இப்படியொரு காட்சியில் நடித்திருக்க கூடாது!! 31 வருடங்களுக்கு பின் இப்போது வருத்தப்படும் ஷாருக்கான்...

இளம் நடிகராக சினிமாவில் வளர்ந்துவந்த சமயத்தில் செய்த தவறுக்கு இப்போது நடிகர் ஷாருக்கான் வருத்தப்பட்டு டுவிட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அப்படி என்ன தவறை அப்போது ஷாருக்கான் செய்தார்? அது தற்போது எந்த அளவிற்கு ஆபத்தானதாக விளங்குகிறது? என்பதை இனி பார்க்கலாம்.

சினிமாவில் இன்று முன்னணி நடிகர், நடிகையாக இருக்கும் பலர் ஆரம்ப காலக்கட்டத்தில் நடிக்கும்போது சில பல தவறுகளை செய்திருக்கலாம். அவற்றுள் சில விஷயங்கள் பொது உலகிற்கு தெரியவந்து இருக்கலாம். ஆனால் சில விஷயங்கள் தெரியமாலேயே அவர்களுக்குள் மறைந்து இருக்கும்.

shahrukh khan regrets for not wearing helmet

சில சினிமா நட்சத்திரங்கள், பின்னர் காலத்தில் மனம் பொறுக்காமல் அவற்றை வெளியே கூறிய நிகழ்வுகளை இதற்குமுன் பார்த்துள்ளோம். அந்த வரிசையில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் ஷாருக்கான் பிரபலமான தீவானா திரைப்படத்தில் நடித்தப்போது, ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டுவதுபோல் நடித்ததற்கு இப்போது வருத்தம் தெரிவித்துள்ளார்.

நடிகர் ஷாருக்கான் இளம் நடிகராக பாலிவுட் சினிமாவில் வளர்ந்து வந்த சமயத்தில், 1992இல் வெளியான இந்த திரைப்படத்திற்கு மிக பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. நம் தமிழ்நாட்டில் கூட தீவானா திரைப்படத்தை பலர் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். இவ்வாறான பிரபலமான திரைப்படம் குறித்த பதிவுகள் சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்களால் அவ்வப்போது பதிவிடப்படுவது வழக்கம் தானே.

shahrukh khan regrets for not wearing helmet

அந்த வகையில் சமீபத்தில் நெட்டிசன் ஒருவர் தீவானா படத்தின் சில நிமிட காட்சிகளை டுவிட்டரில் ஷாருக்கானை மென்ஷன் செய்து பதிவிட்டு, தீவானா திரைப்படம் வெளியாகி 31 வருடக்களானதை நினைவுக்கூர்ந்தார். அந்த நபர் பதிவிட்ட வீடியோவில், தீவானா படத்தில் நண்பர்களுடன் ஷாருக்கான் மோட்டார்சைக்கிள்களில் செல்லும் காட்சி இருந்தது. அதாவது, ஷாருக்கான் மற்றும் அவரது நண்பர்களாக நடித்திருந்தவர்கள் ஆளாளுக்கு ஒரு பைக்கில் மகிழ்ச்சியுடன் பாட்டு பாடியவாறே பயணிப்பதுபோல் அந்த காட்சி அமைந்திருக்கும்.

ஆனால், ஷாருக்கான் உள்பட எவரொருவரும் ஹெல்மெட் அணிந்திருக்க மாட்டார்கள். கேமராவில் முகம் தெரிவதற்காக அவ்வாறு இந்த காட்சி காட்சிப்படுத்தப்பட்டு இருக்கலாம். நெட்டிசனின் இந்த தீவானா திரைப்பட காட்சி அடங்கிய டுவிட்டர் பதிவை கண்ட ஷாருக்கான், "ஹெல்மெட்டை பயன்படுத்த வேண்டும்" என பதிலளித்துள்ளார். ஷாருக்கானிடம் இருந்து இவ்வாறான ஒரு பதிவை நிச்சயமாக அந்த நபர் எதிர்பார்த்திருக்க மாட்டார்.

இரு சக்கர வாகனம் ஓட்டும்போது ஹெல்மெட் மிக மிக அவசியமான ஒன்றாகும். ஏனெனில் இந்தியா சாலை விபத்துகள் அதிகம் நடக்கக்கூடிய ஒன்றாக உள்ளதை மறந்துவிட வேண்டும். மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடு என்பதால், சாலையில் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகம். இதனால் இந்திய சாலைகளில் எப்போது எது நடக்கும் என்றே சொல்ல முடியாது. இதனாலேயே தற்கால திரைப்படங்களில் முடிந்தவரையில் ஹெல்மெட் அணிந்தவாறு பைக் ஓட்டும் காட்சிகளை வைக்க முயற்சிக்கின்றனர்.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: 31 வருடங்களுக்கு முன்னர் ஹெல்மெட் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள் அவ்வளவாக இல்லை. இதனால் இவ்வாறு நடித்துள்ளாரே என ஷாருக்கானை நம்மால் கண்டித்து கொள்ள முடியாது. தான் செய்தது தவறுதான், நீங்களாவது ஹெல்மெட் அணிந்து பைக் ஓட்டுங்கள் என ஷாருக்கான் கூறுவதை பாராட்டியாக வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 28, 2023, 12:01 [IST]
English summary
Shahrukh khan regrets for not wearing helmet in deewana movie
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+