3 கோடி ரூபாய் காரை சத்தமே இல்லாம வாங்கனது அவரா! மொட்டைலாம் போட்டூட்டு அடையாளம் தெரியாத அளவுக்கு மாறீட்டாரு!

பாலிவுட் (Bollywood) திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் ஷாகித் கபூர் (Shahid Kapoor). பாலிவுட் திரையுலகை கடந்து, மற்ற மொழி ரசிகர்கள் மத்தியிலும் இவர் மிகவும் பிரபலம். மற்ற நடிகர், நடிகைகளை போலவே, ஷாகித் கபூரும் மிகவும் விலை உயர்ந்த கார்கள் பலவற்றை சொந்தமாக வைத்துள்ளார்.

இதில், மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்400 (Mercedes-Benz S400), மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்-க்ளாஸ் (Mercedes-Benz GL-Class), மெர்சிடிஸ்-பென்ஸ் எம்எல்-க்ளாஸ் (Mercedes-Benz ML-Class), லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் வோக் (Land Rover Range Rover Vogue) மற்றும் போர்ஷே கேயென்னே ஜிடிஎஸ் (Porsche Cayenne GTS) போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.

Shahid Kapoor Buys Mercedes-Maybach GLS 600

மேற்கண்ட கார்கள் தவிர, ஹார்லி-டேவிட்சன் ஃபேட் பாய் (Harley-Davidson Fat Boy) போன்ற விலை உயர்ந்த பைக்குகளும், ஷாகித் கபூரிடம் உள்ளன. இந்த வரிசையில் மற்றொரு விலை உயர்ந்த கார் ஒன்று, ஷாகித் கபூரின் கார் கலெக்ஸனில் (Car Collection) தற்போது இணைந்துள்ளது.

மெர்சிடிஸ்-மேபெக் ஜிஎல்எஸ் 600 (Mercedes-Maybach GLS 600) ஆகும். இதன் எக்ஸ் ஷோரூம் விலையே (Ex-Showroom Price) 3 கோடி ரூபாய் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது சொகுசு எஸ்யூவி (Luxury SUV) ரகத்தை சேர்ந்தது ஆகும். இது பாலிவுட் திரையுலக நட்சத்திரங்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு கார் ஆகும்.

Mercedes-Maybach GLS 600

ரன்வீர் சிங் (Ranveer Singh), ஆயுஷ்மான் குர்ரரானா (Ayushmann Khurrana) மற்றும் கீர்த்தி சனோன் (Kriti Sanon) உள்ளிட்ட நட்சத்திரங்களும், மெர்சிடிஸ்-மேபெக் ஜிஎல்எஸ் 600 காரை வைத்துள்ளனர். மெர்சிடிஸ்-மேபெக் ஜிஎல்எஸ் 600 காரில், 4.0 லிட்டர் வி8 பை-டர்போ பெட்ரோல் (Petrol) இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக 542 பிஹெச்பி பவர் மற்றும் 730 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இதனுடன் கூடுதலாக 21 பிஹெச்பி பவர் மற்றும் 250 என்எம் டார்க் திறனை வழங்க கூடிய 48வி மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பமும் (48V Mild Hybrid Technology) கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த சக்தியானது, 9G-ட்ரானிக் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் மூலம், காரின் 4 சக்கரங்களுக்கும் அனுப்பப்படுகிறது. பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் என்ற வேகத்தை வெறும் 4.9 வினாடிகளில் எட்டி விடக்கூடிய திறனை இந்த கார் பெற்றுள்ளது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 250 கிலோ மீட்டர் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மெர்சிடிஸ்-மேபெக் ஜிஎல்எஸ் 600 கார், ஷாகித் கபூர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பாதுகாப்பான மற்றும் சௌகரியமான பயணத்தை வழங்கும் என நாம் உறுதியாக நம்பலாம். ஏனெனில் அந்த அளவிற்கு பல்வேறு அதிநவீன வசதிகளை எல்லாம் இந்த விலை உயர்ந்த கார் பெற்றுள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 20, 2023, 14:52 [IST]
English summary
Shahid kapoor buys mercedes maybach gls 600 worth rs 3 crore all details here
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+