இவர்கிட்ட இருக்கும் பணத்துக்கு பிராண்ட்-நியூ காரையே வாங்கி இருக்கலாமே! செகண்ட்-ஹேண்ட் காரில் உலா வரும் நடிகை
லேண்ட் ரோவர் (Land Rover) நிறுவனத்தின் ரேஞ்ச் ரோவர் (Range Rover) மற்றும் டிஃபெண்டர் (Defender) கார்களை போலவே, ஜாகுவார் (Jaguar) கார்களும் சினிமா நட்சத்திரங்கள் மத்தியில் பிரபலமானவை ஆக விளங்குகின்றன. சினிமா பிரபலங்கள் மட்டுமின்றி விஐபிகள் பலரும் 'ஜாகுவார்' என்கிற காரின் பெயருக்காகவே ஈர்க்கப்பட்டவர்களாக உள்ளனர். அந்த வகையில் இங்கு ஒரு பிரபல நடிகை ஜாகுவார் காரில் உணவகம் ஒன்றிற்கு வந்துள்ளார். ஒரு காலத்தில் ரெனால்ட் கேப்ச்சர் (Renault Captur) போன்ற விலை குறைவான காரை பயன்படுத்திய இந்த நடிகை தற்போது விலையுயர்ந்த ஜாகுவார் காரை பயன்படுத்தும் அளவிற்கு வளர்ந்துள்ளார்.
பொது வெளியில் சினிமா நட்சத்திரங்களின் அடையாளமே அவர்களின் விலையுயர்ந்த கார்கள் ஆகும். அதாவது, பயன்படுத்தும் கார்களை பொறுத்தே சினிமா பிரபலங்களின் செல்வாக்கை மக்கள் தீர்மானிக்கின்றனர். இதனாலேயே சினிமாவில் நுழைந்ததும் பட வாய்ப்பை பெறுகிறோமோ இல்லையோ, எப்படியாவது சொகுசு கார் ஒன்றை வாங்க முயற்சிக்கின்றனர்.

ஆனால், அர்ஜூன் ரெட்டி (Arjun Reddy) திரைப்படத்தின் மூலமாக பிரபலமாகிய நடிகை ஷாலினி பாண்டே (Shalini Pandey) அவர்கள் அவரது சினிமா வாழ்க்கையின் துவக்கத்தில் சற்று விலை குறைவான ரெனால்ட் கேப்ச்சர் காரை தான் பயன்படுத்திக் கொண்டிருந்தார். இதனாலேயே அந்த சமயங்களில் ஷாலினி பாண்டேவை நடிகை என நினைக்காமல் ரசிகர்கள் கடந்து சென்ற நிகழ்வுகள் கூட நடந்துள்ளன.
2017இல் நடிகர் விஜய் தேவரக்கொண்டாவின் நடிப்பில் தெலுங்கில் வெளியான 'அர்ஜூன் ரெட்டி' திரைப்படத்தின் மூலமாக சினிவாவில் அறிமுகமாகினார், நடிகை ஷாலினி பாண்டே. முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் என்பதால், உடனடியாகவே நடிகை ஷாலினி பாண்டேவுக்கு பாலிவுட்டில் இருந்து எல்லாம் திரைப்பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. இன்னும் சொல்லப்போனால், ஷாலினி பாண்டேவின் நடிப்பில் வெளியான 2வது திரைப்படம் இந்தியில் எடுக்கப்பட்டது ஆகும்.

அதனை தொடர்ந்து, தெலுங்கில் பழம்பெரும் நடிகை சாவித்ரி மற்றும் நடிகர் என்.டி.ஆரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து கவனத்தை ஈர்த்தார். ஆனால், தமிழில் இதுவரையில் 2 திரைப்படங்களில் மட்டுமே நடித்துள்ளார். அவை இரண்டும் 2019இல் வெளிவந்தவை ஆகும். 3வது தமிழ் திரைப்படமாக, நடிகர் தனுஷின் இயக்கத்தில் உருவாகிவரும் 'இட்லி கடை' திரைப்படத்தில் நடிகை ஷாலினி பாண்டே நடித்து வருகிறார்.
இந்த நிலையில்தான், மும்பையின் அந்தேரி பகுதியில் ஓர் உணவகத்திற்கு வெளியே தோழி உடன் நடிகை ஷாலினி பாண்டே தனது ஜாகுவார் காரில் காட்சி தந்துள்ளார். இவர் வைத்திருப்பது, ஜாகுவார் எஃப்-பேஸ் ஆர் ஸ்போர்ட் (F-Pace R Sport) என்கிற சொகுசு எஸ்யூவி கார் ஆகும். இந்த காரை யூஸ்டு-கார் மார்க்கெட்டில் இருந்து ஷாலினி பாண்டே வாங்கியதாக கூறப்படுகிறது.

இது பிராண்ட்-நியூ கார் கிடையாது என்றாலும், ஒரு சமயத்தில் இவர் பயன்படுத்திய ரெனால்ட் கேப்ச்சர் காருடன் ஒப்பிடுகையில் இது பல மடங்கு விலையுயர்ந்த கார் ஆகும். ஏற்கனவே ஒருவர் பயன்படுத்தியதை வாங்குவதால், நடிகை ஷாலினி பாண்டேவுக்கு அதிக செலவு இருந்திருக்காது. ஜாகுவார் எஃப்-பேஸ் காரின் விலைமிக்க ஆர் ஸ்போர்ட் வேரியண்ட்டான இதனை கிளாசிக்கான வெள்ளை நிறத்தில் ஷாலினி பாண்டே வைத்துள்ளார்.
விற்பனையில் இருந்த சமயத்தில் இந்த ஜாகுவார் காரின் விலை ஆனது ரூ.1.51 கோடியாக இருந்தது. அதேபோல், நடிகை ஷாலினி பாண்டே முன்பு பயன்படுத்திய ரெனால்ட் கேப்ச்சர் காரும் தற்சமயம் இந்தியாவில் விற்பனையில் இல்லை. விற்பனையில் இருந்த சமயத்தில் இந்த ரெனால்ட் காரின் விலைகள் ரூ.15.78 லட்சம் வரையில் இருந்தன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அர்ஜூன் ரெட்டி திரைப்படம் வெளியான போது இருந்த நடிகை ஷாலினி பாண்டேவுக்கும், இப்போது இருக்கும் ஷாலினி பாண்டேவுக்குமே நிறைய வித்தியாசங்கள் இருக்கும்போது அவர் பயன்படுத்தும் கார் மட்டும் இத்தனை வருடங்கள் தாண்டியும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்க முடியாது. நடிகை ஷாலினி பாண்டே மட்டுமில்லாமல், சினிமா பிரபலங்கள் விலையுயர்ந்த கார்களை செகண்ட்-ஹேண்டில் வாங்க விரும்புவதன் காரணம் என்னவென்று தெரியவில்லை.


Click it and Unblock the Notifications









