உள்ள நடக்குறது அப்படியே தெரியும் போலையே! இந்த காரையா ரூ. 4.50கோடி கொடுத்து வாங்கினாரு! இது ஒரு ரேர் பீஸ் காரு!
நெரிசல் மிகுந்த சாலையில் பிரபல நடிகர் ஒருவர் தன்னுடைய நான்கரை கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரில் பயணிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகிக் கொண்டு இருக்கின்றது. அந்த நடிகர் யார்? அவர் ஓட்டிச் சென்றது என்ன கார் மாடல்? அதை ஏன் அரிய வகை கார் மாடல் என குறிப்பிட்டுள்ளோம்? அந்த காரின் சிறப்புகள் என்ன? மற்றும் விலை எவ்வளவு என்பது போன்ற முக்கிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.
நெரிசல் மிகுந்த சாலையில் பயணித்த அந்த நடிகர் வேறு யாருமல்ல பிரபல இந்தி திரைப்பட நடிகர் ஷாகித் கபூரே அவர் ஆவார். இவர் ஓட்டிச் சென்றது மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் முக்கிய தயாரிப்புகளில் ஒன்றான மேபேக் ஜிஎல்எஸ் 600 நைட் சீரிஸ் (Mercedes Maybach GLS600 Night Series) என்பதே ஆகும்.

இது ஓர் லிமிடெட் எடிசன் பதிப்பாகும். இந்த கார் மாடலிலேயே அவர் மும்பையின் நெரிசல் மிகுந்த சாலைகளில் ஒன்றான பந்த்ரா சாலையில் பயணித்திருக்கின்றார். இது ஓர் சிறப்பு பதிப்பு கார் மாடல் என்பதால் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கும். இதனாலயே இதனை அரிய வகை கார் மாடல் என நாங்கள் குறிப்பிட்டுள்ளோம்.
இந்த கார் மாடலின் ஒரே ஒரு யூனிட்டின் விலை மட்டுமே ரூ. 4.50 கோடி ஆகும். இத்தகைய விலை உயர்ந்த கார் மாடலிலேயே ஷாகித் கபூர் கெத்தாக அமர்ந்துக் கொண்டு பயணித்திருக்கின்றார். தெளிவாக தெரியக் கூடிய ஜன்னல் கண்ணாடிகளையே அந்த கார் மாடல் கொண்டிருக்கின்றன.
எனவே டிரைவர் இருக்கையில் அமர்ந்துக் கொண்டு நடிகர் காரை ஓட்டுவதை நம்மால் தெளிவாகக் காண முடிகின்றது. இப்படி ஒரு பிரபலம் செல்வது அவருக்கு மட்டுமல்ல அவருடைய காருக்கும் பாதிப்பை நேரிடலாம். ரசிகர்கள் அவர் மீதிருக்கும் அன்பின் காரணமாக அவர் மீது பாய்வதோடு, அவரை சேதப்படுத்த நேரிடலாம்.
இதை பற்றி சற்றும் கவலைக் கொள்ளாமல் துணிச்சலாக அந்த நடிகர் நெரிசல் மிகுந்த சாலையில் வலம் வந்திருக்கின்றார். ஷாகித் கபூர் சமீபத்திலேயே இந்த காரை வாங்கியதாகக் கூறப்படுகின்றது. ஆகையால், சீக்கிரமே தனிமை உணர்வை வழங்கக் கூடிய மாற்றங்களை இந்த காரில் அவர் மேற்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேவேளையில், ஆடம்பர அம்சங்களையும், நவீன கால தொழில்நுட்ப அம்சங்களையும் மிக அதிகளவில் தாங்கியிருக்கக் கூடிய ஓர் கார் மாடலாக மெர்சிடிஸ் பென்ஸ் மேபேக் ஜிஎல்எஸ் 600 நைட் சீரிஸ் காட்சியளிக்கின்றது. ஏற்கனவே இவரிடத்தில் மெர்சிடிஸ் மேபேக் ஜிஎல்எஸ் 600 எஸ்யூவி கார் பயன்பாட்டில் இருக்கின்ற சூழலிலேயே, அவர் இதன் சிறப்பு பதிப்பான மெர்சிடிஸ் மேபேக் ஜிஎல்எஸ் 600 நைட் எடிசனை வாங்கி இருக்கின்றார்.
இது ஓர் சிறப்பு பதிப்பு என்பதற்கு சான்றாக இந்த காரின் நிற அலங்கரிப்பே சான்றாக இருக்கின்றது. காரின் மேற்பக்கம் ஓர் நிறத்திலும், கீழ் பக்கம் ஓர் நிறத்திலும் காட்சியளிக்கின்றது. டீப் மெட்டாலிக் எமரால்டு கிரீன் மற்றும் ஓனிக்ஸ் பிளாக் ஆகிய நிறங்களாலேயே இந்த காரை அலங்கரித்திருக்கின்றனர்.
நிறத்தில் மட்டுமல்ல சிறப்பம்சங்களைத் தாங்கியிருப்பதிலும் இந்த கார் மாடல் தனித்துவமானதாகக் காட்சியளிக்கின்றது. அந்தவகையில், 22 அங்குல கருப்பு நிற அலாய் வீல், நப்பா லெதர் போர்த்தப்பட்ட இருக்கைக, 12.3 அங்குல டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இதுமட்டுமல்ல, 27 ஸ்பீக்கர் கொண்ட சவுண்டு சிஸ்டம், 64 வண்ணங்கள் அடங்கிய ஆம்பியன்ட் லைட், வெண்டிலேஷன், ஹீட்டிங் மற்றும் மசாஜ் உள்ளிட்ட வசதிக் கொண்ட இருக்கை என ஏகப்பட்ட லக்சூரி அம்சங்களை இந்த காரில் மெர்சிடிஸ் வழங்கி இருக்கின்றார். இதுமட்டுமில்லைங்க, ஸ்டார் ஹோட்டல்களில் காணப்படக் கூடிய அம்சங்கள் பலவற்றை மேபேக் ஜிஎல்எஸ் 600 நைட் எடிசன் தாங்கியிருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.
இந்த காரில் எஞ்சின் பொருத்த வரை 4.0 லிட்டர் ட்வின் டர்போசார்ஜட் வி8 மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 550 பிஎச்பி மற்றும் 770 என்எம் டார்க்கை வெளியேற்றும். இந்த காரில் 48 வோல்ட் ஹைபிரிட் சிஸ்டமும் வழங்கப்பட்டு இருக்கின்றது. 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸே இந்த காரில் வழங்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனைச் செய்த காரணத்தினால் இந்த காரை நாட்டில் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் குறைவாகவே இருக்கின்றது. இதனாலேயே இந்த காரை வைத்திருப்போர்கள் தனித்துவமாக தெரிகின்றனர். இந்த மாதிரியான காரிலேயே நடிகர் தற்போது மும்பை நகர சாலையை வலம் வர தொடங்கி இருக்கின்றார்.


Click it and Unblock the Notifications








