பச்சை நிறத்தில் வரிசை கட்டி நிற்கும் புதிய பஸ்கள்! இதுல இவ்வளவு வசதிகள் இருக்குதா?

தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் பயன்பாட்டிற்காக தற்போது புதிதாக பச்சை நிறத்தில் பிஎஸ்6 இன்ஜினுடன் கூடிய சீட்டர் மற்றும் ஸ்லீப்பர் பஸ்கள் வாங்கப்பட்டுள்ளன. இதன் முதல் கட்ட 10% டெலிவரி செய்யப்பட்டுள்ளன. இதன் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இந்த பஸ்ஸில் புதிதாக என்னென்ன அம்சங்கள் எல்லாம் இருக்கிறது. தற்போது உள்ள பஸ்க்கும் இந்த பஸ்க்கும் என்னென்ன வித்தியாசம் இருக்கிறது? உள்ளிட்ட அனைத்து விபரங்களை தான் இங்கே விரிவாக காண போகிறோம்.

தமிழ்நாடு அரசின் விரைவு போக்குவரத்து கழகம் நீண்ட தூரத்தில் இருக்கும் நகரங்களை இணைக்கும் ரூட்டுகளில் பஸ்களை இயக்கி வருகிறது. முக்கியமாக தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் பல்வேறு பஸ்கள் இந்த விரைவு போக்குவரத்து கழக பஸ்களாக இருக்கின்றன. இந்த ரூட்டுகளில் தனியார் பஸ்கள் தான் தற்போது ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அதற்கு போட்டியாக அரசும் பல்வேறு வசதி கொண்ட பஸ்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

setc new bs6 bus

இந்நிலையில் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக பயன்பாட்டிற்காக புதிதாக பஸ்கள் வாங்கப்பட்டுள்ளன. அசோக் லேலண்ட் நிறுவனத்தின் சேஸிஸ் கொண்டு இந்த பஸ்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பஸ்களில் கட்டுமானத்தை கர்நாடக மாநிலம் பெலகாவியில் உள்ள எம்ஜி என்ற நிறுவனம் செய்துள்ளது. சுமார் 200 பஸ்கள் வரை புதிதாக கட்டமைக்க ஆர்டர் வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதில் முதல் 10 பஸ்கள் முழுமையாக கட்டமைக்கப்பட்டு சென்னையில் உள்ள விரைவு போக்குவரத்து கழக தலைமை நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அடுத்தடுத்த வாரங்களில் பஸ்கள் எல்லாம் தயாராகி வரிசையாக இங்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படியாக வரும் பஸ்கள் எல்லாம் ரூட்டுகள் பிரிக்கப்பட்டு பயன்பாட்டிற்காக அனுப்பி வைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் மக்கள் மத்தியில் இருக்கிறது.

setc new bs6 bus

புதிதாக கட்டமைக்கப்பட்ட உள்ள இந்த பஸ்கள் எல்லாம் இருக்கை வசதி மற்றும் படுக்கை வசதி ஆகிய இரண்டு வசதிகளையும் கொண்ட மக்களாக இருக்கின்றன. இந்த பஸ்களில் கீழ் பகுதியில் சீட்டுகள் அமைக்கப்பட்டு பயணிகள் அமர்ந்து கொண்டு செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலே படுக்கை வசதிகளும் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி படுக்கை வசதிக்கு தனி டிக்கெட் கட்டணமும், இருக்கை வசதிக்கு தனி டிக்கெட் கட்டணமும் வசூலிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

இந்த பஸ்கள் எல்லாம் ஏசி வசதி இல்லாத பஸ்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இது சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தப்பட வாய்ப்பு இருக்கிறது. நீண்ட தூர பயன்பாட்டுக்கு மக்கள் பலர் ஏசி பஸ்களை அதிகம் விரும்புவதால் அந்த பஸ்கள் தான் நீண்ட தூர பயணங்களுக்கு பயன்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. இது ரூட் பிரிக்கப்படும்போது தான் எந்தெந்த ரூட்களில் இந்த பஸ்கள் செயல்படபோகிறது என்ற தகவல் தெரிய வரும்.

setc new bs6 bus

இந்த பஸ்ஸில் முக்கியமாக இதன் இன்ஜின் இருக்கிறது. இது பிஎஸ்6 தொழில்நுட்பத்தில் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. bs6 கட்டுப்பாட்டின் 2ம் கட்டுப்பாட்டை பின்பற்றி இந்த இன்ஜின் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த இன்ஜின் குறைவான மாசு வெளியிடும் தன்மை கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. அதே நேரம் இந்த பஸ்ஸின் பாடி கட்டுமானமும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

தனியார் பஸ்களில் இருப்பது போல இந்த பஸ்ஸிலும் பயணிகளின் லக்கேஜ் வைப்பதற்காக பஸ்ஸிற்கு அடியில் பகுதிகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த பகுதிகள் பயணிகள் லக்கேஜை வைக்க பயன்படுத்தப்படுமா? அல்லது விரைவு போக்குவரத்து கழக நிர்வாகமே பார்சல் புக்கிங் செய்து அந்த பார்சல்களை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்படுமா? என்ற விபரம் இதுவரை தெரியவில்லை.

இந்த பஸ் நிறத்தை பொருத்தவரை பச்சை நிறத்தில் வழங்கப்பட்டுள்ளது. பொதுவாக எஸ்இடிசி பஸ்கள் எல்லாம் வெள்ளை நிற பஸ்களாகவே இருந்து வந்தன. இதற்கு முன்னர் இருந்த பழைய பஸ்கள் எல்லாம் பச்சை நிற பஸ்களாக இருந்தன. அதை நினைவுபடுத்தும் வகையில் தற்போது இந்த பஸ்களையும் பச்சை நிறத்தில் எஸ்சிடிசி நிர்வாகம் வடிவமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் பஸ்களை பராமரிப்பதில் மிக மோசமாக செயல்பட்டு வருவதாக மக்கள் மத்தியில் புகார் இருக்கிறது. புதிய பஸ்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது. ஆனால் அதை பராமரிப்பதில் கவனம் செலுத்தாமல் இருக்கிறார்கள். தனியார் நிறுவனங்கள் பஸ்களை சிறப்பாக பராமரிப்பதால் அங்கு கூட்டம் செல்வதாக மக்கள் மத்தியில் மிகப்பெரிய குற்றச்சாட்டு இருக்கிறது. இதற்கு உடனடியாக அரசு ஒரு தீர்வு கண்டதாக வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 9, 2024, 12:56 [IST]
English summary
Setc new bs6 buses green color hit roads soon full details
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X