முகம் கூட தெரியாத அளவுக்கு துப்பாக்கிகள் சூழ உச்சகட்ட பாதுகாப்பு! மூனரை கோடி ரூபா கார்ல போனது இவ்ளோ பெரிய ஆளா!

மழை, வெயில் ஆகியவற்றில் இருந்து பாதுகாப்பு அளிப்பதற்காக மட்டுமே குடைகள் பயன்படுத்தப்படுகின்றன என்ற பொதுவான கருத்து பலருக்கும் இருக்கிறது. ஆனால் குடை பயன்பாடு என்பது, அதிகாரம், கௌரவம், செழிப்பு, பாதுகாப்பு போன்றவற்றின் குறியீடாகவும் பார்க்கப்படுகிறது. செல்வந்தர்கள் மற்றும் அரசியல்வாதிகள் போன்ற செல்வாக்கு மிக்க மனிதர்கள் வரும்போது, குடைகள் பிடிக்கப்படுவதை இதற்கு ஒரு உதாரணமாக கூறலாம். இந்த சூழலில், மிகவும் விலை உயர்ந்த சொகுசு காரில் ஏறி சென்ற பிரபலமான மனிதர் ஒருவருக்கு, குடை பிடிக்கப்பட்ட வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

இந்த வைரல் வீடியோவில் நாம் பார்ப்பது, மிகவும் விலை உயர்ந்த மெர்சிடிஸ் மேபெக் எஸ்-க்ளாஸ் (Mercedes-Maybach S-Class) சொகுசு கார் ஆகும். இன்னும் சரியாக சொல்வதென்றால், மெர்சிடிஸ்-மேபெக் எஸ்-க்ளாஸ் காரின் எஸ்580 4மேட்டிக் (S580 4MATIC) வேரியண்ட்டைதான் இந்த வைரல் வீடியோவில் நாம் பார்க்கிறோம்.

Shah Rukh Khan Spotted In Mercedes-Maybach S-Class

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஆல் வீல் டிரைவ் (AWD - All Wheel Drive) சிஸ்டம் கொண்ட வாகனங்களுக்கான ஒரு மார்க்கெட்டிங் பெயர்தான் 4மேட்டிக் ஆகும். இந்த சிஸ்டம், இன்ஜின் உருவாக்கும் சக்தியை, காரின் 4 சக்கரங்களுக்கும் செலுத்துகிறது. இதன் மூலமாக காரின் செயல்திறன் மற்றும் கட்டுப்பாட்டை மேம்படுத்துகிறது. குறிப்பாக வழுக்கும் தன்மை உடைய சாலைகளில், இந்த சிஸ்டம் மிகவும் உதவிகரமாக இருக்கும்.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மெர்சிடிஸ் மேபெக் எஸ்-க்ளாஸ் எஸ்580 4மேட்டிக் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலையே (Ex-Showroom Price) 2.77 கோடி ரூபாயாக இருக்கிறது. ஆன்-ரோடு விலை (On-road Price) சுமார் 3.50 கோடி ரூபாய் வரும். இவ்வளவு விலை உயர்ந்த காரில் ஏறி பயணம் செய்திருப்பது பிரபல நடிகரான ஷாருக்கான் (Shah Rukh Khan) ஆவார்.

Shah Rukh Khan

ஆனால் இந்த வைரல் வீடியோவில் ஷாருக்கானின் முகத்தை நம்மால் முழுமையாக காண முடியவில்லை. இருப்பினும் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் புடை சூழ அவர், மெர்சிடிஸ்-மேபெக் எஸ்-க்ளாஸ் காரின் எஸ்580 4மேட்டிக் வேரியண்ட்டில் ஏறுவதை நம்மால் தெளிவாக காண முடிகிறது. அத்துடன் அவருக்கு குடையும் பிடித்துள்ளனர்.

இந்த கார், ஷாருக்கானின் பெயரில்தான் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஷாருக்கான் இந்த காரை வாங்கினார். இந்த விலை உயர்ந்த காரில், 4.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 5,500 ஆர்பிஎம்மில் 496 பிஹெச்பி பவரையும், 2,000-4,500 ஆர்பிஎம்மில் 700 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும் வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் உடன் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி, காரின் 4 சக்கரங்களுக்கும், இன்ஜின் உருவாக்கும் சக்தி செலுத்தப்படுகிறது. ஷாருக்கான் மட்டுமல்லாது, அவரது மகள் சுஹானா கானையும் (Suhana Khan) கூட, மெர்சிடிஸ்-மேபெக் எஸ்-க்ளாஸ் காரில் அடிக்கடி காண முடியும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இங்கே மெர்சிடிஸ்-மேபெக் என்பது என்ன? என்ற சந்தேகமும் கூட ஒரு சிலருக்கு வரலாம். ஏனெனில் நம் அனைவருக்கும் மெர்சிடிஸ் பென்ஸ் என்பது நன்றாக தெரியும். ஆனால் மெர்சிடிஸ்-மேபெக் என்பது ஒரு சிலருக்கு தெரியாது. இது மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் லக்ஸரி சப்-பிராண்டு ஆகும்.

மெர்சிடிஸ்-மேபெக் கார்கள் அனைத்தும், சொகுசு, செயல்திறன் மிக்க சக்தி வாய்ந்த இன்ஜின்கள் மற்றும் ஆடம்பரம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக மிகவும் புகழ் பெற்றவையாக விளங்குகின்றன. எனவே மெர்சிடிஸ்-மேபெக் சொகுசு கார்களுக்கு இந்தியாவில், குறிப்பாக பாலிவுட் திரையுலகில், மிகப்பெரிய வாடிக்கையாளர்கள் வட்டம் இருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஷாருக்கான் சொகுசு கார்களில் பயணம் செய்வதை அதிகமாக விரும்ப கூடியவர். அவரிடம் இந்த மெர்சிடிஸ்-மேபெக் எஸ்-க்ளாஸ் மட்டுமல்லாது, ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் (Rolls Royce Cullinan Black Badge) மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் (Rolls Royce Phantom) ஆகிய சொகுசு கார்களும் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 29, 2025, 16:52 [IST]
English summary
Shah rukh khan spotted in mercedes maybach s class s580 4matic viral video
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+