பணம் கொழுகொழுனு கொழுத்திருந்தா மட்டுமே இப்படி பண்ண முடியும்.. மேபேக் காரை மட்டும் 4யூனிட்டுகள் வச்சிருக்காரு!
வீட்டில் ட்வின்ஸ் குழைந்தகள் இருப்பதைப் போல ஒரு நடிகரின் வீட்டில் மெர்சிடிஸ் மேபேக் (Mercedes Maybach) கார் மாடலின் நான்கு யூனிட்டுகள் பயன்பாட்டில் இருப்பது தெரிய வந்திருக்கின்றது. அந்த நடிகர் வேறு யாருமில்லைங்க, பல முன்னணி இந்தி திரைப்படங்களில் நடித்த ஷாகித் கபூர்-தான் அவர் ஆவார். இந்த நடிகரே மேபேக் கார் மாடலின் நான்கு யூனிட்டுகளை வைத்திருக்கின்றார். இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மிக மிக விலை உயர்ந்த கார் மாடல்களில் மெர்சிடிஸ் மேபேக் ஒன்றாகும்.
எஸ்யூவி (SUV), செடான் (Sedan) ஆகிய இரண்டு ரகங்களிலும் மேபேக் கிடைக்கின்றது. இந்த இரண்டு வெர்ஷன்களையும் நடிகர் ஷாகித் கபூர் வைத்திருக்கின்றார். இதன் வாயிலாக மேபேக் கார் மாடலின் தீவிர காதலர் ஷாகித் கபூர் என்பது தெரிய வந்திருக்கின்றது. இந்த கார் மாடலின் ஒரு யூனிட்டை வாங்கவே நமக்கு நாக்கு தள்ளிவிடும் என்பது கவனிக்கத்தகுந்தது.

அந்த அளவிற்கு மிக மிக அதிக விலையிலேயே மெர்சிடிஸ் மேபேக் சொகுசு கார் மாடல் நாட்டில் விற்பனைச் செய்யப்படுகின்றது. மெர்சிடிஸ் மேபேக்-கின் செடான் வெர்ஷனான எஸ்580 (S580) மாடலையே ஷாகித் கபூர் முதன் முதலில் வாங்கி இருக்கின்றார். இந்த கொள்முதல் 2022 ஆம் ஆண்டிலேயே அரங்கேறி இருக்கின்றது.
பிரிஸ்டைன் ஒயிட் (Pristine White) நிறத்தால் இந்த கார் மாடல் அலங்கரிக்கப்பட்டு இருக்கும். இதன் மதிப்பு ரூ. 2.5 கோடிக்கும் அதிகம் ஆகும். இந்த காரை வாங்கிய அதே 2022 ஆம் ஆண்டிலேயே மினுமினுக்கும் கருப்பு (Black) நிறத்தால் அலங்கரிக்கப்பட்ட மற்றுமொரு மேபேக் கார் மாடலையும் அவர் வாங்கினார்.
நடிகரின் இந்த செயல் தன்னுடைய செல்வாக்கையும், அந்தஸ்தையும் வெளியுலகிற்கு மிக உறுதியாக எடுத்துக் காட்டும் வகையில் அமைந்தது. இதை உறுதிப்படுத்தும் விதமாகவே அடுத்த 2023 ஆம் ஆண்டிலேயே மற்றும் ஓர் மெர்சிடிஸ் மேபேக் சொகுசு கார் மாடலை ஷாகித் கபூர் வாங்கினார்
இந்த முறை டீப் மெட்டாலிக் எமரால்டு கிரீன் (Deep Metallic Emerald Green) எனும் பிரத்யேக நிறத்தால் அலங்கரிக்கப்பட்டு இருந்த ஜிஎல்எஸ் 600 மாடலையே அவர் வாங்கினார். இது ஓர் எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். இந்த காரை ஷாகித் கபூரின் மனைவி மீரா கபூரே டெலிவரி பெற்றார்.
இந்த வீடியோகூட அப்போது இணையத்தில் மிக சிறப்பாக டிரெண்டாகியது. இதற்கு அடுத்தபடியாக நான்காவதாக மெர்சிடிஸ் மேபேக் ஜிஎல்எஸ் 600 நைட் சீரிஸ்ஸையும் அவர் வாங்கி இருக்கின்றார். இந்த கார் கொள்முதல் மிக மிக சமீபத்திலேயே அரங்கேறியது என்பது கவனிக்கத்தகுந்தது. தற்போது இந்த புதிய காரிலேயே நடிகர் ஷாகித் கபூர் பயணித்து வருகின்றார்.
இது சிறப்பு பதிப்பு என்பதால் விலையும் சற்று அதிகமாக உள்ளது. ரூ. 4.4 கோடிக்கும் அதிகமான விலையிலேயே இந்த கார் நாட்டில் விற்கப்படுகின்றது. விலையில் மட்டுமல்ல ஷாகித் கபூர் வைத்திருக்கும் மற்ற மேபேக் கார் மாடல்களைக் காட்டிலும் மிக அதிக கவர்ச்சி மற்றும் மிக அதிக தொழில்நுட்பம் மற்றும் மிக அதிக ஆடம்பர அம்சங்களைத் தாங்கியதாகவும் இந்த பதிப்பு இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மிக அதிக விலைக் கொண்ட மேபேக் காரை நான்கு யூனிட்டுகளை நடிகர் ஷாகித் கபூர் வைத்திருப்பு அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. குறிப்பாக, பாலிவுட் திரை உலகையே இவரின் இந்த செயல் திரும்பி பார்க்கச் செய்யும் வகையில் அமைந்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications








