16 லட்ச ரூபாயில் பைக்... ஷாரூக்கானின் பரிசை பார்த்து மெர்சலாகி போன நடிகர்!! ஹோம் டெலிவிரி

சுஸுகி ஹயபுஸா (Suzuki Hayabusa), இந்தியாவில் விலையுயர்ந்த சுஸுகி சூப்பர்பைக். நீண்ட வருடங்களாக, உலகின் பல நாடுகளில் விற்பனை செய்யப்பட்டுவரும் பைக். இந்தியாவில் சினிமா பிரபலங்களில் இருந்து, அரசியல்வாதிகள் வரையில் இந்த சூப்பர் பைக்கை வைத்துள்ளனர். குறிப்பாக, இந்தி சினிமா நட்சத்திரங்கள் ஹயபுஸாவை போட்டி போட்டு வாங்கி வருகின்றனர். இந்த நிலையில், இந்தியாவின் முன்னணி நடிகர் ஒருவர் வேறொரு நடிகருக்கு சுஸுகி ஹயபுஸா பைக்கை பரிசளித்துள்ளார். யார் அந்த நடிகர்கள் என்பதையும், ஹயபுஸா பைக்கை பற்றிய கூடுதல் விபரங்களையும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பாலிவுட் சினிமா வட்டாரத்தில் அவ்வப்போது புது, புது வாகனங்களை வாங்குவார்கள் என்பதை பார்த்திருக்கிறோம். அதிலிலும் அவர்கள் வாங்கும் வாகனங்கள் யாவும் கோடிகளில் விலையுயர்ந்தவையாக இருக்கின்றன. மோட்டார்சைக்கிள் என்றால் கூட பல இலட்சங்கள் கொடுத்து வாங்கவே பாலிவுட் ஸ்டார்கள் விரும்புகின்றனர். இந்த வகையில் சமீபத்தில், பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் புதியதாக சுஸுகி ஹயபுஸா பைக்கை பெற்றுள்ளார்.

shahrukh khan gifts suzuki hayabusa

தூம் திரைப்படத்தில் நடித்து இந்தியா முழுவதும் பிரபலமாகியவர் ஜான் ஆபிரகாம் ஆவார். மற்ற நடிகர்களை போன்று இவரிடமும் லக்சரி கார்கள் நிறைய உள்ளன என்றாலும், கார்களை காட்டிலும் விலையுயர்ந்த பைக்குகளை வாங்கவே நடிகர் ஜான் ஆபிரகாம் விரும்புகிறார். அதாவது, இவர் ஒரு பைக் பிரியர் ஆவார். இவரை நிறைய முறை விலையுயர்ந்த பைக்குகளில் தான் வெளியில் பார்த்துள்ளோம்.

யமஹா வி-மேக்ஸ், ஹோண்டா சிபிஆர்1000ஆர்.ஆர்-ஆர், யமஹா ஒய்.இசட்.எஃப்-ஆர்1, டுகாட்டி பனிகளே, எம்வி அகுஸ்டா எஃப்3 800, பிஎம்டபிள்யூ எஸ்1000ஆர்.ஆர் உள்பட ஏகப்பட்ட சூப்பர் பைக்குகள் நடிகர் ஜான் ஆபிரகாமிடம் உள்ளன. இந்த வரிசையில், கடந்த 2023ஆம் ஆண்டில் நடிகர் ஜான் ஆபிரகாம் புதியதாக சுஸுகி ஹயபுஸா பைக் ஒன்றை வாங்கினார். இது அந்த சமயத்தில் செய்திகளில் வைரலானது.

shahrukh khan gifts suzuki hayabusa

ஆனால், ஹயபுஸா பைக்கை நான் வாங்கவில்லை, நடிகர் ஷாரூக்கான் அந்த பைக்கை எனக்கு பரிசளித்தார் என சமீபத்திய ஒரு டிவி நேர்காணலில் நடிகர் ஜான் ஆபிரகாம் தெரிவித்துள்ளார். விரைவில் திரைக்குவர உள்ள வேதா திரைப்படத்திற்கான விளம்பரத்திற்காக தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நேர்காணலில் கலந்துக் கொண்ட நடிகர் ஜான் ஆபிரகாம், மோட்டார்சைக்கிள்கள் மீதான தனது ஆர்வத்தை கூறிக் கொண்டிருந்த சமயத்தில் தனது ஹயபுஸா பைக்கை பற்றி கூறினார்.

பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் ஷாரூக்கானும், ஜான் ஆபிரகாமும் இணைந்து பதான் என்கிற திரைப்படத்தில் நடித்து இருந்தனர். கடந்த ஆண்டில் திரைக்குவந்த பதான் திரைப்படத்தில் ஜான் ஆபிரகாமின் நடிப்பு சிறப்பாக இருந்தது. பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் ஈட்டிய பதான் திரைப்படம் இந்தியாவில் அதிக வசூலை ஈட்டிய திரைப்படங்களுள் ஒன்றாக உள்ளது.

shahrukh khan gifts suzuki hayabusa

இந்த திரைப்படத்தின் வெற்றி விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடிகர் ஷாரூக்கான் சுஸுகி ஹயபுஸா பைக்கை நடிகர் ஜான் ஆபிரகாமுக்கு பரிசளித்துள்ளார். சுஸுகி ஹயபுஸா பைக்கின் இந்திய எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.16.91 லட்சமாக உள்ளது. இந்த பைக்கில் பொருத்தப்படும் 1,340சிசி, இன்-லைன் 4-சிலிண்டர் என்ஜின் அதிகப்பட்சமாக 190 பிஎஸ் மற்றும் 150 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

நடிகர் ஜான் ஆபிரகாமிடம் இந்த சுஸுகி சூப்பர்பைக் மெட்டாலிக் மேட் ஸ்வார்ட் மற்றும் கேண்டி டாரிங் ரெட் நிறங்களில் உள்ளது. ஹயபுஸா பைக்கின் பாகங்கள் வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்டு, ஹரியானாவில் உள்ள சுஸுகி இந்தியா நிறுவனத்தின் தொழிற்சாலையில் முழு பைக்காக உருவாக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நடிகர் ஜான் ஆபிரகாமிடம் உள்ள பைக்குகளை வைத்து ஒரு ஷோரூமையே நடத்தலாம். இருப்பினும், சுஸுகி ஹயபுஸா என தொடர்ந்து புது, புது பைக்குகளை வாங்கிக் கொண்டிருக்கிறார். இந்த பைக்கை ஷாரூக்கான் பரிசளித்துள்ளார் என்றாலும், பரிசு பொருள் என்ன வேண்டும் என கேட்டதற்கு புதிய பைக் வேண்டும் என ஜான் ஆபிரகாம் கூறியுள்ளார்.

More from DriveSpark

Article Published On: Friday, August 23, 2024, 11:50 [IST]
English summary
Sharukh khan gifts suzuki hayabusa superbike to actor john abraham
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X