டீசல் எரிபொருளை பயன்படுத்துவதால் ஏற்படும் மாச அளவு கணிசமான அளவு குறைகிறது. இதனால் சுற்றுச்சூழலுக்கும் நன்மை ஏற்படுகிறது. இதன் காரணமாகவே மத்திய அரசும் இப்படியான மாற்று எரிபொருளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க பரிந்துரை செய்து வருகிறது.
தற்போது தமிழக அரசு இதை ஒரு சோதனை முயற்சியாகவே செய்து வருகிறது. சிஎன்ஜி மற்றும் எல்என்ஜி ஆகிய எரிபொருளின் கிடைக்கும் தன்மைக்கு ஏற்ப படிப்படியாக இது ஒவ்வொரு பஸ்களிலும் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்காலத்தில் டீசல் மூலம் இயங்கும் பஸ்களை பயன்பாட்டில் இல்லாமல் முற்றிலுமாக எலெக்ட்ரிக் அல்லது சிஎன்ஜி மூலம் இயங்கும் பஸ்கள் தான் அதிகம் பயன்பாட்டில் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
இதற்கு முக்கியமாக சிஎன்ஜி கிடைக்கும் அளவை அதிகரிக்க வேண்டும் மேலும் சிஎன்ஜி எரிபொருள் பல்வேறு இடங்களில் கிடைக்கும் வகையில் பல்வேறு விதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இந்தியாவிலேயே அதிக அளவிலான சிஎன்ஜி மற்றும் எல்என்ஜி ஆகிய எரிபொருட்கள் தயாரிக்கப்பட வேண்டும். இதையெல்லாம் நடந்தால் நிச்சயம் எதிர்காலத்தில் மிகப்பெரிய மாற்றம் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டீசல் மூலம் இயங்கும் இயந்திரம் அதிகம் மாசுவை வெளியேற்றுகிறது. இதை தடுப்பதற்காக இயற்கை மூலம் கிடைக்கும் எரிவாயுவை பயன்படுத்தி வாகனங்களை இயக்க தற்போது அரசு பரிந்துரை செய்து வரும் நிலையில், அரசு வாகனங்களில் இதை உட்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தான் இந்த அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இது நிச்சயம் வரவேற்கத்தக்கது தான்.


Click it and Unblock the Notifications








