சினிமா உலகையே கைக்குள்ள வெச்சிருக்க குடும்பத்து பொண்ணா இது! கொஞ்சம் கூட பந்தாவே இல்லாம சாதாரண கார்ல வர்றாங்க!

இந்தியாவின் முன்பெல்லாம் ஆடி (Audi), பிஎம்டபிள்யூ (BMW) மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz) போன்ற ஜெர்மனி நிறுவனங்களின் சொகுசு கார்களைதான் திரையுலக நட்சத்திரங்கள் மிக அதிகமாக வாங்கி கொண்டிருந்தனர். தற்போதும் வாங்குகின்றனர்தான். ஆனால் கூடவே இந்தியாவை சேர்ந்த மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தின் கார்களையும் திரையுலக நட்சத்திரங்கள் அதிகமாக வாங்க தொடங்கியுள்ளனர். குறிப்பாக மஹிந்திரா எக்ஸ்யூவி 700 (Mahindra XUV 700) மற்றும் மஹிந்திரா தார் (Mahindra Thar) ஆகிய கார்களுக்கு எல்லாம், திரையுலக ஸ்டார்கள் மத்தியில் நல்ல வரவேற்பு காணப்படுகிறது.

இந்த வரிசையில் பிரபல நடிகை ஒருவர் தற்போது மஹிந்திரா எக்ஸ்யூவி 700 காரை வாங்கியுள்ளார். அத்துடன் அவர் அந்த காரை பயன்படுத்தும் வைரல் வீடியோவும் (Viral Video) சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. யூடியூப் (YouTube) தளத்தில் இந்த வைரல் வீடியோ பதிவிடப்பட்டுள்ளது.

Shanaya Kapoor Spotted In Mahindra XUV 700

இந்த வைரல் வீடியோவில் நாம் பார்ப்பது ஷனாயா கபூர் (Shanaya Kapoor) ஆவார். இவர் பாலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக உள்ளார். அத்துடன் பாலிவுட் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சஞ்சய் கபூரின் (Sanjay Kapoor) மகள் என்ற அடையாளமும், ஷனாயா கபூருக்கு உள்ளது.

தற்போது வைரலாக பரவி வரும் வீடியோ, ஷனாயா கபூர் மஹிந்திரா எக்ஸ்யூவி 700 காரில் ஜிம்மிற்கு வந்து இறங்கியபோது எடுக்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மஹிந்திரா எக்ஸ்யூவி 700 காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 13.99 லட்ச ரூபாயாக உள்ளது.

Mahindra XUV 700

அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 25.74 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். மஹிந்திரா எக்ஸ்யூவி 700 காரில் மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்படுகின்றன. அவை 2.0 லிட்டர் mStallion டர்போ பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் mHawk டர்போ டீசல் ஆகியவை ஆகும்.

இந்த சக்தி வாய்ந்த இன்ஜின் ஆப்ஷன்களுடன், பல்வேறு அதிநவீன வசதிகளும் மஹிந்திரா எக்ஸ்யூவி 700 காரில் வழங்கப்படுகின்றன. இதில், தலா 10.25 இன்ச் அளவில் வழங்கப்பட்டுள்ள டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் போன்றவை எல்லாம் மிகவும் முக்கியமானவை ஆகும்.

இவை தவிர, ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்கள், ஆட்டோமேட்டிக் வைப்பர்கள், முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள், ட்யூயல் ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், 12 ஸ்பீக்கர்கள் உடன் கூடிய சோனி சவுண்ட் சிஸ்டம், 70 வசதிகளுடன் கூடிய கனெக்டட் கார் தொழில்நுட்பம் போன்ற வசதிகளும் இந்த காரில் உள்ளன.

இவற்றுடன் பனரோமிக் சன்ரூஃப் மற்றும் அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) பாதுகாப்பு தொகுப்பு ஆகிய வசதிகளும் மஹிந்திரா எக்ஸ்யூவி 700 காரில் இடம்பெற்றுள்ளன. இது போன்ற காரணங்களால்தான் தற்போது திரையுலக நட்சத்திரங்களும் மஹிந்திரா எக்ஸ்யூவி 700 காரை அதிகளவில் வாங்க தொடங்கியுள்ளனர்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் டாடா சஃபாரி (Tata Safari), டாடா ஹாரியர் (Tata Harrier), எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் (MG Hector Plus) மற்றும் ஹூண்டாய் அல்கஸார் (Hyundai Alcazar) ஆகிய கார்களுக்கு எல்லாம், மஹிந்திரா எக்ஸ்யூவி 700 மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக கருதப்படுகிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி 700 சற்று விலை உயர்ந்த கார்தான். ஆனால் திரையுலக நட்சத்திரங்களை பொறுத்தவரையில் இது மிகவும் எளிமையான ஒரு காராகவே கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக பாலிவுட் திரையுலகில் ஆதிக்கம் செலுத்தும் கபூர் குடும்பத்திற்கு இது நிச்சயம் மிகவும் எளிமையான ஒரு காராகவே இருக்கும்.

நடிகை ஷனாயா கபூரின் தந்தை சஞ்சய் கபூர், பாலிவுட் திரை உலகின் முக்கிய நபர்களாக கருதப்பட்டு வரும் தயாரிப்பாளர் போனி கபூர் (Boney Kapoor) மற்றும் நடிகர் அனில் கபூரின் (Anil Kapoor) சகோதரர் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 19, 2025, 17:25 [IST]
English summary
Shanaya kapoor spotted in mahindra xuv 700 viral video all details here
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+