தலையே சுத்துது... ஷமியோட ஒரு காரின் விலையே இவ்ளோ வருதா! உண்மை என்னனு தெரிஞ்சா ஆடி போயிருவீங்க!
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் இன்று ஒரு சேர உச்சரித்து கொண்டுள்ள ஒரு பெயர் முகமது ஷமி (Mohammed Shami). தற்போது நடைபெற்று வரும் ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை (ICC Cricket World Cup) தொடரில், முகமது ஷமி எண்ணற்ற சாதனைகளை (Records) படைத்து வருகிறார்.
பேட்டிங்கில் ஒரு பக்கம் விராட் கோஹ்லி (Virat Kohli), மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் (Sachin Tendulkar) சாதனைகளை தகர்த்து கொண்டிருக்க, மறுபக்கம் பவுலிங்கில் முகமது ஷமி பல்வேறு புதிய சாதனைகளை படைத்து கொண்டுள்ளார். குறிப்பாக நியூசிலாந்து (New Zealand) அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் (Semi-final Match), முகமது ஷமியின் பந்து வீச்சில் அனல் பறந்தது.

இந்த போட்டியில் மொத்தம் 7 விக்கெட்களை கைப்பற்றி ஆட்ட நாயகன் விருதை (Man Of The Match) முகமது ஷமி தட்டி சென்றார். இதற்காக ரசிகர்கள் பலரும் முகமது ஷமிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வரும் இந்த நேரத்தில், அவரது கார் (Car) மற்றும் பைக் (Bike) கலெக்ஸன் (Collection) குறித்த சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
ஜாகுவார் எஃப்-டைப் (Jaguar F-Type): இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஜாகுவார் எஃப்-டைப் காரின் ஆரம்ப விலை (Price) 99.98 லட்ச ரூபாயாக உள்ளது. அதாவது கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய். அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 1.53 கோடி ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

2.0 லிட்டர் 4 சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் (Petrol) மற்றும் 5.0 லிட்டர் வி8 சூப்பர்சார்ஜ்டு பெட்ரோல் என 2 இன்ஜின் ஆப்ஷன்கள் இந்த காரில் வழங்கப்படுகின்றன. இதில் முகமது ஷமியிடம் இருப்பது, 2.0 லிட்டர் இன்ஜின் பொருத்தப்பட்ட வேரியண்ட் (Variant) ஆகும்.
அதிகபட்சமாக 295 பிஹெச்பி பவர் மற்றும் 400 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 249 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த கார் சீறிப்பாய்ந்து செல்லும்.

பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் என்ற வேகத்தை வெறும் 5.7 வினாடிகளிலேயே இந்த கார் எட்டி விடும். முகமது ஷமியின் பந்து வீச்சை போலவே, ஜாகுவார் எஃப்-டைப் காரின் செயல்திறனிலும் அனல் பறக்கும் என்பதை இந்த எண்கள் மூலம் நாம் தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.
பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் (BMW 5 Series): ஜாகுவார் எஃப்-டைப் தவிர, பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் கார் ஒன்றும் முகமது ஷமியிடம் உள்ளது. தற்போதைய நிலையில் 68.90 லட்ச ரூபாய் என்ற விலையில் இந்த கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுவும் எக்ஸ் ஷோரூம் விலைதான் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner): இது இந்தியர்களுக்கு நன்கு தெரிந்த எஸ்யூவி (SUV) கார் ஆகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டொயோட்டா ஃபார்ச்சூனர் காரின் ஆரம்ப விலை 33.43 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 51.44 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது. இதுவும் எக்ஸ் ஷோரூம் விலைதான்.
ராயல் என்பீல்டு கான்டினென்டல் ஜிடி 650 (Royal Enfield Continental GT 650): மேற்கண்ட விலை உயர்ந்த கார்கள் மட்டுமல்லாது, ராயல் என்பீல்டு கான்டினென்டல் ஜிடி 650 பைக் ஒன்றும், முகமது ஷமியிடம் உள்ளது. இந்த பைக்கில், 647 சிசி பேரலல் ட்வின் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக 47 பிஹெச்பி பவர் மற்றும் 52 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் 3.19-3.45 லட்ச ரூபாய் வரையிலான விலைகளில் இந்த பைக் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: முகமது ஷமியின் பவுலிங்கை போலவே, அவரது வாகன கலெக்ஸனும் அசத்தலாகதான் இருக்கிறது. தென் ஆப்ரிக்கா (South Africa) அல்லது ஆஸ்திரேலியாவுடன் (Australia) நடைபெறவுள்ள இறுதி போட்டியில் (Final Match) முகமது ஷமி விக்கெட் வேட்டை நடத்தவும், வரும் காலங்களில் இன்னும் நிறைய வாகனங்களை வாங்கி குவிக்கவும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் வாழ்த்துக்கள்.


Click it and Unblock the Notifications









