அடுத்து ஒரு ஆடம்பர பஸ் வாங்கிய ஷாரூக்கான்... விலை 3 கோடி!!
பாலிவுட் பாதுஷா என்று அழைக்கப்படும் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மோட்டார் இல்லம் விரிவடைந்து கொண்டே செல்கிறது. ஏற்கனவே, ஆடம்பர பஸ் ஒன்றை வாங்கி பயன்படுத்தி வரும் அவர் தற்போது இரண்டாவதாக ஆடம்பர பஸ் ஒன்றை வாங்கியிருக்கிறார்.
டிசி டிசைன் நிறுவனத்தின் கைவண்ணத்தில், சகல வசதிகளுடன் கஸ்டமைஸ் செய்யப்பட்டிருக்கும் இந்த புதிய ஆடம்பர பஸ்சில் இருக்கும் வசதிகளையும், படங்களையும் ஸ்லடைரில் காணலாம். விலை கடைசி ஸ்லைடில் உள்ளது.

வால்வோ பஸ்
வால்வோ பி9ஆர் மல்டி ஆக்சில் பஸ்சின் சேஸீயின் அடிப்படையில் இந்த பஸ் கஸ்டமைஸ் செய்யப்பட்டிருக்கிறது. மொத்தம் 45 நாட்களில் இந்த பஸ்சை டிசி நிறுவனம் கஸ்டமைஸ் செய்து கொடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இடவசதி
14 மீட்டர் நீளம் கொண்ட இந்த பஸ்சை 4 அறைகளாக பிரித்து கஸ்டமைஸ் செய்துள்ளனர். உள்பக்கத்தில், 280 சதுர அடி பரப்பு இடவசதியில் சிறிய கூட்ட அரங்கம், மேக்கப் அறை, உடை மாற்றும் அறை மற்றும் கழிவறை வசதிகளுடன் மாற்றியிருக்கின்றனர்.

இடவசதியை அதிகரிக்கலாம்
விருந்து நிகழ்ச்சிகள் அல்லது அதிக விருந்தினர்கள் வரும்போது இடவசதியை கூட்டிக் கொள்ளும் விதத்தில், ஹைட்ராலிக் சிஸ்டத்தின் மூலம் அறையை விஸ்தீரணப்படுத்தும் வசதியும் உள்ளது.

வசதிகள்
மிக உயர்தர மர வேலைப்பாடுகள், சொகுசான இருக்கைகள், படுக்கைகள் உள்ளன. மேலும், சாட்டிலைட் டிவி, கண்ணாடி தரை தள கட்டமைப்பு, வைஃபை இணையதள தொடர்பு வசதி, 4000 வாட் ஆடியோ சிஸ்டம் போன்றவை முக்கிய வசதிகளாக இருக்கின்றன.

மைக்ரோவேவ் அவன் உண்டு
இந்த பஸ்சில் காபி, தேனீர் மற்றும் திண்பண்டங்களை வைப்பதற்கு இடவசதியும், சூடுபடுத்துவதற்கு 'மைக்ரோவேவ் அவன்' உள்ளது.

ஆம்பியன்ட் லைட்டிங் சிஸ்டம்
ஆம்பியன்ட் லைட் சிஸ்டம் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், கட்டுப்பாடுகள் அனைத்து தொடுதிரை பொத்தான்கள் மூலமாக இயக்கலாம்.

மதிப்பு
இந்த பஸ்சின் மொத்த அடக்க மதிப்பு 3 கோடி முதல் 4 கோடி ரூபாய் வரையில் இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது. மேலும், இந்த பஸ்சை ஷாரூக்கான் ஏற்கனவே டெலிவிரி பெற்றுவிட்டாராம்.

Source: NDTV auto


Click it and Unblock the Notifications








