மும்முனை சீட் பெல்டை இவங்கதான் முதல்ல கண்டுபிடிச்சாங்களா? 7 பாதுகாப்பு அம்சங்களும், அவற்றின் தோற்றமும்!
மும்முனை சீட் பெல்ட் முதல் ஏபிஎஸ் வரையிலான 7 பாதுகாப்பு அம்சங்களும், அவற்றின் தோற்றங்கள் பற்றிய முக்கிய தகவலைக் கீழே காணலாம், வாங்க.

வாகனங்கள் தோன்றிய காலத்தை காட்டிலும் தற்போது பன் மடங்கு அதிக பாதுகாப்பானதாக காட்சியளிக்கின்றன. தொழில்நுட்ப உலகின் அதீத வளர்ச்சியே வாகனங்களில் உள்ள பாதுகாப்பு தரம் மேம்பட்டு காட்சியளிக்கக் காரணமாக இருக்கின்றது.

ஏர்பேக், சீட் பெல்ட் என பல தரப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் தற்போதைய நவீன கால கார்களில் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், வாகனங்களின் வரலாற்றில் சில தசாப்தங்களுக்கு முன்னால் சென்று பார்த்தால் இவை இருந்ததற்கான சுவடுகள்கூட இருக்காது.

ஆம், துளியளவும் பாதுகாப்பு வசதியே இல்லாத கார்களும் இந்த உலகத்தில் விற்பனையில் இருந்திருக்கின்றன. அத்தகைய காலத்தில் இருந்து பாதுகாப்பு அம்சங்கள் எவ்வாறு தோன்றின? என்பது பற்றிய வரலாற்று தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். மிக முக்கியமான 7 பாதுகாப்பு கருவிகளின் தோற்றம் குறித்த முக்கிய தகவலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

மும்முனை சீட் பெல்ட்டுகள் (3-Point Seatbelts)
1940ம் ஆண்டு வரை லேப் (lap) ரக பெல்டுகள் மட்டுமே கார்களில் பயன்படுத்தப்பட்டன. இதன் பின்னரே மும்முனை சீட் பெல்ட் கண்டுபிடிக்கப்பட்டது. பிரபல கார் உற்பத்தி நிறுவனமான வால்வோவே இதனைக் கண்டுபிடித்த நிறுவனம் ஆகும். இந்த நிறுவனமே முதல் முறையாக அதன் வாகனத்தில் மும்முனை இருக்கை பெல்டை வழங்கியது.

பல வாகன ஓட்டிகளைப் பேராபத்தில் இருந்து காக்க இதுவே தற்போது பெரும் உதவியாக இருந்து வருகின்றது. ஆனால், இந்த மும்முனை சீட் பெல்ட் 1959ம் ஆண்டுக்கு முன்னர் வரை கட்டாயமாக்கப்படாமல் இருந்தது. இதன் பின்னரே இதன் முக்கியத்துவதத்தை உணர்ந்து உலக நாடுகள் கட்டாயமாக்க தொடங்கின.

ஏர் பேக் (Airbags)
ஏர் பேக் முதன்முதலாக கான்செப்ட் மாடலாக 1905-லேயே அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், நீண்ட ஆண்டுகள் வரை இது பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படாத நிலையே தென்பட்டது. நேர்த்தியாக வடிவமைக்கப்படாத காரணத்தினாலேயே வெகு ஆண்டுகளாக இது பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை.

இந்த நிலையில், பிரபல ஜெனரல் மோட்டார்ஸ் எனும் வாகன உற்பத்தி நிறுவனமே முதல் முறையாக 1970ம் ஆண்டில் அதன் வாகனத்தில் சிறப்பாக இயங்கக் கூடிய ஏர் பேக்கை அறிமுகப்படுத்தியது. இதனை, 'ஏர் குஷன் ரெஸ்ட்ரைன்ட் சிஸ்டம்' என்ற பெயரில் அழைத்து வந்தது இதன் பின்னரே ஏர் பேக் என்ற பெயரில் அனைத்து சொகுசு கார்களிலும் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது மிக மலிவு விலைக் கார்களிலும் இந்த அம்சம் காணப்படுவது குறிப்பிடத்தகுந்தது.

