பிரபல ஹீரோ ஒருபோதும் காரின் வலது பக்கத்தில் அமர மாட்டாராம்... ஏன் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!
பிரபல ஹீரோ ஒருவர் காரின் வலது பக்கத்தில் ஒருபோதும் அமர மாட்டாராம். அவர் யார்..? ஏன் வலதுபக்கத்தில் அமர மாட்டார் என்பதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

பெரும்பாலான திரைப்பட ஹீரோக்கள் நிஜ வாழ்க்கையில் சில சமயங்களில் சாமணிய மனிதர்களைப் போன்று நடந்துக்கொள்வதை நம்மால் காண முடிகின்றது. இவர்கள், திரைப்படங்களில் காட்டும் ஹீரோயிஷத்தை நிஜ வாழ்க்கையில் துளியளவும் காண்பிப்பதில்லை.

இது ஹாலிவுட், பாலிவுட் மற்றும் கோலிவுட் என அனைத்து திரையுலகிற்கும் பொருந்தும். திரையுலகில் பல்வேறு சாகசத்தை நிகழ்த்தும் அவர்களும் ஓர் சாதாரண மனிதர்கள்தான் என்பதை எப்போதும் மறந்துவிடக்கூடாது.

அவர்களுக்கும் நம்மைப் போன்றே ஒரு சில விஷயங்களைக் கண்டால் தானாக பயம் தோன்றும். நம்மில் பலருக்கு எப்படி பல்லி, பூரான், கரப்பான் உள்ளிட்டவற்றை பார்த்தால் பயம் ஏற்படுகின்றதோ அதேபோன்றுதான் ஹீரோ மற்றும் ஹீரோயின்களுக்கும் அவற்றின்மீது இனம் புரியாத பயம் நிலவுகின்றது.

அந்தவகையில், பிரபல பாலிவுட் ஹீரோ ஒருவருக்கு காரின் வலது பக்கத்தில் அமர்ந்து செல்வது என்றால் மிகவும் பயம் என வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார்.
அவர் வேறு யாருமில்லை இந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான ஷாருக்கான்தான்.

சமீபத்தில், கிரேட்டர் நொய்டாவில் ஆட்டோ எக்ஸ்போ 2020 நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்ட அவர், நியூஸ் 18 ஆங்கிலத்திற்கு பிரத்யேக பேட்டியை அளித்திருந்தார். அப்போதுதான் இந்த வித்தியாசமான தகவலை பதிவு செய்திருந்தார்.

தொடர்ந்து, இந்தியாவில் காரை இயக்குவது மற்றும் பயணிப்பதையும் துளியளவும் விரும்பவில்லை என்ற தகவலையும் அவர் கூறியிருந்தார். ஆனால், இரவு நேரங்களில் மும்பையின் பிகேசி சாலையில் பயணிப்பது மட்டும் மிகவும் பிடிக்கும் என தெரிவித்தார்.

ஏனென்றால், அப்போதுதான் அந்த சாலை வாகன நெரிசல் இல்லாமல் வெறிச்சோடி காணப்படும் இதன் காரணத்தினாலயே அப்போது காரை இயக்க மிகவும் பிடிக்கும் என்று அவர் வியப்பான பதிலை கூறியிருந்தார்.

இத்துடன், வலது பக்க டிரைவிங்கை முழுமையாக வெறுப்பதகவும், இதன்காரணத்தினாலயே வெளிநாடுகளில் படப்பிடிப்பின்போது வல பக்க டிரைவிங்கை முழுமையாக வேண்டாம் என கூறுவதாக அவர் தெரிவித்தார். மேலும், வலபக்க டிரைவிங் என்றால் தனக்கு மிகவும் பயம் எனவும் அதிர்ச்சியான உண்மையை அசால்டாக கூறினார்.

என்னது, ஒரு மிகப்பெரிய ஹீரோவுக்கு வல பக்க ஸ்டியரிங் உள்ள காரை இயக்குவது என்றால் பயமா.. என நம்மில் பலருக்கு தோன்றலாம். இதை கேள்வியாக கேட்பதைக் காட்டிலும் நாம் அதனை முயற்சி செய்து பார்க்கும்போது அதன் உண்மைநிலை புரியும்.

உதாரணமாக, வலது பக்க கையை பயன்படுத்தும் நம்மால் இடது பக்க கையை எழதவோ அல்லது மற்ற பயன்பாட்டிகளுக்கோ உபயோகப்படுத்த முடியாது. முயற்சித்து பார்த்தால் மிகவும் சிரமமாக இருக்கும்.

இதேபோன்று, திடீரென வலது கையை கியருக்கும், இடது கையை ஸ்டியரிங் வீலுக்கும் பயன்படுத்தும்போது மிகப்பெரிய சிக்கலை நாம் சந்திக்க நேரிடும். சில நேரங்களில் இது விபத்தைக்கூட ஏற்படுத்தலாம். இதன்காரணத்தினாலயே ஷாருக்கான் வல பக்க டிரைவிங்கை முழுமையாக வெறுக்கிறார்.


Click it and Unblock the Notifications








