லெக்சஸ் காரில் போனால்தான் கரீனாவுக்கு எல்லாம் சக்சஸ்

பார்த்து பார்த்து வாங்கிய லெக்சஸ் காரை ஒரு குழந்தையை போல் அவர் பார்த்துக் கொள்கிறாம். ஷூட்டிங் ஸ்பாட், பிக்னிக், ஷாப்பிங் என எங்கு சென்றாலும் இந்த காரைத்தான் அதிகம் பயன்படு்துகிறார் அவர். தாராள இடவசதி, தொழில்நுட்ப வசதிகள் என்று அனைத்திலும் நிறைவான இந்த கார்தான் அவருக்கு வலது கரமாம்.
டொயோட்டோவின் துணை பிராண்டாக செயல்படும் லெக்சஸ் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடலாக எல்எக்ஸ் 470 திகழ்கிறது. இந்த எஸ்யூவி ரக கார் டொயோட்டோ லேண்ட் குரூஸர் வடிவமைப்பை ஒத்திருக்கிறது.
டிவிடி நேவிகேஷன், பார்க்கிங் சென்சார், லெவின்சன் மியூசிக் சிஸ்டம், நைட் விஷன் அசிஸ்ட், பின் இருக்கை டிவிடி ப்ளேயர் ஆகிய சொகுசு அம்சங்களுடன ஒரு குட்டி வீடு போன்றே இருக்கிறது இந்த கார். 4.7 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்ட இந்த கார் 275 எச்பி ஆற்றலை வாரி இறைக்கும் திறன் படைத்தது.
இறக்குமதி செய்யப்படும் இந்த காரின் விலை ரூ.47.57 லட்சம். தற்போது இறக்குமதி செய்யப்படும் லெக்சஸ் கார்களை அடுத்த ஆண்டு நேரடியாகவே இந்தியாவில் விற்பனை செய்ய டொயோட்டோ திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