ஏபிஎஸ் (ABS)
ஆன்டி பிரேக்கிங் சிஸ்டம் (anti-braking system) என்பதன் சுருக்கமே ஏபிஎஸ். ஆரம்ப கட்டத்தில் இதனை விமானங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டன. 1960இல் விமானங்களில் பயன்படுத்துவதற்காக இது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னாளில் கார்களிலும் இது பயன்படுத்த வாகன உற்பத்தி நிறுவனங்கள் தொடங்கின.

அந்தவகையில், முதல் முறையாக 1970ம் ஆண்டிலேயே இந்த ஏபிஎஸ் முதல் முறையாக கார்களில் பயன்படுத்தப்பட்டது. தற்போது, இருசக்கர வாகனங்களில் வழங்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஃபியட் ஆய்வூ கூடத்தில் வைத்தே நவீன கால ஏபிஎஸ் உருவாக்கப்பட்டது.

டிஸ்க் பிரேக் (Disc Brakes)
ஆட்டோமொபைல் துறையின் ஆரம்ப கால கண்டுபிடிப்புகளில் டிஸ்க் பிரேக்கும் ஒன்றாகும். ஆனால், இதனைப் பயன்பாட்டிற்கு உகந்ததாக மாற்ற சிட்ரோன் நிறுவனத்திற்கு ஐந்து தசாப்தங்கள் ஆகின. ஆம், சிட்ரோன் நிறுவனமே தனது வாகனத்தில் டிஸ்க் பிரேக்கை முதல் முறையாக அறிமுகப்படுத்திய வாகன உற்பத்தியாளர் ஆவார். இந்த அம்சம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னர் வரை டிரம் பிரேக்குகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. தற்போது விலை குறைவான வாகன மாடல்களில் டிரம் பிரேக்குகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

க்ரம்பிள் ஜோன்கள் (Crumple Zones)
1952ம் ஆண்டில் பிரபல சொகுசு கார் உற்பத்தி நிறுவனம் உருவாக்கியதே க்ரம்பிள் ஜோன் பாதுகாப்பு அம்சம். இந்த ஆண்டிலேயே அது க்ரம்பிள் ஜோன் பாதுகாப்பு அம்சத்திற்கான காப்புரிமையை நிறுவனம் பெற்றது. க்ரம்பிள் ஜோன் பாதுகாப்பு அம்சம் என்பது மிக அதிக சிதைவை (நொறுங்குதலை)-த் தவிர்க்கக் கூடிய அம்சம் ஆகும்.

பாதுகாப்பு கண்ணாடிகள் (Safety Glass)
எட்வர்ட் பெனெடிக்டஸ் எனும் வேதியியாலளர் தற்செயலாக உருவாக்கியதே இந்த அம்சம். 1903ம் ஆண்டிலேயே இதனை முதல் முறையாக அவர் கண்டுபிடித்தார். இதன் பின்னர் டக்கர் கார் கம்பெனி தனது டார்பெடோ மாடலில் பயன்படுத்தியது. பாதுகாப்பு கண்ணாடியானது விபத்தின்போது சிறிய சிறிய பட்டன்களைப் போன்று நொறுங்கிவிடும். ஆகையால், பாதிப்பு என்பது மிக மிக குறைவு. எனவேதான் வாகன உற்பத்தியாளர்கள் இந்த அம்சத்தை தங்களின் தயாரிப்புகளில் பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றனர்.

ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் (Stability Control)
எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்ற ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் அம்சம் காரணமாக இருக்கின்றது. ஆனால், இந்த அம்சம் உருவான தெளிவான வரலாறு இதுவரை வெளியாகவில்லை. ஃபிராங்க் வெர்னர் மோன் என்ற இளம் பாதுகாப்பு பொறியாளரே இதனை உருவாக்கியவர்.


Click it and Unblock the Notifications








