வாடகை தாய் மூலம் பிறந்த மகனுக்கு 3 கோடி ரூபா கார்! அந்த நடிகர்தான் இந்த சின்ன பையனோட உண்மையான அப்பாவா!
இந்தியாவை சேர்ந்த திரையுலக நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் போன்றவர்கள் மிகவும் விலை உயர்ந்த கார்களில் பயணம் செய்வதை விரும்புகின்றனர். ஆடி (Audi), பிஎம்டபிள்யூ (BMW), மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz) மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce) போன்ற நிறுவனங்களின் கார்கள்தான், இந்தியாவின் கோடீஸ்வரர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளன. அத்துடன் லெக்ஸஸ் (Lexus) நிறுவனத்தின் கார்களையும் கூட, இந்திய கோடீஸ்வரர்கள் அதிகளவில் வாங்குகின்றனர். அறிமுகமே தேவை கிடையாது என்னும் அளவிற்கு, லெக்ஸஸ் நிறுவனம் மிகவும் பிரபலமாக திகழ்கிறது.
இருப்பினும் தெரியாதவர்களுக்காக ஒரு சிறிய விளக்கம். இது டொயோட்டா (Toyota) நிறுவனத்தின் சொகுசு கார் டிவிஷன் (Luxury Car Division) ஆகும். அதாவது டொயோட்டா நிறுவனம் சொகுசு கார்களை மட்டும் தனியாக லெக்ஸஸ் என்ற பிராண்டின் கீழ் விற்பனை செய்து கொண்டுள்ளது. இந்தியாவில் லெக்ஸஸ் நிறுவனத்தின் சொகுசு கார்களுக்கு மிகப்பெரிய வாடிக்கையாளர்கள் கூட்டம் உள்ளது.

குறிப்பாக அந்த நிறுவனத்தின் லெக்ஸஸ் எல்எம் 350ஹெச் (Lexus LM 350h) கார், இந்திய திரையுலகினர் மத்தியில் மிகவும் பிரபலமாக திகழ்ந்து வருகிறது. தொழில் அதிபர் முகேஷ் அம்பானி (Mukesh Ambani), கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா (Hardik Pandya), நடிகை ஜான்வி கபூர் (Janhvi Kapoor) மற்றும் நடிகர் ரன்பீர் கபூர் (Ranbir Kapoor) உள்ளிட்ட பலரிடமும், லெக்ஸஸ் எல்எம் 350ஹெச் கார் உள்ளது.
இது சொகுசு எம்பிவி (Luxury MPV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். எனவே விமானங்களில் இருப்பதை போன்ற சாய்ந்து கொள்ள கூடிய இருக்கைகள், 48 இன்ச் டிவி, ஃப்ரிட்ஜ், அடாஸ், 23 ஸ்பீக்கர் பீரிமியம் ஆடியோ சிஸ்டம் மற்றும் வயர்லெஸ் செல்போன் சார்ஜிங் என ஏகப்பட்ட சொகுசு வசதிகளை (Features) எல்லாம் இந்த கார் கொண்டுள்ளது.

இது ஒரு ஹைப்ரிட் கார் (Hybrid Car) என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. அதாவது பெட்ரோல் மற்றும் எலெக்ட்ரிக் மூலமாக இயங்க கூடிய வகையில், லெக்ஸஸ் எல்எம் 350ஹெச் கார் டிசைன் செய்யப்பட்டுள்ளது. இந்த காரில் பொருத்தப்பட்டிருப்பது, 2.5 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் ஸ்ட்ராங் ஹைப்ரிட் இன்ஜின் ஆகும்.
அதிகபட்சமாக 250 பிஎஸ் பவர் மற்றும் 239 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ள இந்த இன்ஜின் உடன், இ-சிவிடி கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன் லெக்ஸஸ் எல்எம் 350ஹெச் காரில், ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்திய சந்தையில் இந்த கார் மொத்தம் 2 வேரியண்ட்களில் (Variants) கிடைக்கிறது. இதில், 7 சீட்டர் விஐபி வேரியண்ட் ஒன்றாகும். இதன் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) 2 கோடி ரூபாயாக உள்ளது. மற்றொன்று 4 சீட்டர் அல்ட்ரா லக்ஸரி வேரியண்ட் ஆகும். இதன் எக்ஸ்-ஷோரூம் விலை 2.50 கோடி ரூபாயாக உள்ளது.
இதில், 4 சீட்டர் அல்ட்ரா லக்ஸரி வேரியண்ட்டை, பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் (Shah Rukh Khan) தற்போது வாங்கியுள்ளார். ஆனால் ஷாருக்கான் இந்த காரை அவருக்காக வாங்கி கொள்ளவில்லை. அவரது மகன் ஆப்ரம் கானுக்காக (Abram Khan) வாங்கி கொடுத்துள்ளார்.
சுமார் 58 வயதாகும் நடிகர் ஷாருக்கானுக்கு, ஆர்யன் கான் (Aryan Khan) மற்றும் சுஹானா கான் (Suhana Khan) என்ற மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்த வரிசையில் மூன்றாவதாக அவருக்கு ஒரு மகனும் உள்ளார். அவர்தான் ஆப்ரம் கான். இவர் வாடகை தாய் மூலம் பிறந்தவர் ஆவார்.
இவருக்கு தற்போது 11 வயது மட்டுமே ஆகிறது. இந்த சூழலில்தான் அவரது பயணங்களுக்காக ஷாருக்கான் தற்போது லெக்ஸஸ் எல்எம் 350ஹெச் காரை வாங்கியுள்ளார். ஆப்ரம் கான் தனது புதிய லெக்ஸஸ் எல்எம் 350ஹெச் காரில் பயணம் செய்யும் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று யூடியூப் (YouTube) தளத்தில் தற்போது பதிவிடப்பட்டுள்ளது.
இந்த வீடியோவில், ஆப்ரம் கான் ஒரு இடத்தில் இருந்து வந்து, லெக்ஸஸ் எல்எம் 350ஹெச் காரில் ஏறி அமர்வதை நம்மால் பார்க்க முடிகிறது. அனேகமாக அது ஆப்ரம் கானின் பள்ளியாகவோ அல்லது விளையாட்டு ஆகாடமியாகவோ இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த வைரல் வீடியோவை ஷாருக்கானின் ரசிகர்கள் தற்போது சமூக வலை தளங்களில் அதிகமாக பகிர்ந்து கொண்டுள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சொகுசான பயணத்தை வழங்குவதால்தான், லெக்ஸஸ் எல்எம் 350ஹெச் காருக்கு, இந்திய பிரபலங்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு காணப்படுகிறது. இதன் காரணமாகவே ஷாருக்கானும் தற்போது இந்த காரை வாங்கியுள்ளார். இது அவரது மகன் ஆப்ரம் கானுக்கு சௌகரியமான பயணத்தை வழங்கும் என்பது உறுதி.
ஷாருக்கான் வாங்கியுள்ள லெக்ஸஸ் எல்எம் 350ஹெச் காரின் 4 சீட்டர் அல்ட்ரா லக்ஸரி வேரியண்ட்டின் ஆன்-ரோடு விலை (On-Road Price) சுமார் 3 கோடி ரூபாய் வரும் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இது விலை உயர்ந்த காராக இருந்தாலும் கூட, வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்புதான் என்பதில் சந்தேகமில்லை.


Click it and Unblock the Notifications








