சாலையில் சுத்திய 8 கோடி ரூபாய் கார்! உள்ளே இருந்தது யார்னு தெரிஞ்சா அசந்திருவீங்க! அதான் வெள்ளை கலர்ல இருக்கா!
பள்ளியில் ஒன்றாக படித்த அல்லது அலுவலகத்தில் ஒன்றாக வேலை செய்த நண்பர்களை மீண்டும் சந்திக்கும் ரீயூனியன் (Reunion) நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைப்பது உண்மையிலேயே அனைவருக்கும் மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும் ஒன்றாகவே இருக்கும்.
திரையுலக நட்சத்திரங்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல. இதை நிரூபிக்கும் வகையில் திரையுலக நட்சத்திரங்களின் பிரம்மாண்ட ரீயூனியன் ஒன்று சமீபத்தில் நடைபெற்றுள்ளது. ஷாருக்கான் (Shah Rukh Khan), ராணி முகர்ஜி (Rani Mukherjee) மற்றும் கரண் ஜோஹர் (Karan Johar) உள்ளிட்ட நட்சத்திரங்கள் இந்த ரீயூனியன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.

ஷாருக்கான் மற்றும் ராணி முகர்ஜி உள்ளிட்டோரின் நடிப்பில் கடந்த 1998ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி வெளியான திரைப்படம் 'குச் குச் ஹோத்த ஹே' (Kuch Kuch Hota Hai). கரண் ஜோஹர் இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு, ரியூனியன் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு ஷாருக்கான் தனது வெள்ளை நிற ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் (Rolls Royce Cullinan) காரில் வந்து சென்றுள்ளார். மறுபக்கம் ராணி முகர்ஜி தனது நீல நிற மெர்சிடிஸ்-மேபக் எஸ்-க்ளாஸ் (Mercedes-Maybach S-Class) காரிலும், கரண் ஜோஹர் தனது வெள்ளை நிற ஆடி ஏ8 (Audi A8) காரிலும் வந்து சென்றுள்ளனர்.

யூடியூப் (YouTube) தளத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோ (Viral Video), சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. இவர்களில் உச்ச நட்சத்திரம் என்றால், அது நிச்சயமாக ஷாருக்கான்தான். அவர் தற்போதெல்லாம் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரில்தான் அதிகமாக வலம் வருகிறார்.
ஷூட்டிங் சென்று வருவது, விமான நிலையங்களுக்கு சென்று வருவது என பல்வேறு இடங்களுக்கும், ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரில்தான், ஷாருக்கான் பயணம் செய்கிறார். இந்த ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரின் ஆரம்ப விலையே (Price) 6.95 கோடி ரூபாயாக உள்ளது. இத்தனைக்கும் இது எக்ஸ் ஷோரூம் விலை மட்டுமே.
ஆன் ரோடு விலை கிட்டத்தட்ட 8 கோடி ரூபாய் வரும். கல்லினன்தான் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் முதல் ஆல் வீல் டிரைவ் எஸ்யூவி ரக கார் ஆகும். கடந்த 2018ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரில், 6.75 லிட்டர் ட்வின் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் (Petrol Engine) பொருத்தப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக 600 பிஎஸ் பவர் மற்றும் 900 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில், இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன் பல்வேறு அதிநவீன மற்றும் சொகுசு வசதிகளும், ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரில் வாரி வழங்கப்பட்டுள்ளன.
பாலிவுட் திரையுலகை பொறுத்தவரையில், ஷாருக்கான் மட்டுமல்லாது, அஜய் தேவ்கன் (Ajay Devgn) போன்றோரிடமும் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் கார் இருக்கிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இதுதவிர முகேஷ் அம்பானி (Mukesh Ambani) போன்ற தொழில் அதிபர்களும் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரை சொந்தமாக வைத்துள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரில் ஷாருக்கானை பார்ப்பது தற்போது வாடிக்கையான ஒரு நிகழ்வாக மாறி விட்டது. வெள்ளை நிறம் ஷாருக்கானுக்கு பிடித்தமான ஒன்று. பேட்டி ஒன்றில் அவரே இதை கூறியுள்ளார். இதன் காரணமாகவே அவர் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரை வெள்ளை நிறத்தில் வாங்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications








