ஷாருக்கான் பரிசளித்த மெர்சிடிஸ் பென்ஸ் காரில் காதலி உடன் ஊர்சுற்றும் சல்மான் கான்..!!
ஷாருக்கான் பரிசளித்த மெர்சிடிஸ் பென்ஸ் காரில் காதலி உடன் ஊர்சுற்றும் சல்மான் கான்..!!
திரையுலகில் உச்சத்தில் இருக்கும் நடிகர்கள் இரண்டு பேர், எதிரெதிர் துருவங்களாக இருப்பார்கள் என கருதுவது ரசிகர்களின் மனநிலை. ஆனால் நடிகர்கள் தங்களுக்குள் நட்புடன் தான் எப்போதும் பழகிக்கொள்வர்.

இதை நாம் தமிழ்சினிமா தொடங்கி பல்வேறு மொழி திரையுலகில் பார்த்துள்ளோம். இந்தியாவில் பாலிவுட் திரையுலகத்தில் சக நடிகர்களுடன் நட்பாக இருப்பது அதிகமாக உள்ளது.

குறிப்பாக சல்மான் கான் ஷாருக்கான் இருவருக்கும் இடையில் பனிப்போர் உள்ளது என்று சொல்லும் போது எல்லாம் அவர்கள் இருவரும் நட்புடன் தான் வெளி உலகில் பழகுவார்கள்.

அதை மீண்டும் மெய்பிக்கும் விதமாக சமீபத்தில் சல்மான் கானுக்கு, பாலிவுட் பாட்ஷாவான ஷாருக்கான் புதிய மாடல் மெர்சிடிஸ் பென்ஸ் காரை பரிசாக வழங்கியுள்ளார்.

சல்மான் கான் நடித்து சமீபத்தில் வெளியான இந்தியில் வெளியான டூப்லைட் படத்தில் ஷாருக்கான் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.

அதேபோல ஷாருக் அடுத்ததாக ஆனந்த் எல்.ராய் இயக்கும் படத்தில் நடிக்கிறார். அதில் சல்மான் கான் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.

இதற்கான அன்பை வெளிப்படுத்தும் விதமாகத்தான் சல்மான் கானுக்கு ஷாருக்கான் இந்த புதிய மாடல் மெர்சிடிஸ் பென்ஸ் காரை பரிசாக வழங்கியுள்ளார் என்று தகவல்கள் கிடைக்கின்றன.

ரா-ஒன் படத்தில் ரஜினி கௌரவ வேடத்தில் நடித்த போது கூட, அவருக்கு பரிசாக புதிய மாடல் பிஎம்டபுள்யூ காரை ஷாருக்கான் அவருக்கு பரிசாக அளித்தார்.

ஆனால் அதை வேண்டாம் எனக்கூறி ரஜினி வாங்க மறுத்துவிட்டார். ஆனால் சல்மான் அப்படி இல்லாமல், ஷாருக் அளித்த மெர்சிடிஸ் பென்ஸ் காரை வாங்கிக்கொண்டார்.

மும்பை நகரத்திற்குள் எங்கு சென்றாலும் ஷாருக்கான் பரிசளித்த மெர்சிடிஸ் பென்ஸ் காரையே சல்மான் பயன்படுத்துவதாக தகவல்கள் கிடைக்கின்றன.

கடந்த வியாழக்கிழமை அன்று சல்மான் கான் நடிகை சோனாக்ஷி சின்ஹா உடன் இந்த புதிய மெர்சிடிஸ் பென்ஸ் காரில் ஜாலி ரைட் சென்றார்.

அப்போது சோனாக்ஷி உடன் சல்மானின் காதலி என்று கூறப்படும் வெளிநாட்டு பெண்ணான லுலியா வெண்டாரும் உடனிருந்தார்.

இதற்கான புகைப்படங்கள் வெளியானதை தொடர்ந்து ஷாருக் வழங்கிய இந்த கார் சல்மான் அதிகமாக நேசிப்பதாக சொல்லப்படுகிறது.

ஓம் சாந்தி ஓம் படத்திற்கு பிறகு பாலிவுட்டின் வசூல் மன்னர்களான ஷாருக் மற்றும் சல்மான் அடுத்தடுத்து படங்களில் இணைந்து நடித்து வருவது நல்ல தொடக்கத்திற்கான புதிய அத்தியாயமாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications