சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
பாலிவுட் (Bollywood) திரையுலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்து வருபவர் ஷாருக்கான் (Shah Rukh Khan). நடிகர் என்பதையும் கடந்து, ஐபிஎல் (IPL) தொடரில் விளையாடும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders) அணியின் உரிமையாளர் என்ற முகமும் ஷாருக்கானுக்கு உண்டு.
மற்ற பாலிவுட் பிரபலங்களை போலவே, ஷாருக்கானின் கார் கலெக்ஸனும் (Car Collection) மிகப்பெரியது. ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் (Rolls Royce Cullinan Black Badge), ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் ட்ராப்ஹெட் கூபே (Rolls Royce Phantom Drophead Coupe), பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி (Bentley Continental GT), ஆடி ஏ8எல் (Audi A8L), பிஎம்டபிள்யூ ஐ8 (BMW i8), பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் (BMW 7 Series), பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் கன்வெர்டபிள் (BMW 6 Series Convertible) மற்றும் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் (Range Rover Sport) உள்ளிட்ட கார்களை எல்லாம் ஷாருக்கான் வைத்துள்ளார்.

இவ்வளவு விலை உயர்ந்த கார்களை எல்லாம் வைத்துள்ள ஒருவர் சாதாரணமாக பஸ்ஸில் வந்தார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், இதை நீங்கள் நம்பியே ஆக வேண்டும். பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், பஸ்ஸில் சாதாரணமாக பயணம் செய்யும் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
ஆனால் இது ஏர்போர்ட் பஸ் (Airport Bus) ஆகும். விமான நிலையங்களின் போர்டிங் கேட்களில் இருந்து விமானங்கள் நிற்கும் இடங்களுக்கு பயணிகளை அழைத்து செல்லவும், விமானங்களில் இருந்து போர்டிங் கேட்களுக்கு அவர்களை அழைத்து வரவும், பஸ்கள் பயன்படுத்தப்படும். அப்படிப்பட்ட ஒரு பஸ்ஸில்தான் ஷாருக்கான் பயணம் செய்துள்ளார்.

இந்த வீடியோ மும்பை விமான நிலையத்தில் (Mumbai Airport) எடுக்கப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வீடியோவிற்கு கீழே ரசிகர்கள் பலரும், ஷாருக்கானின் எளிமையை வெகுவாக பாராட்டி வருகின்றனர். ஆனால் பாலிவுட் பிரபலங்கள் இப்படி எளிமையாக பயணம் செய்வது இது முதல் முறை கிடையாது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இதற்கு முன்பாக ஹிருத்திக் ரோஷன் (Hrithik Roshan), அக்ஸய் குமார் (Akshay Kumar), ஹேமமாலினி (Hema Malini) மற்றும் கியாரா அத்வானி (Kiara Advani) போன்ற நடிகர், நடிகைகள், மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். சாலை மார்க்கமாக பயணம் செய்தால், போக்குவரத்து நெரிசலில் சிக்க நேரிடும். இதை தவிர்ப்பதற்காகவே அவர்கள் மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மிகவும் பிரபலமான மனிதர்கள், எளிமையான முறையில் பயணம் செய்வது உண்மையிலேயே வரவேற்கப்பட வேண்டிய ஒரு விஷயம்தான். ஆனால் உண்மை என்னவென்றால், பஸ், மெட்ரோ ரயில் போன்ற பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்ய இன்னும் நிறைய பிரபலங்கள் விருப்பத்துடன்தான் உள்ளனர்.
ஆனால் பஸ்கள் மற்றும் மெட்ரோ ரயில்களில் அவர்கள் வந்தால் கூட்டம் கூடி விடும். இது பிரபலங்களுக்கு மட்டுமல்லாது, அவர்களுடன் பயணம் செய்யும் மற்றவர்களுக்கும் அசௌகரியத்தை ஏற்படுத்தி விடும். இதன் காரணமாகவே நிறைய பிரபலங்கள் பொது போக்குவரத்து வாகனங்களை தவிர்த்து விட்டு, தங்கள் சொந்த வாகனங்களில் பயணம் செய்வதையே வழக்கமாக வைத்துள்ளனர்.
இங்கே பொதுமக்களாகிய நாம் மாற வேண்டிய அவசியம் உள்ளது என்பதற்காகவே இதை கூறுகிறோம். சாலையிலோ அல்லது பொது போக்குவரத்து வாகனங்களிலோ பிரபலங்களை பார்த்தால், இயல்பாக நடந்து கொள்ள வேண்டும். அவர்களை சுற்றி கூட்டம் போட்டால், அவர்கள் பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்வது என்பது அதிசயமான ஒரு நிகழ்வாகவே இருக்கும்.


Click it and Unblock the Notifications








