பாலிவுட் பாதுஷா ஷாரூக்கானின் கார் கலெக்ஷன்

ஹூண்டாய் நிறுவனத்தின் விளம்பர தூதராக இருந்து வரும் ஷாரூக்கான், தனது டான்-2 படத்தில் சொனாட்டா மற்றும் சான்டா பீ எஸ்யூவியை பயன்படுத்தியிருப்பார். இதேபோன்று, ரா.ஒன் படத்தில் வோக்ஸ்வேகன் பீட்டில் மற்றும் டூரக் எஸ்யூவி ஆகிய கார்கள் முக்கிய காட்சிகளில் வருவது போன்று படமாக்கியிருப்பார்.
படங்களிலேயே கார்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஷாரூக்கான் நிஜ வாழ்க்கையிலும் கார்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கமாலா இருப்பார். அவரது ஷெட்டை ஏராளமான கார்கள் அலங்கரிக்கின்றன. பெரும்பாலும் ஷாரூக்கான் தனது தனிப்பட்ட உபயோகத்துக்காக அதிகம் பயன்படுத்துவது பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் கார்தான். பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் காரும் உள்ளது.
தனது குழந்தைகள் சென்று வருவதற்காக ஆடி ஏ6 காரை வைத்துள்ளார். இதுதவிர, ரோல்ஸ் ராய்ஸ் பான்டம் மற்றும் கான்டினென்டல் ஜிடி ஆகிய ஆடம்பர கார்களும் இருக்கின்றன. எஸ்யூவி கார்கள் மீது உள்ள ஆவலில் டொயோட்டோ லேண்ட் க்ரூஸர் மற்றும் மிட்சுபிஷி பஜெரோ ஆகிய பிரிமியம் எஸ்யூவிக்களையும் வைத்திருக்கிறார்.
ஓய்வுநேரங்களில் இந்த எஸ்யூவிக்களில் பயணம் சென்று வருவது அவருக்கு ரொம்பவும் பிடிக்குமாம். ஷாரூக்கானின் கார் ஆசை இத்தோடு நின்று விடவில்லை. தனது படங்கள் வெற்றி பெற்றால் அதில் நடிக்கும் சக நடிகர்கள், முக்கிய பங்காற்றிய இயக்குனர், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் சொகுசு கார்களை பரிசளிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
ஓம் சாந்தி ஓம் பட இயக்குனர் பாராகானுக்கு அவர் மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு காரை வாங்கி பரிசு கொடுத்தார். இதேபோன்று, ரா.ஒன் படத்தில் பணியாற்றியவர்களுக்கும் பிஎம்டபிள்யூ சொகுசு கார்களை வாங்கி பரிசு கொடுத்தார். இந்த படத்தில் கவுரவ தோற்றத்தில் நடித்ததற்காக ஷாரூக்கான் பரிசாக கொடுத்த பிஎம்டபிள்யூ காரை சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அன்புடன் மறுத்துவிட்டார் என்பது குறி்ப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








