ரசிகர்களுக்கு அட்வைஸ் கொடுத்த சூப்பர் ஸ்டார்... வைரலாகும் வீடியோ... அப்படி என்ன சொன்னார் தெரியுமா?

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் ரசிகர்களுக்கு அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டிரெண்டிங்கில் முதலிடம் பிடிக்க வைத்த ரசிகர்களுக்கு பிரபல நடிகர் சொன்ன அறிவுரை இதுதான்! வைரல் வீடியோ

பாலிவுட் திரையுலகின் முடிசூடா மன்னனாக வலர் வருபவர் ஷாருக்கான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும், ஷாருக்கான் தன் அபார நடிப்பு திறமையால் கவர்ந்திழுத்துள்ளார். தமிழ் நாட்டிலும் கூட ஷாருக்கானுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த சூழலில் தனது டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பக்கங்களில், ஷாருக்கான் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

டிரெண்டிங்கில் முதலிடம் பிடிக்க வைத்த ரசிகர்களுக்கு பிரபல நடிகர் சொன்ன அறிவுரை இதுதான்! வைரல் வீடியோ

இதில், ஷாருக்கான் பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் மோட்டார்சைக்கிளை ஓட்டி வருவதை காண முடிகிறது. அருகில் பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ் மோட்டார்சைக்கிள் ஒன்றும் நிற்கிறது. தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வரும் இந்த வீடியோவின் பின்னணியில், ஷாருக்கான் நடிப்பில் உருவான தீவானா படத்தின் ''கோய் நா கோய் சாஹியே பியார் கர்னே வாலா'' பாடல் ஒலிக்கிறது.

டிரெண்டிங்கில் முதலிடம் பிடிக்க வைத்த ரசிகர்களுக்கு பிரபல நடிகர் சொன்ன அறிவுரை இதுதான்! வைரல் வீடியோ

தீவானாதான் ஷாருக்கானின் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் மூலமாகதான் கடந்த 1992ம் ஆண்டு பாலிவுட் திரையுலகில் ஷாருக்கான் அடியெடுத்து வைத்தார். தற்போது ஹிந்தி திரையுலகில் ஷாருக்கான் 27 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார். கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக பாலிவுட் திரையுலகில் ஷாருக்கான் ஆட்சி செய்து வருகிறார்.

டிரெண்டிங்கில் முதலிடம் பிடிக்க வைத்த ரசிகர்களுக்கு பிரபல நடிகர் சொன்ன அறிவுரை இதுதான்! வைரல் வீடியோ

இந்த சாதனைக்காக ரசிகர்களிடம் இருந்து ஷாருக்கானுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன. #27GoldenYearsOfSRK என்ற ஹேஷ்டேக் டிவிட்டர் டிரெண்டிங்கில் இந்திய அளவில் முதலிடம் பிடித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே ரசிகர்களுக்கு நன்றி சொல்லும் விதமாகதான் ஷாருக்கான் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

டிரெண்டிங்கில் முதலிடம் பிடிக்க வைத்த ரசிகர்களுக்கு பிரபல நடிகர் சொன்ன அறிவுரை இதுதான்! வைரல் வீடியோ

வீடியோவில் இடம்பெற்றுள்ள ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் ஆகியவை பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனத்தில் இருந்து வெளிவரும் என்ட்ரி-லெவல் மோட்டார்சைக்கிள் மாடல்கள் ஆகும். இந்த இரண்டு மாடல்களும் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட உடனேயே மிகவும் பிரபலம் அடைந்து விட்டன.

டிரெண்டிங்கில் முதலிடம் பிடிக்க வைத்த ரசிகர்களுக்கு பிரபல நடிகர் சொன்ன அறிவுரை இதுதான்! வைரல் வீடியோ

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூட சமீபத்தில், பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ் மோட்டார்சைக்கிளை வாங்கினார். இதன் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை 3.49 லட்ச ரூபாய். இதற்கு முன்னதாக கடந்த ஆண்டு மற்றொரு பிரபல கிரிக்கெட் வீரரான யுவராஜ் சிங், பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் பைக்கை வாங்கினார். இதன் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை 2.99 லட்ச ரூபாய்.

டிரெண்டிங்கில் முதலிடம் பிடிக்க வைத்த ரசிகர்களுக்கு பிரபல நடிகர் சொன்ன அறிவுரை இதுதான்! வைரல் வீடியோ

இந்தியாவில் பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் பைக்கை வாங்கிய முதல் ''செலிபிரிட்டி'' யுவராஜ் சிங்தான். இந்த இரண்டு மோட்டார்சைக்கிள்களும் வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஆண்டு இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. பிஎம்டபிள்யூ மோட்டோராட் மற்றும் இந்தியாவின் டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனங்களின் கூட்டணியில் இந்த பைக்குகள் உருவாக்கப்பட்டுள்ளன.

டிரெண்டிங்கில் முதலிடம் பிடிக்க வைத்த ரசிகர்களுக்கு பிரபல நடிகர் சொன்ன அறிவுரை இதுதான்! வைரல் வீடியோ

தமிழகத்தின் ஓசூரில் உள்ள டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தொழிற்சாலையில்தான் இந்த 2 பைக்குகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன. பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் ஆகிய இரண்டு மோட்டார்சைக்கிள்களிலும், 313 சிசி, லிக்யூட் கூல்டு, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 34 எச்பி பவர் மற்றும் 28 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது. இதில், 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் வழங்கப்படுகிறது.

டிரெண்டிங்கில் முதலிடம் பிடிக்க வைத்த ரசிகர்களுக்கு பிரபல நடிகர் சொன்ன அறிவுரை இதுதான்! வைரல் வீடியோ

இந்த இரண்டு பைக்குகளும், 5 ஸ்போக் அலாய் வீல்கள் மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவற்றை பெற்றுள்ளன. பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் பைக், ஸ்டைல் எச்பி, காஸ்மிக் பிளாக் மற்றும் ரேஸிங் ரெட் என மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. இதில், ரேஸிங் ரெட் வண்ணம் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

டிரெண்டிங்கில் முதலிடம் பிடிக்க வைத்த ரசிகர்களுக்கு பிரபல நடிகர் சொன்ன அறிவுரை இதுதான்! வைரல் வீடியோ

ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் ஆகியவற்றின் மூலம் பிஎம்டபிள்யூ மோட்டார்சைக்கிள்கள் உற்பத்தி செய்யப்படும் உலகின் நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. முன்னதாக ஜெர்மனி, தாய்லாந்து மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் பிஎம்டபிள்யூ மோட்டார்சைக்கிள்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

டிரெண்டிங்கில் முதலிடம் பிடிக்க வைத்த ரசிகர்களுக்கு பிரபல நடிகர் சொன்ன அறிவுரை இதுதான்! வைரல் வீடியோ

இந்திய மார்க்கெட்டில் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310, கேடிஎம் ட்யூக் 390 மற்றும் பெனெல்லி டிஎன்டி 300 உள்ளிட்ட பைக் மாடல்களுடன் பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் போட்டியிட்டு வருகிறது. இதனிடையே பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் பைக்கை ஓட்டி வரும் வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

இந்த வீடியோ மூலமாக தனது ரசிகர்களுக்கு ஷாருக்கான் அறிவுரை ஒன்றையும் வழங்கியுள்ளார். மோட்டார்சைக்கிள்களை ஓட்டும்போது அனைவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என அவர் தன் ரசிகர்களுக்கு வலியுறுத்தியுள்ளார். உலகிலேயே சாலை விபத்துக்கள் காரணமாக அதிக உயிர்களை இழக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது.

டிரெண்டிங்கில் முதலிடம் பிடிக்க வைத்த ரசிகர்களுக்கு பிரபல நடிகர் சொன்ன அறிவுரை இதுதான்! வைரல் வீடியோ

இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்கள் ஹெல்மெட் அணியாதது இதற்கு மிக முக்கியமான காரணம். இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இருவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதி பெரும்பாலான இடங்களில் முறையாக கடைபிடிக்கப்படுவதில்லை. குறிப்பாக தமிழகத்தில்.

டிரெண்டிங்கில் முதலிடம் பிடிக்க வைத்த ரசிகர்களுக்கு பிரபல நடிகர் சொன்ன அறிவுரை இதுதான்! வைரல் வீடியோ

இது தொடர்பான வழக்கு கடந்த சில நாட்களுக்கு முன் விசாரணைக்கு வந்தபோது, சென்னை ஐகோர்ட் கூட தனது அதிருப்தியை தெரிவித்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். எனவே ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்களை பிடித்து அபராதம் விதிக்க தமிழக போலீசார் தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

Article Published On: Wednesday, June 26, 2019, 13:31 [IST]
English summary
Shah Rukh Khan Rides BMW G 310 R - Video. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+