ஒரு காலத்துல சாதாரண ஆம்னிதான் வெச்சிருந்தாரு! இப்ப போலீஸ் பாதுகாப்போட 10 கோடி ரூபா கார்ல மாஸ் காட்றாரு!

இந்திய சாலைகளில் ஒரு சமயத்தில் மிகவும் பிரபலமாக இருந்த கார் மாருதி சுஸுகி ஆம்னி (Maruti Suzuki Omni). இது கடந்த 1984ம் ஆண்டு முதல் முறையாக இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. சுமார் 35 ஆண்டுகள் விற்பனையில் இருந்த நிலையில், கடந்த 2019ம் ஆண்டு அதன் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

ஆரம்பத்தில் மாருதி வேன் என்ற பெயரில்தான், ஆம்னி விற்பனை செய்யப்பட்டது. ஆனால் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு 4 ஆண்டுகள் கழித்து, அதாவது 1988ம் ஆண்டில்தான் இதன் பெயர் ஆம்னி என மாற்றம் செய்யப்பட்டது. இன்னும் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும், ஆம்னி என்ற இந்த பெயர் நிலைத்து நிற்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

Shah Rukh Khan s Rolls Royce Cullinan

இன்று ஆடி (Audi), பிஎம்டபிள்யூ (BMW), மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz) மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce) என மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்களில் பயணம் செய்து கொண்டிருக்கும் பலரின் முதல் கார் மாருதி சுஸுகி ஆம்னிதான். இந்திய திரை உலகிலேயே இதற்கு உதாரணங்கள் உள்ளன.

குறிப்பாக பாலிவுட் நடிகர் ஷாருக்கான (Shah Rukh Khan) இதற்கு நம்மால் உதாரணமாக சொல்ல முடியும். உண்மையில் மாருதி சுஸுகி ஆம்னிதான், ஷாருக்கானின் முதல் கார். இந்த காருக்கு அவரது மனதில் எப்போதும் தனி இடம் உள்ளது. இதற்கு 2 முக்கியமான காரணங்கள் இருக்கின்றன.

Rolls Royce Cullinan

ஒன்று, இதுதான் அவருடைய முதல் கார். மற்றொன்று இந்த கார், ஷாருக்கானின் அம்மா மூலமாக அவருக்கு பரிசாக கிடைத்தது ஆகும். எனவே தற்போது மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்களில் பயணம் செய்தாலும் கூட, மாருதி சுஸுகி ஆம்னியை ஷாருக்கான் ஒருபோதும் மறக்கவில்லை.

ஷாருக்கானிடம் தற்போது ஆடி ஏ8 (Audi A8), பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் (BMW 7 Series), பிஎம்டபிள்யூ ஐ8 (BMW i8), மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் (Mercedes Benz S-Class), மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ (Mercedes Benz GLE) போன்ற விலை உயர்ந்த கார்கள் எல்லாம் உள்ளன.

அத்துடன் புகாட்டி வெரோன் (Bugatti Veyron), ரேஞ்ச் ரோவர் வோக் (Range Rover Vogue) மற்றும் பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி (Bentley Continental GT) உள்ளிட்ட கார்களையும் கூட ஷாருக்கான் வைத்துள்ளார். இந்த வரிசையில் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் (Rolls Royce Cullinan) கார் ஒன்றும் ஷாருக்கானிடம் உள்ளது.

அந்த கார் தற்போது கேமரா கண்களில் சிக்கியுள்ளது. போலீஸ் பாதுகாப்புடன், ஷாருக்கானின் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் கார் சாலையில் வலம் வந்த வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. கடந்த 2023ம் ஆண்டு, ஷாருக்கான் நடிப்பில் பதான் (Pathaan) திரைப்படம் வெளியானது.

இந்த திரைப்படம் 1,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த பிரம்மாண்ட வெற்றியை கொண்டாடும் விதமாகதான், ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரை ஷாருக்கான் வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த காரின் மதிப்பு சுமார் 10 கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.

ரோல்ஸ் ராய்ஸ் கார்களில், வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப செய்யப்படும் மாடிஃபிகேஷன்கள் அதிகம் என்பதால், துல்லியமான விலையை (Price) கணிப்பது சற்று சவாலானது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஷாருக்கானிடம் இருப்பது ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரின் பிளாக் பேட்ஜ் வேரியண்ட் (Black Badge) ஆகும்.

ஆனால் இது வெள்ளை நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. அனேகமாக இதுதான் இந்தியாவின் முதல் வெள்ளை நிற ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் என கூறப்படுகிறது. இந்த காரில், அதிகபட்சமாக 600 பிஎஸ் பவர் மற்றும் 900 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய, 6.75 லிட்டர் ட்வின் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சாதாரண மாருதி சுஸுகி ஆம்னி காரில் சென்று கொண்டிருந்த ஒருவர், தற்போது ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் போன்ற மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்களில் பயணம் செய்கிறார் என்றால், அது அவருடைய உழைப்பு, தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சி ஆகியவற்றையே எடுத்துக்காட்டுகிறது. உண்மையில் ஷாருக்கான் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 24, 2025, 17:47 [IST]
English summary
Shah rukh khans rolls royce cullinan spotted with security vehicles viral video
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+