எங்கயோ பாத்த மாரியே இருக்கே! 4 கோடி ரூபா காரை வாங்கனது அவரா! உத்து பாத்ததுக்கு அப்புறம்தான் அடையாளம் தெரியுது!
மலையாள திரையுலகில் மிகவும் பிரபலமாக உள்ள நடிகர்களில் ஒருவர் ஷான் நிகம் (Shane Nigam). இவர் கடந்த 2023ம் ஆண்டு வெளியாகி வசூலை வாரி குவித்த ஆர்டிஎக்ஸ் (RDX: Robert Dony Xavier) படத்தில் நடித்தவர். இந்த திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த 'நீல நிலவே' பாடல், பட்டி தொட்டி எங்கும் 'ஹிட்' அடித்தது.
இந்த சூழலில், ஷான் நிகம் தற்போது புத்தம் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். அது மெர்சிடிஸ்-மேபெக் ஜிஎல்எஸ் 600 (Mercedes-Maybach GLS 600) ஆகும். இந்தியாவில் தற்போதைய நிலையில் மெர்சிடிஸ்-மேபெக் ஜிஎல்எஸ் 600 காரின் எக்ஸ்-ஷோரூம் விலையே (Ex-showroom Price) 2.96 கோடி ரூபாயாக இருக்கிறது. ஆன்-ரோடு விலை (On-Road Price) சுமார் 3.70 கோடி ரூபாய் என்ற அளவில் வரும். இவ்வளவு விலை உயர்ந்த காரை வாங்கியுள்ள நடிகர் ஷான் நிகமிற்கு, ரசிகர்கள் சமூக வலை தளங்கள் மூலமாக தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மெர்சிடிஸ்-மேபெக் ஜிஎல்எஸ் 600 காரில், 4.0 லிட்டர் பெட்ரோல் (Petrol) இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 550 பிஹெச்பி பவர் மற்றும் 730 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த இன்ஜின் உடன் 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டமும் வழங்கப்பட்டுள்ளது. இது தனியாக 21 பிஹெச்பி பவர் மற்றும் 250 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது. பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை இந்த கார் வெறும் 4.9 வினாடிகளில் எட்டி விடும்.

அதே நேரத்தில் இந்த காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 250 கிலோ மீட்டர்களாக உள்ளது. செயல்திறன் மிக்க இந்த காரில் சொகுசு வசதிகளுக்கும் பஞ்சமில்லை. இதில், பனரோமிக் சன்ரூஃப், மசாஜ் மற்றும் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய சாய்வு இருக்கைகள், நப்பா லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும். மெர்சிடிஸ்-மேபெக் ஜிஎல்எஸ் 600 காரானது, பிரபல மனிதர்கள் விரும்பி வாங்க கூடிய ஒன்றாக உள்ளது. தமிழ் திரையுலகை பொறுத்தவரையில், நயன்தாரா (Nayanthara) இந்த காரை வைத்துள்ளார். இதுதவிர வேறு சில பிரபலங்களும் கூட, மெர்சிடிஸ்-மேபெக் ஜிஎல்எஸ் 600 காரை வைத்துள்ளனர்.
இதில், தீபிகா படுகோனே, டாப்ஸி, கீர்த்தி சனோன், ரகுல் ப்ரீத் சிங், ராம் சரண், ஷாகித் கபூர், அர்ஜூன் கபூர் மற்றும் ஆயுஷ்மான் குர்ரானா போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். இதுதவிர கிரிக்கெட் வீரர்கள் சிலரிடமும் கூட மெர்சிடிஸ்-மேபெக் ஜிஎல்எஸ் 600 கார் இருக்கிறது.
பெங்களூரில் (Bangalore) கனமழை எச்சரிக்கைக்கு (Severe Rainfall Alert) மத்தியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB - Royal Challengers Bengaluru) அணிக்கு எதிரான ஐபிஎல் (IPL - Indian Premier League) போட்டியில் களமிறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK - Chennai Super Kings) வீரரான ரஹானே குறிப்பிடத்தக்கவர் ஆவார்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மெர்சிடிஸ்-மேபெக் ஜிஎல்எஸ் 600 காரானது, சொகுசு எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது. ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன், பென்ட்லீ பென்டைகா மற்றும் மஸராட்டி லாவன்டே போன்ற கார்களுக்கு இது மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.


Click it and Unblock the Notifications








