ஒரு சொகுசு கார் கூட இல்லாத சூப்பர் ஸ்டார் நடிகர்! இதுக்கு என்ன காரணம் தெரியுமா?

நடிகர் ஷாரூக்கான் தன்னிடம் ஒரு சொகுசு கார்கூட இல்லை எனவும், தன்னிடம் இருக்கும் கார்கள் என சமூகவலைத்தளங்களில் வெளியாகும் ஷாரூக்கான் சொகுசு கார்கள் பட்டியல் எல்லம் பொய் மற்றும் புரளி என தெரிவித்துள்ளார். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தி சினிமா உலகில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் ஷாரூக் கான். இவர் சமீபத்தில் நடித்து வெளியான பதான் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. இவரது திரைப்படம் ஒரு காலத்தில் தோல்விகளை தழுவி வந்த நிலையில் தற்போது இவர் சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வருவதாக இவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

ஒரு சொகுசு கார் கூட இல்லாத சூப்பர் ஸ்டார் நடிகர்! இதுக்கு என்ன காரணம் தெரியுமா?

இந்நிலையில் இவர் சமீபத்தில் ட்விட்டரில் தனது ரசிகர்களின் கேள்விக்கு பதிலளிக்க போவதாக அறிவித்தார். இதற்காக #AskSRK என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கினார். அதன் மூலம் அவர் ரசிகர்கள் தங்கள் கேள்விகளை எல்லாம் வரிசையாக முன் வைத்தனர். அதில் அவர் சில கேள்விகளை தேர்வு செய்து பதிலளித்து வந்தார். அதில் ஒரு ரசிகர் உங்களிடம் இருக்கும் கார்களில் உங்களுக்கு பிடித்த கார் எது அதில் எதை விற்க மாட்டீர்கள் என கேட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த ஷாரூகான். என்னிடம் பெரிய பெரிய சொகுசு கார்கள் எல்லாம் இல்லை. ஹூண்டாய் நிறுவனத்தின் கார்கள் மட்டுமே இருக்கிறது. சமூகவலைத்தளங்களில் ஷாருக்கானிடம் உள்ள சொகுசு கார்களின் பட்டியல் என வெளியாகும் தகவல்கள் எல்லாம் போலியானவை என குறிப்பிட்டிருந்தார்.

ஒரு சொகுசு கார் கூட இல்லாத சூப்பர் ஸ்டார் நடிகர்! இதுக்கு என்ன காரணம் தெரியுமா?

ஷாரூக்கான இந்திய சினிமாவில் மிக முக்கியமான நடிகர். குறிப்பாக அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகர்களில் இவரும் ஒருவர் இவரிடம் சொகுசு கார்களே இல்லை என்பது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூகவலைத்தளங்களில் இவரிடம் புகாட்டி வெரான், பிஎம்டபிள்யூ ஐ8, ரோல்ஸ்ராய்ஸ் பாந்தோம் டிராப்ஹெட் கூபே ஆகிய கார்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.

ஆனால் இந்த தகவல்கள் எல்லாம் இந்த கார்கள் ஷாரூக்கான உடையது தான் என்பதை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை. இந்த பட்டியிலில் உள்ள கார்கள் எல்லாம் இந்தியாவில் கிடைக்கும் கார்களாக இருந்தாலும் இவை எதையும் அதிகாரப்பூர்வமாக ஷாரூக்கான் வாங்கவில்லை என அவரே தெரிவித்துள்ளார். இந்த தகவல்கள் பெரும்பாலும் புரளிகளாகவே உள்ளது. தற்போது ஷாரூக்கானிடம் சொகுசு கார் கலெக்ஷன் எல்லாம் இல்லை என தெரியவந்துள்ளது.

ஆனால் ஷாரூக்கான் குடும்பத்தினர் பல சொகுசு கார்களை வைத்திருக்கின்றனர். பிஎம்டபிள்யூ7 சிரீஸ், மெர்சிடீஸ் பென்ஸ் -எஸ் கிளாஸ், பழைய தலைமுறை ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் ஆகிய கார்களை பயன்படுத்தி வருகின்றனர். ஷாரூக்கான பெயரில் ஹூண்டாய் சான்ட்ரோ மற்றும் ஹூண்டாய் கிரெட்டா ஆகிய கார்கள் உள்ளன. சமீபத்தில் தான் ஹூண்டாய் நிறுவனம் ஷாரூக்கானிற்கு கிரெட்டா காரை பரிசளித்தது.

இதற்கு முன்னர் ஷாரூக்கான் மாருதி ஆம்னி, மிட்சுபிஸி பஜேரோ, ஆடி ஏ6, மற்றும் பிஎம்டபிள்யூ 6 சிரீஸ் கார்களை வைத்திருந்தார். ஆனால் அது எல்லாம் இப்பொழுது அவரிடம் இல்லை. ஷாரூக்கான் ஹூண்டாய் கார்களை தன் பெயரில் வைத்திருப்பதற்கு காரணம் அவர் ஹூண்டாய் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிட்டராக இருக்கிறது. இந்நிறுவனம் துவங்கப்பட்டது முதல் இவர் தான் அந்நிறுவனத்தின் அம்பாஸிட்டராக இருக்கிறார்.

அதனால் இவர் ஹூண்டாய் நிறுவனத்தின் பிரபல காராக சான்ட்ரோ முதல் பெரிய கார்கள் வரை வைத்திருக்கிறார். இந்நிறுவனத்திற்கு இவர் கடந்த 25 ஆண்டுகளாக பிராண்ட் அம்பாஸிட்டராக இருக்கிறார். இது தான் இவர் ஹூண்டாய் கார்களை வைத்திருப்பதற்கான ரகசியம். இவர் நடிப்பில் தமிழ் இயக்குநர் அட்லி இயக்கத்தில் ஜவான் என்ற திரைப்படம் விரைவில் திரைக்கு வர தயாராக இருக்கிறது. அடுத்தாக இவர் ராஜ்குமார் ஹிரானியின் டுங்கி திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 21, 2023, 18:30 [IST]
English summary
Shah rukh khan doesnt own any luxury cars says in twitter
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X