விலை உயர்ந்த ஆடி சொகுசு காரை வாங்கிய பிரபல நடிகரின் மகள்... எவ்ளோனு தெரிஞ்சா ஸ்டண் ஆயிருவீங்க!
பிரபல நடிகரின் மகள் ஒருவர் விலை உயர்ந்த ஆடி சொகுசு காரை வாங்கியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஆடி க்யூ7 (Audi Q7). இது சொகுசு எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்தியாவின் பிரபலங்கள் பலர் ஆடி க்யூ7 காரை வைத்துள்ளனர். ஆடி க்யூ7 காரின் உரிமையாளர்கள் பட்டியலில், பாலிவுட் நடிகை ஷனாயா கபூரும் (Shanaya Kapoor) தற்போது இணைந்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகரான சஞ்சய் கபூரின் (Sanjay Kapoor) மகள்தான், ஷனாயா கபூர் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஆடி க்யூ7 காரின் ஆரம்ப விலை 79.99 லட்ச ரூபாயாக உள்ளது. அதே சமயம் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 88.33 லட்ச ரூபாயாக இருக்கிறது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். ஆன் ரோடு விலை இன்னும் கூடுதலாக வரும்.

ஆடி க்யூ7 காரில், 3.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் 48V மைல்டு-ஹைப்ரிட் தொழில்நுட்பத்தையும் இந்த கார் பெற்றுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 340 பிஎஸ் பவரையும், 500 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன், 8 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

ஆடி க்யூ7 காரில் தற்போது டீசல் இன்ஜின் தேர்வு வழங்கப்படுவதில்லை. இருப்பினும் க்யூ7 காரில் ஆடி நிறுவனம் தனது க்வாட்ரோ ஆல்-வீல் டிரைவ்வை (Quattro All-wheel drive) ஸ்டாண்டர்டாக வழங்குகிறது. பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை இந்த கார் வெறும் 5.9 வினாடிகளில் எட்டி விடும்.

அதே நேரத்தில் இந்த காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 250 கிலோ மீட்டர்கள் ஆகும். ஆடி க்யூ7 காரில் மொத்தம் 5 டிரைவிங் மோடுகள் வழங்கப்படுகின்றன. டைனமிக், எஃபிசியண்ட், இன்டிவிஜ்யூவல், ஆட்டோ மற்றும் கம்ஃபோர்ட் என மொத்தம் 5 டிரைவிங் மோடுகளை ஆடி க்யூ7 கார் பெற்றுள்ளது. ஆடி க்யூ7 காரின் போட்டியாளர்களின் பட்டியல் பெரியது.

பிஎம்டபிள்யூ எக்ஸ்5 (BMW X5), வால்வோ எக்ஸ்சி90 (Volvo XC90), மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ (Mercedes-Benz GLE), லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் வெலார் (Land Rover Range Rover Velar), லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் (Land Rover Discovery Sport) மற்றும் ஜாகுவார் எஃப்-பேஸ் (Jaguar F-Pace) உள்ளிட்ட கார்களுடன் ஆடி க்யூ7 போட்டியிட்டு வருகிறது.

ஆடி க்யூ7 காரின் முன் பகுதியில் பெரிய க்ரில் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. அதை சுற்றிலும் க்ரோம் காணப்படுகிறது. அத்துடன் ஆடி க்யூ7 காரில், தனித்துவமான ஹெட்லேம்ப் மற்றும் டெயில்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன. விலை உயர்ந்த தயாரிப்பு என்பதால், ஆடி நிறுவனம் க்யூ7 காரில் ஏராளமான வசதிகளை வழங்கியுள்ளது.

இதன்படி ஸ்பீடு லிமிட்டர் உடன் க்ரூஸ் கண்ட்ரோல், லேன் டிபார்ச்சர் வார்னிங், 360 டிகிரி பார்க்கிங் கேமரா, பனரோமிக் சன்ரூஃப், B&O பிரீமியம் சவுண்ட் சிஸ்டம், ஆடியின் விர்ச்சூவல் காக்பிட், ஆம்பியண்ட் லைட்டிங், 4 ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஆடி க்யூ7 சொகுசு எஸ்யூவி ரக கார் பெற்றுள்ளது.

பொதுவாக திரைப்பட நடிகர், நடிகைகள் என்றாலே விலை உயர்ந்த கார்களை வாங்குவது என்பது வாடிக்கையான ஒரு நிகழ்வுதான். குறிப்பாக ஆடி நிறுவனத்தின் கார்களுக்கு திரையுலகில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. ஆடி நிறுவனத்தின் கார்களை பொறுத்தவரை, நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், க்யூ7 கார் மிகவும் பிரபலமான ஒரு தயாரிப்பு ஆகும்.

இந்தியாவில் ஆடி க்யூ7 காரை செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் வாங்கிய பிரபலங்களும் கூட இருக்கின்றனர். திரையுலகினர் மட்டுமல்லாது, விளையாட்டு துறையை சேர்ந்தவர்களும், குறிப்பாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலரும் நிறைய ஆடி கார்களை சொந்தமாக வைத்துள்ளனர். இதற்கு விராட் கோஹ்லி மிகச்சிறந்த உதாரணம்.


Click it and Unblock the Notifications








