இத்தன லட்சத்தை அள்ளி குடுத்திருக்காரா... மிகவும் விலை உயர்ந்த பைக்கை வாங்கிய பிரபல நடிகர்... யார்னு தெரியுதா?

பிரபல நடிகர் ஒருவர் மிகவும் விலை உயர்ந்த புத்தம் புதிய பைக் ஒன்றை தற்போது வாங்கியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இத்தன லட்சத்தை அள்ளி குடுத்திருக்காரா... மிகவும் விலை உயர்ந்த பைக்கை வாங்கிய பிரபல நடிகர்... யார்னு தெரியுதா?

இந்தியாவின் முன்னணி நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் என திரைத்துறையை சேர்ந்த பலரும் சொகுசு கார்களை வாங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் ஒரு சிலர் மட்டுமே பைக்குகள் மீது காதல் கொண்டவர்களாக உள்ளனர். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் ஷாகித் கபூர் (Shahid Kapoor).

இத்தன லட்சத்தை அள்ளி குடுத்திருக்காரா... மிகவும் விலை உயர்ந்த பைக்கை வாங்கிய பிரபல நடிகர்... யார்னு தெரியுதா?

பாலிவுட் திரைப்படங்கள் மூலம் மிகவும் பிரபலமான நடிகராக அறியப்படும் ஷாகித் கபூருக்கு அறிமுகமே தேவையில்லை. இவருக்கு பைக்குகள் என்றால் மிகவும் பிடிக்கும். டுகாட்டி (Ducati) உள்பட பல்வேறு நிறுவனங்களின் பைக்குகள் ஏற்கனவே அவரிடம் உள்ளன. இந்த சூழலில் தற்போது மேலும் ஒரு டுகாட்டி பைக்கை ஷாகித் கபூர் வாங்கியுள்ளார்.

இத்தன லட்சத்தை அள்ளி குடுத்திருக்காரா... மிகவும் விலை உயர்ந்த பைக்கை வாங்கிய பிரபல நடிகர்... யார்னு தெரியுதா?

இந்த முறை அவர் வாங்கியிருப்பது டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் டெசர்ட் ஸ்லெட் (Ducati Scrambler Desert Sled) பைக் ஆகும். இந்த புகைப்படங்களை ஷாகித் கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வெள்ளை மற்றும் நீல நிற கலவையில் இந்த பைக் கண்களை கவரும் வகையில் இருக்கிறது.

இத்தன லட்சத்தை அள்ளி குடுத்திருக்காரா... மிகவும் விலை உயர்ந்த பைக்கை வாங்கிய பிரபல நடிகர்... யார்னு தெரியுதா?

டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் டெசர்ட் ஸ்லெட் பைக்கில் 803 சிசி, எல்-ட்வின் சிலிண்டர், ஏர் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 75 பிஹெச்பி பவரையும், 68 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த பைக்கின் எக்ஸ் ஷோரூம் விலை சுமார் 12 லட்ச ரூபாய் ஆகும். அதே நேரத்தில் இந்த பைக்கின் ஆன் ரோடு விலை சுமார் 14 லட்ச ரூபாய் வருகிறது.

இத்தன லட்சத்தை அள்ளி குடுத்திருக்காரா... மிகவும் விலை உயர்ந்த பைக்கை வாங்கிய பிரபல நடிகர்... யார்னு தெரியுதா?

முன்னதாக டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 (Ducati Scrambler 1100) பைக் ஒன்றையும் ஷாகித் கபூர் சொந்தமாக வைத்துள்ளார். இந்த பைக்கை அவர் கடந்த 2019ம் ஆண்டு வாங்கினார். இது ஸ்பெஷல் எடிசன் பைக் ஆகும். ஆக்டிவ், ஜர்னி மற்றும் சிட்டி ஆகிய 3 ரைடிங் மோடுகள் உடன் ரைடு-பை-வயர் தொழில்நுட்பத்தையும் இந்த பைக் பெற்றுள்ளது.

இத்தன லட்சத்தை அள்ளி குடுத்திருக்காரா... மிகவும் விலை உயர்ந்த பைக்கை வாங்கிய பிரபல நடிகர்... யார்னு தெரியுதா?

இந்த பைக்கில் பொருத்தப்பட்டிருப்பது 1,079 சிசி, லிக்யூட் கூல்டு, எல்-ட்வின் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 7,600 ஆர்பிஎம்மில் 85 பிஹெச்பி பவரையும், 4,750 ஆர்பிஎம்மில் 88 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இதில், ஆக்டிவ் மற்றும் ஜர்னி ஆகிய 2 ரைடிங் மோடுகள் மட்டுமே 85 பிஹெச்பி பவரை உருவாக்கும்.

இத்தன லட்சத்தை அள்ளி குடுத்திருக்காரா... மிகவும் விலை உயர்ந்த பைக்கை வாங்கிய பிரபல நடிகர்... யார்னு தெரியுதா?

சிட்டி மோடு அதிகபட்சமாக 75 பிஹெச்பி பவரை மட்டுமே உருவாக்கும். இதுதவிர பிஎம்டபிள்யூ ஆர் 1250 ஜிஎஸ் (BMW R 1250 GS) பைக் ஒன்றையும் ஷாகித் கபூர் வைத்துள்ளார். இது அட்வென்ஜர் டூரர் பைக் ஆகும். இந்த பைக்கில் 1,254 சிசி, பாக்ஸர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 138 பிஎஸ் பவரை உருவாக்கும்.

இத்தன லட்சத்தை அள்ளி குடுத்திருக்காரா... மிகவும் விலை உயர்ந்த பைக்கை வாங்கிய பிரபல நடிகர்... யார்னு தெரியுதா?

மேலும் இதே பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் பிஎம்டபிள்யூ ஜி 310ஆர் (BMW G 310R) பைக் ஒன்றும் ஷாகித் கபூரிடம் உள்ளது. இது ஷாகித் கபூரிடம் இருப்பதில் மிகவும் விலை குறைவான பைக்குகளில் ஒன்றாகும். அத்துடன் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் ஃபேட்பாய் (Harley-Davidson Fatboy) பைக்கையும் ஷாகித் கபூர் சொந்தமாக வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தன லட்சத்தை அள்ளி குடுத்திருக்காரா... மிகவும் விலை உயர்ந்த பைக்கை வாங்கிய பிரபல நடிகர்... யார்னு தெரியுதா?

தமிழ் திரையுலகை பொறுத்தவரையில், நடிகர் அஜீத் குமார் மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் போன்ற ஒரு சிலர் பைக்குகளை மிகவும் விரும்ப கூடியவர்களாக இருக்கின்றனர். இந்த வரிசையில் பாலிவுட் திரையுலகில் பைக்குகளை அதிகம் விரும்ப கூடியவர்களில் ஷாகித் கபூரும் ஒருவர் என்பது அவரது பைக் கலெக்ஸனை பார்த்தாலே நமக்கு எளிதாக புரிந்து விடுகிறது.

இத்தன லட்சத்தை அள்ளி குடுத்திருக்காரா... மிகவும் விலை உயர்ந்த பைக்கை வாங்கிய பிரபல நடிகர்... யார்னு தெரியுதா?

தற்போது வாங்கியுள்ள புதிய டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் டெசர்ட் ஸ்லெட் பைக்கில் ஷாகித் கபூர் பல்வேறு இடங்களுக்கு ரைடு செல்லும் புதிய புகைப்படங்கள் விரைவில் நமக்கு கிடைத்தாலும் கிடைக்கலாம். அதற்காக ஷாகித் கபூரின் ரசிகர்களும், பைக் ஆர்வலர்களும் காத்து கொண்டுள்ளனர். பொதுவாக ஒரு சில நடிகர்கள் புதிய பைக்குகளை வாங்கிய பிறகு, பொது சாலைகளில் அந்த பைக்குகளில் வலம் வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Monday, August 29, 2022, 12:36 [IST]
English summary
Shahid kapoor buys ducati scrambler desert sled
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+