நடிகர் ஷாரூக்கான் கார் விற்பனைக்கு ஃபேஸ்புக்கில் விளம்பரம்... உண்மை என்ன?

Written By:

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் பிஎம்டபிள்யூ கார் பிரியர் என்பது அறிந்ததே. தன்னுடன் படங்களில் பணியாற்றுபவர்களுக்கு விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ சொகுசு கார்களை வாங்கி பரிசளிப்பதும் அவரது வழக்கம். நடிகர் ரஜினிகாந்திற்கு கூட அவர் பிஎம்டபிள்யூ காரை பரிசளிக்க முயன்றதும், அதனை ரஜினி அன்போடு மறுத்ததும் நினைவிருக்கலாம்.

To Follow DriveSpark On Facebook, Click The Like Button
நடிகர் ஷாரூக்கான் கார் விற்பனைக்கு ஃபேஸ்புக்கில் விளம்பரம்... உண்மை என்ன?

இந்த நிலையில், ஷாருக்கானிடம் சொந்தமாக பல பிஎம்டபிள்யூ சொகுசு கார்கள் உள்ளன. அதில், அவர் கடந்த, 2011ம் ஆண்டு வாங்கி பயன்படுத்தி வந்த ஒரு பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் சொகுசு காரை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாக ஃபேஸ்புக் மூலமாக விளம்பரம் செய்யப்பட்டு இருக்கிறது.

நடிகர் ஷாரூக்கான் கார் விற்பனைக்கு ஃபேஸ்புக்கில் விளம்பரம்... உண்மை என்ன?

அஷு பாஷா என்ற புரோக்கர், நடிகர் ஷாரூக்கான் காரை விற்பனை செய்வதற்கு தனது ஃபேஸ்புக் பக்கம் மூலமாக விளம்பரம் கொடுத்து இருக்கிறார். கார் வாங்கி விற்பதில் அஷு பாஸிற்கு அனுபவம் இல்லை என்ற நிலையில், அவர் செய்துள்ள இந்த விளம்பரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் ஷாரூக்கான் கார் விற்பனைக்கு ஃபேஸ்புக்கில் விளம்பரம்... உண்மை என்ன?

நடிகர் ஷாருக்கான் பயன்படுத்திய அந்த பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் கார் 2011ம் ஆண்டு மும்பை ஆர்டிஓ அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. எம்எஎச் 02 சிஎல் 0555 என்ற பதிவு எண் கொண்டதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. காரின் படங்களும், பதிவு அட்டையும் அந்த விளம்பரத்தில் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

Recommended Video
Tata Nexon Review: Specs
நடிகர் ஷாரூக்கான் கார் விற்பனைக்கு ஃபேஸ்புக்கில் விளம்பரம்... உண்மை என்ன?

நடிகர் ஷாரூக்கான் தினசரி பயன்பாடுகளுக்கு இந்த காரையே அதிகம் பயன்படுத்தி இருக்கிறார். பாலிவுட் விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளின்போது இந்த காரிலேயே வருவதை வழக்கமாக வைத்திருந்ததால், பத்திரிக்கை கேமராக்காரர்களின் கண்களில் அதிகம் தென்பட்ட கார் என்ற பெருமையும் இதற்கு உண்டு.

நடிகர் ஷாரூக்கான் கார் விற்பனைக்கு ஃபேஸ்புக்கில் விளம்பரம்... உண்மை என்ன?

இந்த நிலையில், இந்த கார் ரூ.38 லட்சம் விலையில் விற்பனைக்கு இருப்பதாக அந்த விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரை வாங்கும் வாடிக்கையாளர் ஷாரூக்கானை நேரடியாக சந்திக்கும் வாய்ப்பும் கிட்டும் என்றும் விளம்பரம் செய்யப்பட்டு இருந்தது.

நடிகர் ஷாரூக்கான் கார் விற்பனைக்கு ஃபேஸ்புக்கில் விளம்பரம்... உண்மை என்ன?

இந்த நிலையில், இந்த விளம்பரம் போலியானது என்று நடிகர் ஷாரூக்கானின் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டு இருப்பதாக முன்னணி பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டு இருக்கிறது. இந்த கார் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், ஷாரூக்கான் தரப்பில் இருந்து இதுவரை நேரடி தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை.

நடிகர் ஷாரூக்கான் கார் விற்பனைக்கு ஃபேஸ்புக்கில் விளம்பரம்... உண்மை என்ன?

நடிகர் ஷாரூக்கான் கார்களிலேயே பல ஆண்டுகளாக உருண்டு புரள்கிறார். அவருக்கு நெருக்கமான பல கார் புரோக்கர்களிடம் கண் அசைத்தால் போதும். கார் வினாடியில் வியாபாரம் ஆகிவிடும். இந்த நிலையில், அபு பாஷாவுக்கு கார் குறித்த விபரங்கள் கிடைத்தது எப்படி என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

நடிகர் ஷாரூக்கான் கார் விற்பனைக்கு ஃபேஸ்புக்கில் விளம்பரம்... உண்மை என்ன?

இந்த பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் கார் இடவசதிக்கும், சொகுசு அம்சங்களுக்கும் பெயர் போனது. இந்த காரில் 326 பிஎச்பி பவரையும், 450 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. இந்த பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் கார் ரூ. 1.20 கோடி மதிப்பு கொண்டது.

Via- Cartoq, DNA

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Is Shahrukh Khan's BMW Car For Sale?
Story first published: Wednesday, August 16, 2017, 8:11 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos